முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

காலே டெஸ்ட் நிறுத்தம்

வெள்ளிக்கிழமை, 31 ஜனவரி 2025      விளையாட்டு
Warner 2023-09-10

Source: provided

வார்னே -முரளிதரன் கோப்பையின் முதல் டெஸ்ட் போட்டி ஜன.29ஆம் தேதி தொடங்கியது. முதல் இன்னிங்ஸில் பேட்டிங் செய்த ஆஸி. அணி 654/6 ரன்களுக்கு டிக்ளேர் செய்தது. அடுத்து விளையாடிவரும் இலங்கை அணி 3ஆம் நாளின் உணவு இடைவேளை வரையில் 136/5 ரன்கள் எடுத்து தடுமாறி வருகிறது. இந்நிலையில் மழையின் காரணமாக 3ஆம் நாள் முடிவடைந்ததாக அறிவிக்கப்பட்டுள்ளது. மீதமுள்ள 2 நாள்களில் இலங்கையை ஆல் அவுட்டாக்கி மீண்டும் ஒருமுறை ஆல் அவுட் செய்தால்தான் ஆஸ்திரேலியா வெற்றிபெற முடியும். இதைச் செய்ய தவறினால் இந்தப் போட்டி டிராவில் முடிவடையும். 

இதனால் உலக டெஸ்ட் போட்டி பட்டியலில் எந்தவிதமான பாதிப்பும் ஏற்படாவிட்டாலும் எளிதாக வெல்ல வேண்டிய போட்டியை மழையினால் இழப்பது ஆஸி. அணிக்கு பின்னடைவுதான் என வர்ணணையாளர்கள் கூறியுள்ளார்கள். 42 ஓவர்கள் முடிவில் இலங்கை அணி 136/5 ரன்கள் எடுத்துள்ளது. களத்தில் தினேஷ் சண்டிமல் (63), குசால் மெண்டிஸ் (10) இருக்கிறார்கள். ஆஸி. சார்பில் மிட்செல் ஸ்டார்க், குன்னஹ்மென் தலா 2 விக்கெட்டுகளும் நாதன் லயன் 1 விக்கெட்டும் எடுத்துள்ளார்கள்.

_________________________________________________________________________________

ஆஸி., வீரர் விலகல்

9-வது ஐ.சி.சி. சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட் போட்டி பாகிஸ்தானில் பிப்ரவரி 19-ம் தேதி முதல் மார்ச் 9-ம் தேதி வரை நடைபெற உள்ளது. இதில் பங்கேற்கும் 8 அணிகள் இரு பிரிவாக பிரிக்கப்பட்டுள்ளன. 'ஏ' பிரிவில் இந்தியா, பாகிஸ்தான், நியூசிலாந்து, வங்காளதேசம் அணிகளும், 'பி' பிரிவில் ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, தென் ஆப்பிரிக்கா, ஆப்கானிஸ்தான் அணிகளும் இடம் பெற்றுள்ளன. பிப்ரவரி 19-ந்தேதி கராச்சியில் தொடங்கும் முதல் ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் பாகிஸ்தான் அணி, நியூசிலாந்தை சந்திக்கிறது.

இந்நிலையில் இந்த தொடருக்கான ஆஸ்திரேலிய அணியில் இடம்பெற்றிருந்த முன்னணி ஆல் ரவுண்டர் மிட்செல் மார்ஷ் முதுகு வலி காரணமாக தொடரிலிருந்து விலகியுள்ளார். இவருக்கு மாற்று வீரர் இன்னும் அறிவிக்கப்படவில்லை. இவரது விலகல் அணிக்கு பின்னடைவாக கருதப்படுகிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 8 months 1 week ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 1 week ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 10 months 1 week ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 10 months 1 week ago
View all comments

வாசகர் கருத்து