முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மகாராஷ்டிராவில் ஒருவர் மரணம்: புனேயில் ஜி.பி.எஸ். நோய் பாதிப்பு 101 ஆக உயர்வு

திங்கட்கிழமை, 27 ஜனவரி 2025      இந்தியா
china 2025-01-04

Source: provided

புனே : மகாராஷ்டிராவில் ஒருவர் மரணமடைந்துள்ள நிலையில் புனேயில் ஜி.பி.எஸ். நோய் பாதிப்பு 101 ஆக உயர்ந்துள்ளது.

மகாராஷ்டிரா மாநிலம் புனே நகரில் கடந்த சில நாட்களாக 'கில்லியன் பேர் சிண்ட்ரோம்' (ஜிபிஎஸ்) என்ற ஆட்டோ இம்யூன் நோய் பாதிப்பு திடீரென அதிகரித்து வருகிறது. மனித உடலின் நோய் எதிர்ப்பு மண்டலம் தவறுதலாக உடலின் ஆரோக்கியமான செல்களை தாக்குவது 'ஆட்டோ இம்யூன்' நோய் என்று அழைக்கப்படுகிறது. 

இத்ததைகய நோய்களில் கில்லியன் பேர் சிணட்ரோம் ஒன்றாகும். இந்த நோய் தசைகளை இயக்கும் நரம்புகளில் பாதிப்பை ஏற்படுத்துகிறது. இதனால் கை, கால் தசைகள் வலுவிழக்கும். முதலில் மதமதப்பு போல் தொடங்கி பின்னர் தசை செயல் இழப்பு வரை செல்லக்கூடும். மேலும் உணவு, தண்ணீரை உட்கொள்வதில் சிக்கல் ஏற்படும். பேசுவதிலும் சிரமம் உருவாகும். உயர் ரத்த அழுத்தம் போன்றவை ஏற்பட்டு மோசமான பாதிப்பாக பக்கவாதம் கூட ஏற்படும்.

புனேவில் கடந்த சில நாட்களில் மட்டும் 70-க்கும் மேற்பட்டோர் இந்த நோயால் பாதிக்கப்பட்டனர். இதில் 14 பேர் வெண்டிலேட்டர் உதவியுடன் செயற்கை சுவாசம் மூலம் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்நிலையில் புனேவில் மேலும் சிலருக்கு ஜி.பி.எஸ். பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் ஜி.பி.எஸ். பாதிப்புக்கு உள்ளானவர்களின் எண்ணிக்கை 101 ஆக உயர்ந்துள்ளது.

அதில் 14 பேர் செயற்கை சுவாசம் மூலம் சிகிச்சை பெற்று வருகின்றனர். பாதிக்கப்பட்டவர்களின் 19 பேர் 50 முதல் 80 வயதுக்குட்பட்டவர்கள். இந்நிலையில் சோளாப்பூரில் ஜி.பி.எஸ். நோய் அறிகுறியுடன் சிகிச்சை பெற்று வந்த ஒருவர் இறந்துள்ளார். இந்நிலையில் புனேயில் ஜி.பி.எஸ். நோய் பாதிக்கப்பட்டவர்களுக்கு இலவச சிகிச்சை அளிக்கப்படும் என துணை முதல்-மந்திரி அஜித்பவார் தெரிவித்துள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 5 days ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 5 days ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 8 months 5 days ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 10 months 5 days ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 10 months 5 days ago
View all comments

வாசகர் கருத்து