முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மொழிப்போர் தியாகிகளுக்கு சிலைகள்- முதல்வருக்கு திருமாவளவன் நன்றி

திங்கட்கிழமை, 27 ஜனவரி 2025      தமிழகம்
Thirumavalavan 2023-09-26

Source: provided

சென்னை : மொழிப்போர் தியாகிகளை நடராசன், தாளமுத்துவுக்கு சிலை நிறுவப்படும் என்று முதலமைச்சர் அறிவித்ததற்கு விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் நன்றி தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து திருமாவளவன் தனது எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது:- விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் வேண்டுகோளை ஏற்று மொழிப்போர் ஈகியர், நடராசன், தாளமுத்து இருவருக்கும் உருவச் சிலைகள் எழுப்பப்படும் என அறிவித்துள்ள தமிழக முதல்வருக்கு மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம். 1937 ஆம் ஆண்டு அன்றைய சென்னை மாகாண அரசு பள்ளிகளில் கட்டாயம் இந்தி படிக்க வேண்டும் என்ற ஆணையைப் பிறப்பித்தது. அதை எதிர்த்து பகுத்தறிவுப் பகலவன் தந்தை பெரியார் தலைமையில் மிகப் பெரிய போராட்டம் வெடித்தது.

அந்தப் போராட்டத்தில் பங்கேற்றுக் கைது செய்யப்பட்டு, சிறைப்படுத்தப்பட்ட மாவீரன் நடராசன் 1939 ஆம் ஆண்டு சனவரி 15 ஆம் நாள் சிறையிலேயே உயிர்நீத்தார். அவரைத் தொடர்ந்து 1939 மார்ச் மாதம் 11 ஆம் நாள் தாளமுத்துவும் சிறையிலேயே உயிரிழந்தார். நடராசனின் இறுதி ஊர்வலமும், தாளமுத்துவின் இறுதி ஊர்வலமும் பேரறிஞர் அண்ணா தலைமையில் நடைபெற்றது. தாளமுத்துவை அடக்கம் செய்துவிட்டு மூலக் கொத்தளம் இடுகாட்டில் உரையாற்றிய பேரறிஞர் அண்ணா அவர்கள் " விடுதலைப் பெற்ற தமிழ்நாட்டில் பெரியாரை நடுவில் வைத்து இறந்த இரு மணிகளையும் பக்கத்தில் வைத்து உருவச் சிலை எழுப்ப வேண்டும்" எனக் குறிப்பிட்டார்.

இதுவரையிலும் செயல் வடிவம் பெறாமலிருந்த பேரறிஞர் அண்ணாவின் அறிவிப்பைத்தான் விடுதலைச் சிறுத்தைகள் சார்பில் முன் வைத்தோம். தமிழுக்கும் தமிழ்நாட்டுக்கும் உழைத்தவர்களைப் பெருமைப்படுத்திவரும் முதல்வர் மு.க.ஸ்டாலின் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் வேண்டுகோளை ஏற்று மொழிப்போர் ஈகியர் நடராசன், தாளமுத்து ஆகியோருக்குச் சிலை எழுப்பிச் சிறப்பு சேர்ப்பது பாராட்டுக்குரியது.

பேரறிஞர் அண்ணா அறிவித்தவாறு அந்தச் சிலைகளைத் தந்தை பெரியார் சிலையோடு சேர்த்து நிறுவ வேண்டும் எனக் கேட்டுக்கொள்கிறோம். 1965 ஆம் ஆண்டு சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் இந்தி எதிர்ப்புப் போராட்டத்தில் போலிஸாரின் துப்பாக்கிச் சூட்டில் பலியான இராசேந்திரனின் நினைவு நாள் நேற்று ( 27.01.2025). முத்தமிழறிஞர் கலைஞர் முதலமைச்சராக இருந்தபோது அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தின் நுழைவு வாயிலில் அவருக்குச் சிலை எழுப்பியுள்ளார்.

அந்தச் சிலையின் பீடத்தை மேம்படுத்தி அழகுபடுத்த வேண்டுமென்றும், அவரை அடக்கம் செய்த பரங்கிப்பேட்டையில் இராசேந்திரனுக்கு நினைவு மண்டபம் ஒன்றை எழுப்பி அவரது ஈகத்தைப் பெருமைப்படுத்த வேண்டுமென்றும் தமிழக முதல்வரை கேட்டுக்கொள்கிறோம். இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 6 days ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 6 days ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 8 months 6 days ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 6 days ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 10 months 6 days ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 10 months 6 days ago
View all comments

வாசகர் கருத்து