முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

நாட்டிலேயே முதல் மாநிலம்: பொது சிவில் சட்டம் : உத்தரகாண்டில் அமல்

திங்கட்கிழமை, 27 ஜனவரி 2025      இந்தியா
Pushkar-Singh-Dhami 2025-01

Source: provided

டேராடூன் : நாட்டிலேயே முதல் மாநிலமாக உத்தரகாண்டில் பொது சிவில் சட்டம் அமலானது.

பாஜக ஆளும் உத்தரகாண்டில் பொது சிவில் சட்டம் அமலுக்கு வந்துள்ளது. இதன் மூலம் சுதந்திர நாட்டில் பொது சிவில் சட்டம் அமல்படுத்தப்பட்ட முதல் மாநிலமாக உத்தரகாண்ட் மாறியிருக்கிறது. உத்தரகாண்ட் முதல்வர் புஷ்கர் சிங் தாமி, பொது சிவில் சட்டத்தின் அரசாணையை வெளியிட்டதோடு, பொது சிவில் சட்ட விதிகளை அறிமுகப்படுத்தி, பொது சிவில் சட்டம் நடைமுறைக்கு வந்தது தொடர்பான இணையதளத்தையும் தொடங்கி வைத்தார்.

மாநிலத்தின் மிக முக்கிய நிகழ்ச்சி, முதல்வர் தாமியின் அதிகாரபூர்வ இல்லமான முக்ய சேவக் சதன் அரங்கில் நடைபெற்றது. இதில், உத்தரகாண்ட் அமைச்சர்கள் மற்றும் பல மூத்த அதிகாரிகள் பங்கேற்றனர். அப்போது பேசிய முதல்வர் புஷ்கர் சிங் தாமி, உத்தரகாண்ட் மாநிலத்தில் பொது சிவில் சட்டம் அமல்படுத்தப்பட்டிருப்பது, எந்தவொரு மதத்தினரையும் குறிவைத்து அல்ல, இது அனைத்து மோசமான பழக்க வழக்கங்களையும் முடிவுக்கு கொண்டுவருவதற்கான ஒரு சட்ட கருவியாகும்.

பொது சிவில் சட்டம் பெண்களுக்கு எதிரான சமத்துவமற்ற நிலையை முடிவுக்குக் கொண்டுவரும், குழந்தைகளின் உரிமைகளைப் பாதுகாக்கும் என்றும் உறுதியளித்துள்ளார். உத்தரகாண்ட் மாநிலத்தில் பொது சிவில் சட்டம் அமலுக்கு வந்திருப்பதால், பலதார மணம், ஹவாலா நடைமுறைகளுக்கு தடை விதிக்கப்படும். அனைத்து மதத்தினருக்கும் ஒரே சட்டம் பொருந்தும் என்பதால், பலதார மணம் ஒழிக்கப்படுவதோடு, பெண்களுக்கு சொத்தில் சம உரிமைக்கும் வழி வகுக்கப்படும் என்று கூறப்படுகிறது.

திருமணம், விவாகரத்து, தத்தெடுப்பு, வாரிசுரிமை ஆகிய விவகாரங்களில் ஒவ்வொரு மதத்திலும் தனித்தனி சட்டங்கள் பின்பற்றப்படுகின்றன. இதை மாற்றி, அனைத்து மதத்தினரும் ஒரே சட்டத்தைப் பின்பற்றும் வகையில் நாடு முழுவதும் பொது சிவில் சட்டத்தை கொண்டுவர மத்திய பாஜக அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. அந்த வகையில்தான், உத்தரகாண்டில் கடந்த 2022-இல் நடந்த பேரவைத் தோ்தலின்போது, மாநிலத்தில் பாஜக மீண்டும் ஆட்சி அமைத்தால், பொது சிவில் சட்டம் அமல்படுத்தப்படும் என்று வாக்குறுதி அளித்திருந்தது. இத்தோ்தலில் பாஜக வெற்றி பெற்று ஆட்சியைத் தக்கவைத்த நிலையில், தற்போது பொது சிவில் சட்டத்தை அமல்படுத்தியிருக்கிறது.

முன்னதாக, மாநில சட்டப்பேரவையில் பொது சிவில் சட்ட மசோதா கடந்த ஆண்டு பிப்ரவரியில் நிறைவேற்றப்பட்டது. பின்னா், சட்ட அமலாக்கத்துக்கான விதிகள் மற்றும் ஒழுங்குமுறைகளை வகுக்க முன்னாள் தலைமைச் செயலா் சத்ருஹன் சிங் தலைமையில் நிபுணா் குழு அமைக்கப்பட்டது. இக்குழு தனது அறிக்கையை சமா்ப்பித்த நிலையில், நேற்று முதல் உத்தரகாண்ட் மாநிலத்தில் பொது சிவில் சட்டம் அமல்படுத்தப்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 5 days ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 5 days ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 8 months 5 days ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 10 months 5 days ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 10 months 5 days ago
View all comments

வாசகர் கருத்து