முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பாசிசத் தன்மை கொண்டதாக மாறி வருகிறது: தி.மு.க. அரசு மீது அன்புமணி குற்றச்சாட்டு

செவ்வாய்க்கிழமை, 28 ஜனவரி 2025      தமிழகம்
anbumani 2025-01-03

Source: provided

சென்னை : பாசிசத் தன்மை கொண்டதாக மாறி வருகிறது என்று தி.மு.க. அரசு மீது பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் குற்றச்சாட்டியுள்ளார்.

இதுகுறித்து பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

விழுப்புரம் வழுதரெட்டியில் அமைக்கப்பட்டுள்ள வன்னியர் இட ஒதுக்கீட்டுப் போராட்டத்தில் உயித்தியாகம் செய்த ஈகியர்களின் மணிமண்டபத் திறப்பு விழாவில் பங்கேற்ற முதல்வர் மு.க.ஸ்டாலின், சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பின் அடிபடையில் வன்னியர்களுக்கு 10.50 சதவீத இட ஒதுக்கீடு வழங்குவது குறித்து எந்த அறிவிப்பும் வெளியிடவில்லை. அதுமட்டுமின்றி, அதில் பங்கேற்ற ஈகியர்களின் குடும்பத்தினர் இட ஒதுக்கீடு குறித்த கோரிக்கை மனுவைக் கூட முதல்வரிடம் அளிக்க விடாமல் அதிகாரிகளால் தடுக்கப்பட்டிருக்கின்றனர். தி.மு.க. அரசின் இந்த சமூக அநீதி நடவடிக்கை கடுமையாக கண்டிக்கத்தக்கதாகும்.

வன்னியர் இட ஒதுக்கீட்டுப் போராட்டத்தில் உயிர்த்தியாகம் செய்த 21 ஈகியர்களுக்கு விழுப்புரம் வழுதரெட்டியில் மணிமண்டபம் அமைக்கப்பட்டிருக்கிறது. அதன் திறப்பு விழா நேற்று காலை நடத்தப்பட்ட நிலையில், அதில் பங்கேற்பதற்காக நேற்று முன்தினம் மதியமே அழைத்து செல்லப்பட்ட 21 ஈகியர்களின் குடும்பத்தினர், கிட்டத்தட்ட பிணைக்கைதிகளைப் போல நடத்தப்பட்டுள்ளனர். நேற்று முன்தினம் பிற்பகலில் மணிமண்டபத்திற்கு அழைத்து செல்லப்பட்ட அவர்களுக்கு மணிமண்டப திறப்பு விழாவின் போது எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும் என்பது குறித்து மாவட்ட உதவி ஆட்சியர் ஸ்ருதன்ஜெய் நாராயணன் என்ற அதிகாரியால் பாடம் நடத்தப்பட்டிருக்கிறது.

அப்போது ஊடகங்களுடனோ, வேறு யாருடனோ பேசக்கூடாது என்பன உள்ளிட்ட பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருக்கின்றன. தமிழ்நாட்டில் கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் வன்னியர்களுக்கு 10.50 சதவீத இட ஒதுக்கீடு வழங்கப்பட வேண்டும் என்பது தான் தங்களின் நோக்கம் என்றும், அதற்கான கோரிக்கை மனுவை முதல்வரிடம் வழங்க வேண்டும் என்று தியாகிகளின் குடும்பத்தினர் கேட்ட போது, அது போன்று எந்த மனுவையும் தரக்கூடாது என்று அவர்கள் எச்சரிக்கப்பட்டுள்ளனர். அதையும் மீறி,  நேற்று காலை முதல்வரிடம் வழங்குவதற்காக ஈகியர் குடும்பத்தினர் மனுக்களை எடுத்துச் சென்ற போது, அவை அனைத்தையும் விழா நடைபெறும் இடத்தில் இருந்த மாவட்ட உதவி ஆட்சியர் ஸ்ருதன்ஜெய் நாராயணன் தலைமையிலான குழுவினர் பறித்துக் கொண்டிருக்கின்றனர்.

ஈகியர்களின் மணிமண்டபத்தை திறந்து வைத்த முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்களிடம் ஈகியர் குடும்பத்தை சேர்ந்தவர்கள் இட ஒதுக்கீடு கோரிக்கை குறித்து முறையிட்ட போது, அதை காதில் வாங்கிக் கொள்ளாமல் சென்று விட்டதாகவும் ஈகியர் குடும்பத்தினர் குற்றஞ்சாட்டி உள்ளனர். வன்னியர் இட ஒதுக்கீட்டு கோரிக்கை குறித்த மனுக்களைக் கூட பெற முடியாத அளவுக்கும், அவர்களின் கோரிக்கைகளை முதல்-அமைச்சர் காது கொடுத்து கேட்க முடியாத அளவுக்கும் தி.மு.க. அரசு பாசிசத் தன்மை கொண்டதாக மாறி வருகிறது.

முதல்வர் மு.க.ஸ்டாலின் போன்ற வன்னியர்களுக்கு எதிரான மனநிலை கொண்டவர்கள்  எவ்வளவு தான் முட்டுக்கட்டைகளைப் போட்டாலும், அவை அனைத்தையும் முறியடித்து வன்னியர்களுக்கான சமூகநீதியை மருத்துவர் ராமதாஸ் வென்றெடுத்துக் கொடுப்பார். அதே நேரத்தில் சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பளித்தும் கூட வன்னியர்களுக்கு இட ஒதுக்கீடு வழங்க மறுக்கும் தி.மு.க. அரசுக்கு வரும் தேர்தலில் தமிழ்நாட்டு மக்கள் மறக்க முடியாத பாடத்தைப் புகட்டுவார்கள். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 6 days ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 6 days ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 8 months 6 days ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 6 days ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 10 months 6 days ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 10 months 6 days ago
View all comments

வாசகர் கருத்து