முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

இன்று ஜி.எஸ்.எல்.வி. எப் -15 ராக்கெட் மூலம் இந்தியாவின் 100-வது செயற்கைக்கோள் விண்ணில் ஏவப்படுகிறது : 27 மணி நேர கவுண்ட் டவுன் தொடக்கம்

செவ்வாய்க்கிழமை, 28 ஜனவரி 2025      இந்தியா
ISRO 2024-12-16

Source: provided

ஸ்ரீஹரிகோட்டா : இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான இஸ்ரோ தனது 100-வது செயற்கைக்கோளை இன்று விண்ணில் செலுத்துகிறது. இதற்கான 27.30 மணி நேர கவுண்ட் டவுன் நேற்று அதிகாலை 2.53 மணிக்கு தொடங்கியது.

இஸ்ரோவின் ஜி.எஸ்.எல்.வி. எப் -15 ராக்கெட் என்.வி.எஸ்.-02 என்ற செயற்கைக்கோளை சுமந்து கொண்டு இன்று (ஜனவரி 29) காலை 6.23 மணிக்கு விண்ணில் ஏவப்படுகிறது. இந்த ராக்கெட் ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி ஆய்வு மையத்தில் இருந்து விண்ணில் ஏவப்பட உள்ளது. இன்று 100-வது செயற்கைக்கோளை ஏவுவதன் மூலம் விண்வெளி ஆய்வு மற்றும் செயற்கைக்களோ தொழில்நுட்பத்தில் இந்தியா குறிப்பிடத்தக்க நிலையை அடையும். இது நாட்டில் ஏற்கனவே வளர்ந்து வரும் விண்வெளி திறனை மேலும் வலுப்படுத்தும்.

விண்ணில் செலுத்தப்படும் என்.வி.எஸ்-02 செயற்கைக்கோள் இஸ்ரோவின் கீழ் இயங்கி வரும் யு.ஆர். ராவ் செயற்கைக்கோள் மையத்தில் தயாரிக்கப்பட்டது. மேலும் இந்த செயற்கைக்கோள் இஸ்ரோவின் பிற செயற்கைக்கோள் பணி மையங்களின் ஆதரவுடன் வடிவமைக்கப்பட்டு, ஒருங்கிணைக்கப்பட்டு உள்ளது. ராக்கெட் மற்றும் செயற்கைக்கோளின் செயல்பாடுகள் தொடர்ச்சியாக கண்காணிக்கப்பட்டு வருகிறது. ராக்கெட் விண்ணில் ஏவ தயார் நிலையில் உள்ளது என்று இஸ்ரோ விஞ்ஞானிகள் கூறினர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 6 days ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 6 days ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 8 months 6 days ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 6 days ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 10 months 6 days ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 10 months 6 days ago
View all comments

வாசகர் கருத்து