முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

உடலுறுப்பு தானத்தில் தமிழகம் புதிய சாதனை: அமைச்சர் மா. சுப்ரமணியன் உடலுறுப்பு தானத்தில் தமிழகம் சாதனை:அமைச்சர் மா. சுப்ரமணியன் பெருமிதம்

செவ்வாய்க்கிழமை, 28 ஜனவரி 2025      தமிழகம்
Ma Subramani-2023-11-09

Source: provided

சென்னை: உடலுறுப்புகளை தானம் பெற்று பாதிக்கப்பட்டவர்களுக்குப் பொருத்தும் சேவையில், தமிழகம் புதிய சாதனை படைத்திருப்பதாக மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் தன்னுடைய எக்ஸ் பக்கத்தில், தமிழ்நாட்டின் மூளைச்சாவு நபர்களின் உறுப்புக்கொடை என்ற உன்னதத் திட்டம் 2024 ஆம் ஆண்டு ஒரு புதிய உச்சத்தை எட்டியுள்ளது. கடந்த ஓராண்டில் (2024) மட்டும் 268 மூளைச்சாவு ஏற்பட்ட நபர்கள் உறுப்புக்கொடை அளித்துள்ளனர். அவர்களிடமிருந்து 1,500 உறுப்புகள் மற்றும் திசுக்கள் கொடையாகப் பெறப்பட்டு தேவையான நோயாளிகளுக்கு பொருத்தப்பட்டுள்ளன.

மூளைச்சாவு உறுப்புக் கொடைத்திட்டம் தொடங்கப்பட்டது முதல், இந்திய அளவில், ஓராண்டில், ஒரு மாநிலத்தில் மட்டுமே இந்த அளவுக் கொடை இது வரையில் நிகழ்ந்ததில்லை. இம்மாபெரும் சாதனை சாத்தியமானதற்கான காரணம், நம்முடைய முதல்வரின் “உடல் உறுப்பு தானம் செய்தோரின் திருவுடல்களுக்கு அரசு மரியாதை செய்யப்படும்”எனும் உன்னதமான வரலாற்றுச் சிறப்பு மிக்க ‘அரசாணையே’ ஆகும் என்று தெரிவித்துள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 6 days ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 6 days ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 8 months 6 days ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 6 days ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 10 months 6 days ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 10 months 6 days ago
View all comments

வாசகர் கருத்து