முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

நடிகர் தனுஷ் வழக்கை நிராகரிக்க கோரிய மனு ஐகோர்ட்டில் தள்ளுபடி

செவ்வாய்க்கிழமை, 28 ஜனவரி 2025      தமிழகம்
chennai-high-court 2025-01-01

Source: provided

சென்னை: ரூ.10 கோடி இழப்பீடு கேட்டு நடிகர் தனுஷின் ஒண்டர்பார் நிறுவனம் தாக்கல் செய்த வழக்கை நிராகரிக்க கோரி நெட்ப்ளிக்ஸ் நிறுவனம் தரப்பில் தாக்கல் செய்த மனுவை தள்ளுபடி செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

நடிகை நயன்தாரா திருமண ஆவணப்படத்தில், ‘நானும் ரவுடிதான்’படப்பிடிப்பு காட்சிகளை பயன்படுத்தியதற்கு எதிர்ப்பு தெரிவித்து, ரூ.10 கோடி இழப்பீடு கேட்டு, நடிகர் தனுஷின் ஒண்டர்பார் நிறுவனம் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தது. நடிகை நயன்தாரா, இயக்குநர் விக்னேஷ்சிவன் மற்றும் தங்களது நிறுவனத்துக்கு எதிராக தொடரப்பட்டுள்ள இந்த வழக்கை ஆரம்ப கட்டத்திலேயே நிராகரிக்க கோரி நெட்ப்ளிக்ஸ் சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது.

இந்த மனு நீதிபதி அப்துல் குத்தூஸ் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது நெட்ப்ளிக்ஸ் சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் பார்த்தசாரதி, “திரைப்படத்தில் இடம்பெறாத படப்பிடிப்பு காட்சிகளுக்கு ஒண்டர்பார் நிறுவனம் பதிப்புரிமை கோர முடியாது. ஆவணப்படம் வெளியான ஒரு வாரம் கழித்து தான் தனுஷ் தரப்பில் வழக்கு தொடரப்பட்டது. எனவே, இந்த வழக்கை ஆரம்ப கட்டத்திலேயே தள்ளுபடி செய்ய வேண்டும்” என்று வாதிட்டார்.

இதற்கு தனுஷின் ஒண்டர்பார் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் பி.எஸ்.ராமன், “நானும் ரவுடிதான் படத்தில் படத்தில் பயன்படுத்தப்பட்ட அந்த காட்சிகள் படப்பிடிப்பு தளத்தில் எடுக்கப்பட்டவை. நயன்தாரா ஒப்பந்தம் செய்யும் போது அவர் செய்துள்ள சிகை அலங்காரம், உடை அலங்காரத்தில் இருந்து அனைத்தும் நிறுவனத்துக்கே சொந்தமானது. இதையெல்லாம் ஒப்புக்கொண்டு தான் ஒப்ந்தத்தில் கையெழுத்திட்டார்.  படம் தொடர்பாக அனைத்து காட்சிகளும் ஒண்டர்பார் நிறுவனத்துக்கு சொந்தமானது. எனவே, இது காப்புரிமை சட்டத்துக்கு பொருந்தும்” என்று வாதிட்டார்.

அனைத்து தரப்பு வாதங்களும் நிறைவடைந்த நிலையில், இந்த வழக்கில்  நேற்று உத்தரவு பிறப்பித்த நீதிபதி அப்துல் குத்தூஸ், ஒண்டர்பார் நிறுவனத்தின் வழக்கை நிராகரிக்க வேண்டும் என நெட்ப்ளிக்ஸ் தாக்கல் செய்த வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார். மேலும், ஒண்டர்பார் நிறுவனத்தின் தரப்பில் தனுஷ் தாக்கல் செய்த உரிமையியல் வழக்கின் விசாரணையை பிப்ரவரி 5-ம் தேதிக்கு தள்ளிவைத்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 6 days ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 6 days ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 8 months 6 days ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 6 days ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 10 months 6 days ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 10 months 6 days ago
View all comments

வாசகர் கருத்து