முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

வேங்கைவயல் வழக்கில் அறிவியல் பூர்வ சோதனைக்கு பிறகே குற்றப்பத்திரிகை தாக்கல்: தமிழக அரசு

செவ்வாய்க்கிழமை, 28 ஜனவரி 2025      தமிழகம்
Tamilnadu-Assemble 2024-12-02

Source: provided

மதுரை: வேங்கைவயல் வழக்கில், அறிவியல் பூர்வ சோதனைக்கு பிறகே குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது என்று உயர்நீதிமன்ற மதுரை கிளையில் அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

புதுக்கோட்டை மாவட்டம் வேங்கைவயல் கிராமத்தில், குடிநீர் தொட்டியில் மனிதக்கழிவு கலந்த விவகாரம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. விசாரித்த சி.பி.சி.ஐ.டி., போலீசார், சம்பவம் நடந்து 2 ஆண்டுகள் கழிந்த நிலையில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தனர். இதில், அதே ஊரை சேர்ந்த மூன்று பேர் மீது குற்றம் சாட்டப்பட்டது. ஆளும் கட்சியின் கூட்டணி கட்சிகளான வி.சி.க., மார்க்சிஸ்ட் கட்சியினரே இதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். வழக்கை சி.பி.ஐ., விசாரிக்க வேண்டும் என்ற கோரிக்கையும் வலுத்துள்ளது.

இந்நிலையில், இது தொடர்பான வழக்கு உயர்நீதிமன்ற மதுரை கிளையில் விசாரணைக்கு வந்தது. அப்போது அரசு தரப்பில் அரசு தலைமை வக்கீல் ஹசன் முகமது ஜின்னா ஆஜராகி விரிவான அறிக்கை தாக்கல் செய்து வாதிட்டார்.

அப்போது இந்த வழக்குக்கு இருவருக்குள் ஏற்பட்ட தனி மனித பிரச்னை தான் காரணம். அரசியல் காழ்ப்புணர்ச்சி எதுவும் கிடையாது. வழக்கில் அறிவியல் பூர்வ சோதனைக்கு பிறகே குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது. வழக்கில் மொத்தம் 389 சாட்சிகள் விசாரிக்கப்பட்டனர். 196 மொபைல் போன்கள் பறிமுதல் செய்யப்பட்டன. அவற்றில் இருந்த படங்கள், வீடியோக்கள், உரையாடல்கள் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டன. சுற்று வட்டாரப்பகுதியில் 87 டவர் லொகேஷனில் ஆய்வு செய்து புள்ளி விவரம் எடுக்கப்பட்டது. குரல் மாதிரி, புகைப்படங்கள் வீடியோக்கள் சேகரிக்கப்பட்டன. இவற்றின் மூலம் கிடைத்த தகவல்கள் அடிப்படையில் தான் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது.இவ்வாறு அரசு தலைமை வக்கீல் வாதிட்டார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 6 days ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 6 days ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 8 months 6 days ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 6 days ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 10 months 6 days ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 10 months 6 days ago
View all comments

வாசகர் கருத்து