முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ரஞ்சி கோப்பை தொடர்: ரயில்வே அணிக்கு எதிராக களமிறங்குகிறார் கோலி

செவ்வாய்க்கிழமை, 28 ஜனவரி 2025      விளையாட்டு
Virat-Kohli 2023 07-22

Source: provided

புதுடெல்லி : ரெயில்வே அணிக்கு எதிரான அடுத்த லீக் ஆட்டத்தில் விராட் கோலி விளையாட உள்ளார். 

கடும் விமர்சனங்கள்... 

சமீபத்தில் நடந்த நியூசிலாந்து மற்றும் ஆஸ்திரேலிய டெஸ்ட் தொடர்களில் இந்திய அணி தோல்வி கண்டது. இதில் ரோகித் சர்மா, விராட்கோலி உள்ளிட்ட பேட்ஸ்மேன்கள் சோபிக்கவில்லை. இதன் காரணமாக ரோகித் சர்மா, விராட் கோலி உள்ளிட்ட வீரர்கள் மீது கடும் விமர்சனங்கள் எழுந்தன. மேலும் உள்ளூர் போட்டிகளில் வீரர்கள் அனைவரும் விளையாட வேண்டும் என்று முன்னாள் வீரர்கள் பலரும் வலியுறுத்தினர். 

உள்ளூர் போட்டி... 

இதையடுத்து உடல் தகுதி பிரச்சினை இல்லாத சமயத்தில் உள்ளூர் போட்டிகளில், கிரிக்கெட் வாரியத்தின் ஒப்பந்த வீரர்கள் அனைவரும் கட்டாயம் பங்கேற்க வேண்டும் என்று பி.சி.சி.ஐ. அறிவுறுத்தியது. இதனால் உள்ளூர் போட்டிகளில் முன்னணி வீரர்கள் விளையாடுகின்றனர் .முன்னணி வீரர்களான ரோகித், ஜடேஜா, சிராஜ், பண்ட் உள்ளிட்ட பல வீரர்கள் கடந்த 23ம் தேதி தொடங்கிய ஆட்டங்களில் விளையாடினர் . காயம் காரணமாக விராட் கோலி கடந்த 23ம் தேதி தொடங்கிய சவுராஷ்டிராவுக்கு எதிரான போட்டியில் விளையாடவில்லை

கோலிக்கு இடம்...

இந்நிலையில் டெல்லி அணியின் அடுத்த லீக் ஆட்டத்தில் (30-ந்தேதி ரெயில்வே அணிக்கு எதிராக) விராட் கோலி விளையாட உள்ளார் . ரெயில்வே அணிக்கு எதிராக விளையாடும் டெல்லி அணியின் வீரர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர். இதில் விராட் கோலி இடம் பெற்றுள்ளார்.  டெல்லி அணியை வழிநடத்தும் வாய்ப்பு கோலிக்கு வழங்கப்பட்டதாகவும் ஆனால் அவர் மறுத்துவிட்டதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. 

வீடியோ வைரல்...

டெல்லியில் உள்ள அருண் ஜெட்லி ஸ்டேடியத்தில் கோலி டெல்லி அணி வீரர்களுடன் பயிற்சி செய்த வீடியோ வைரலாகி வருகிறது. விராட் கோலி கடைசியாக 2012-ம் ஆண்டு உத்திரபிரதேசத்துக்கு எதிராக ரஞ்சி போட்டியில் விளையாடி இருந்தார். அதன் பிறகு தற்போதுதான் களமிறங்க உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 6 days ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 6 days ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 8 months 6 days ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 6 days ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 10 months 6 days ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 10 months 6 days ago
View all comments

வாசகர் கருத்து