முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மத்திய பட்ஜெட்டில் பீகாருக்கு ஏராளமான திட்டங்கள்: எதிர்க்கட்சிகள் கடும் விமர்சனம்

சனிக்கிழமை, 1 பெப்ரவரி 2025      இந்தியா
Central-government 2021 12-

Source: provided

புதுடெல்லி: 2025-26 நிதியாண்டுக்கான பட்ஜெட்டை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்த நிலையில், பீகாருக்கு அதிகப்படியான நலத் திட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது பேசுபொருளாக மாறியுள்ளது. இது குறித்து கேள்வி எழுப்பி, எதிர்க்கட்சியினர் முழக்கமிட்டனர்.

பீகாரில் விரைவில் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில், மத்திய பட்ஜெட்டில் அம்மாநிலத்துக்கு மட்டுமே ஏராளமான திட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளதாக குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்படுகிறது. அதே வேளையில், மத்திய பா.ஜ.க. கூட்டணி ஆட்சியில், பீகார் முதல்வர் நிதிஷ் குமாரின் பங்கு அளப்பரியது. அவரை திருப்திப்படுத்தவும், ஆட்சியை காப்பாற்றி கொள்ளவும், பீகாருக்கு பா.ஜ.க. அரசு முக்கியத்துவம் அளிப்பதாக கூறப்படுகிறது. பீகாருக்கு மத்திய அரசு தொடர்ந்து இரண்டாவது முறையாக, பட்ஜெட்டில் அதிக சலுகைகளை வழங்கி வருகிறது. அந்த அறிவிப்புகளில் சில...

1) பீகாரில் தேசிய உணவு பதப்படுத்துதல் மையம் (நிப்டம்) அமைக்கப்படும். இது இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பை உருவாக்கும்.

2) பீகாரில் மக்கானா (தாமரை விதை) உற்பத்திக் கூடம் அமைக்கப்படும்.

3) ஐ.ஐ.டி. பாட்னாவில் உள்கட்டமைப்பு மற்றும் விடுதி வசதிகளை விரிவுபடுத்துவதாகவும் மத்திய அரசு அறிவித்துள்ளது.

4) மாநிலத்தின் எதிர்காலத் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்காக பீகாரில் பசுமை வழி விமான நிலையங்கள் அமைக்கப்படும் மற்றும் பாட்னா விமான நிலையம் விரிவாக்கம் செய்யப்படும்.

5) மேற்கு கோசி கால்வாய் திட்டத்துக்கு நிதி உதவி அறிவிக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் அப்பகுதியில் 50,000 ஹெக்டேர் பரப்பளவில் சாகுபடி செய்யும் விவசாயிகள் பயனடைவார்கள், அவர்களுக்கு பாசன நீர் கிடைக்கும்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 8 months 1 week ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 1 week ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 10 months 1 week ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 10 months 1 week ago
View all comments

வாசகர் கருத்து