முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஐ.எஸ்.ஐ.எஸ். ஆதரவாளர்களை கண்டறிய தமிழகத்தில் 16 இடங்களில் என்.ஐ.ஏ. திடீர் சோதனை

செவ்வாய்க்கிழமை, 28 ஜனவரி 2025      தமிழகம்
NIA 2024-04-06

Source: provided

சென்னை:  ஐ.எஸ்.ஐ.எஸ். தீவிரவாத அமைப்பின் சித்தாந்தத்தை ஊக்குவிப்பவர்களை கண்டறியும் நோக்கில் தமிழகத்தில் 16 இடங்களில் தேசிய புலனாய்வு அமைப்பு(என்.ஐ.ஏ.) நேற்று (ஜன.28) சோதனை நடத்தியது.  

ஐ.எஸ்.ஐ.எஸ். அமைப்பின் சித்தாந்தத்தை ஊக்குவிப்பது மற்றும் ஆட்களை சேர்ப்பது ஆகியவற்றில் ஈடுபடும் சந்தேக நபர்களின் மறைவிடங்களில் என்.ஐ.ஏ. நேற்று காலை முதல் சோதனைகளை நடத்தி வருகிறது. தமிழ்நாட்டில் மொத்தம் 16 இடங்களில் இந்த சோதனைகள் நடத்தப்பட்டு வருகின்றன. சந்தேக நபர்கள் தொடர்பாக கிடைத்த தகவல்களின் அடிப்படையில் இந்த சோதனைகள் நடத்தப்பட்டு வருகின்றன.

இந்த சோதனைகள், இது தொடர்பான ஆதாரங்களை கண்டுபிடிப்பதை நோக்கமாகக் கொண்டவை என நடவடிக்கைக்கு நெருக்கமான வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. ஐ.எஸ்.ஐ.எஸ். ஆதரவாளர்கள் மீது கடந்த ஆண்டு வழக்குப்பதிவு செய்து அவர்களிடம் விசாரணை நடத்தப்பட்டது. விசாரணையில், அவர்களின் பங்கு வெளிப்பட்டது.

கடந்த ஆண்டு அக்டோபர் 21-ம் தேதி, தமிழ்நாட்டின் கோயம்புத்தூரில் நிகழ்ந்த கார் குண்டுவெடிப்பு வழக்கில், ஐ.எஸ்.ஐ.எஸ்.-ஆல் ஈர்க்கப்பட்ட மூன்று குற்றவாளிகளை என்.ஐ.ஏ. கைது செய்தது. அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில், மூன்று குற்றவாளிகளும் பயங்கரவாதச் செயலுக்கு நிதி வழங்க கூட்டுச் சேர்ந்தது தெரியவந்தது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 6 days ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 6 days ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 8 months 6 days ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 6 days ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 10 months 6 days ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 10 months 6 days ago
View all comments

வாசகர் கருத்து