முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சாம்பியன்ஸ் டிராபி அரையிறுதி: தென்னாப்பிரிக்கா முன்னேற்றம்

சனிக்கிழமை, 1 மார்ச் 2025      விளையாட்டு
South-Africa 2024-05-15

Source: provided

கராச்சி : சாம்பியன்ஸ் டிராபி தொடரின் அரையிறுதிப் போட்டிக்கு தென்னாப்பிரிக்கா முன்னேறியது.

அரையிறுதிக்கு தகுதி... 

ஐ.சி.சி. சாம்பியன்ஸ் டிராபி தொடர் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதுவரை மூன்று அணிகள் அரையிறுதிக்கு தகுதி பெற்றிருந்தன. குரூப் ஏ பிரிவில் இருந்து இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளும், குருப் பி பிரிவில் ஆஸ்திரேலிய அணியும் அரையிறுதிக்குத் தகுதி பெற்றிருந்தன. இந்த நிலையில், தற்போது 4-வது மற்றும் கடைசி அணியாக தென்னாப்பிரிக்கா அரையிறுதிக்குள் நுழைந்துள்ளது.

அதிகாரபூர்வமாக உறுதி... 

தென்னாப்பிரிக்க அணி அரையிறுதிக்கு தகுதி பெற்றுவிடும் என தெரிந்திருந்தபோதிலும், தற்போது தென்னாப்பிரிக்க அணி அரையிறுதிக்கு முன்னேறியுள்ளது அதிகாரபூர்வமாக உறுதி செய்யப்பட்டது. இன்றையப் போட்டியில் முதலில் விளையாடிய இங்கிலாந்து அணி 179 ரன்களுக்கு ஆட்டமிழந்ததால், அரையிறுதிக்கு தகுதி பெறுவதற்கு ஆப்கானிஸ்தான் அணிக்கு இருந்த மிக மிக அரிதான வாய்ப்பை அந்த அணி இழந்தது. இதன் மூலம், தென்னாப்பிரிக்க அணி 4-வது மற்றும் கடைசி அணியாக அரையிறுதிக்குள் நுழைந்தது.

வாய்ப்பு பறிபோனது...

தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான போட்டியில் இங்கிலாந்து அணி முதலில் பேட் செய்யும் பட்சத்தில், தென்னாப்பிரிக்காவை இங்கிலாந்து அணி, குறைந்தது 207 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தினால் ஆப்கானிஸ்தான் அணி அரையிறுதிக்கு தகுதி பெறும் என்ற சூழல் இருந்தது. ஆனால், இன்றையப் போட்டியில் முதலில் விளையாடிய இங்கிலாந்து அணி 179 ரன்களுக்கு ஆட்டமிழந்ததால், ஆப்கானிஸ்தானுக்கு அரையிறுதிக்குத் தகுதி பெறுவதற்கு இருந்த மிக மிக அரிதான வாய்ப்பு பறிபோனது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 1 week ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 1 week ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 9 months 1 week ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 9 months 1 week ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 11 months 1 week ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 11 months 1 week ago
View all comments

வாசகர் கருத்து