எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

Source: provided
டெல்லி: 27 ஆண்டுகளுக்குப் பிறகு தீர்க்கமான ஆணையுடன் டெல்லியில் மீண்டும் பா.ஜ.க. ஆட்சி அமைத்துள்ளது. ஆனால் பா.ஜ.க. அரசு தில்லியில் பல புதிய சவால்களை எதிர்கொள்ள வேண்டியுள்ளது
டெல்லியின் ஒன்பதாவது முதல்வராக பா.ஜ.க.வின் முதல்முறை சட்டப்பேரவை உறுப்பினர் ரேகா குப்தா பதவியேற்றுள்ளார். சுஷ்மா ஸ்ராஜ், ஷீலா தீட்சித், அதிஷி ஆகியோருக்குப் பிறகு நான்காவது பெண் முதல்வர் என்கிற பெருமையையும் ரேகா குப்தா பெறுகிறார். மேலும் டெல்லியில் முதல்வர் பதவி வகித்த பாஜக தலைவர்களான மதன் லால் குரானா, சாஹிப் சிங் வர்மா, சுஷ்மா ஸ்ராஜ் ஆகியோருக்குப் பிறகு நான்காவது பாஜக முதல்வராகும் பெருமையையும் இவர் பெறுகிறார்.டெல்லியில் ஆட்சி அமைத்துள்ள பாஜக அரசுக்கு பல்வேறு புதிய சவால்கள் காத்திருக்கின்றன.
தேசிய தலைநகரின் நிதி நிலையைக் கண்காணிக்கும் அதே வேளையில், முக்கிய தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றுவது, முந்தைய அரசின் நலத்திட்டங்களைத் தொடர்வது, நகரத்தின் மாசுபாடு மற்றும் உள்கட்டமைப்பு பிரச்னைகளை சரிசெய்வது மற்றும் யமுனையைச் சுத்தம் செய்வதை உறுதி செய்வது போன்றவற்றை பாஜக அரசு நிறைவேற்ற வேண்டியக் கட்டாயத்தில் உள்ளது. தற்போது எதிர்க்கட்சியில் இருக்கும் ஆம் ஆத்மி கட்சி உருவானதிலிருந்து டெல்லியில் ஒருபோதும் தனது அதிகாரத்தை இழந்ததில்லை. சமீபத்தில் முடிவடைந்த 70 உறுப்பினர்களைக் கொண்ட டெல்லி சட்டப்பேரவைத் தேர்தலில், பாஜக 48 இடங்களுடன் பெரும்பாண்மையுடன் வெற்றியைக் கைப்பற்றியது. அதே நேரத்தில் ஆம் ஆத்மி 22 இடங்களை வென்றது, தலைநகரில் ஆம் ஆத்மியின் பத்தாண்டுக் கால ஆட்சியை முடிவுக்குக் கொண்டுவந்துள்ளது பா.ஜ.க.
பாஜகவால் முதல்வராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட ஹரியாணாவைச் சேர்ந்த ரேகா குப்தாவின் முதன்மையான முன்னுரிமைகளில் ஒன்றுதான்.. டெல்லி பெண்களுக்கு மாதாந்திரமாக ரூ. 2,500 கௌரவ ஊதியம் வழங்குவதாக அளித்த வாக்குறுதியை நிறைவேற்றுவதாகும். இது கட்சியின் தேர்தல் அறிக்கையில் ஒரு முக்கிய வாக்குறுதியாகும். அதேசமயம் ஆம் ஆத்மி கட்சியின் ரூ. 2,100 என்ற வாக்குறுதியை விட, பெண்களுக்கு மாதாந்திரமாக வழங்கப்படும் கௌரவ ஊதியத்தை பாஜக அதிகரித்தது. பாஜகவுக்கு மற்றொரு பெரிய சவாலாக இருப்பது.. 200 யூனிட் வரை இலவச மின்சாரம், இலவச தண்ணீர் இணைப்பு மற்றும் பெண்களுக்கு இலவச பேருந்து பயணம் உள்ளிட்ட ஆம் ஆத்மி அரசு தொடங்கிய நலத்திட்டங்களைத் தொடர்வதும் அடங்கும். இந்த சலுகைகள் நிறுத்தப்படாது என்று பாஜக வாக்காளர்களுக்கு உறுதியளித்துள்ள நிலையில், ஆம் ஆத்மி தலைவர்கள் கட்சியின் நீண்டகால உறுதிப்பாடு குறித்து அக்கட்சியின் தலைவர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர். சமீபத்திய சட்டப்பேரவை தேர்தலுக்கான பிரசாரத்தின்போது, பிரதமர் மோடியும் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவும் இலவசத் திட்டங்கள் தொடரும், ஆனால் அத்தகைய திட்டங்களில் ஊழல் ஒழிக்கப்படும் என்று வாக்காளர்களுக்கு உறுதியளித்தனர்.
டெல்லியில் ஆயுஷ்மான் பாரத் சுகாதார காப்பீட்டுத் திட்டத்தை அறிமுகப்படுத்துவதாக பாஜக உறுதியளித்திருந்தது, தற்போது அது தேர்தல் பிரச்னையாக மாறியுள்ளது. இந்தத் திட்டத்தின் மூலம் ஒரு பயனாளிக்கு ரூ.5 லட்சம் வரை இலவச சிகிச்சையை வழங்குகிறது, கூடுதலாக ரூ.5 லட்சம் மாநில அரசால் வழங்கப்படுகிறது. டெல்லியின் தற்போதைய சுகாதார அமைப்பு சிறந்ததாகவும், அனைத்தையும் உள்ளடக்கியதாகவும் இருப்பதாகக் கூறி ஆம் ஆத்மி அரசு, ஆயுஷ்மான் பாரத் சுகாதார காப்பீட்டைச் செயல்படுத்த மறுத்துவிட்டது. அதேசமயம் தேர்தலில் வெற்றி பெற்றால் டெல்லியின் மொஹல்லா கிளினிக்குகளை சீர்திருத்துவதாக பாஜக உறுதியளித்துள்ளது. கடந்த 5-ம் தேதி தேர்தலில் வெற்றி பெற்ற பிறகு, பாஜகவின் வெற்றி கொண்டாட்டங்களின் போது, பிரதமர் மோடி, நதியைச் சுத்தம் செய்வதற்கான தனது உறுதிப்பாட்டை மீண்டும் உறுதிப்படுத்தினார்.
டெல்லியில் யமுனை நதியின் 57 கி.மீ நீளமுள்ள பகுதியில் குப்பைகளை அகற்றும் பணிக்காகக் குப்பைகளை அகற்றும் கருவிகள், களை அறுவடை செய்யும் கருவிகள் மற்றும் தூர்வாரும் கருவிகளை நிர்வாகம் பயன்படுத்தத் தொடங்கியுள்ளது. கூடுதலாக, டெல்லியின் சீரழிந்து வரும் சாலைகள் மற்றும் கழிவுநீர் அமைப்பை மேம்படுத்தவும் பாஜக உறுதியளித்துள்ளது. மேலும், உலகளவில் மிகவும் மாசுபட்ட தலைநகரங்களில் ஒன்றான டெல்லிக்கு, மாசுபாடு மிகப்பெரிய கவலைகளில் ஒன்றாக உள்ளது. 2020-ல் ஆம் ஆத்மி கட்சி செயல்படுத்திய பிறகு திருத்தத் தவறிய மின்சார வாகன கொள்கையைப் புதுப்பிப்பது உள்பட ஒரு பயனுள்ள மாசுக் கட்டுப்பாட்டு உத்தியைச் செயல்படுத்த பாஜக அரசுக்கு அழுத்தம் கொடுக்கப்படும். அதோடு தில்லியில் நிலையான தலைமையைப் பராமரிப்பது பாஜகவுக்கு மற்றொரு சவாலாக இருக்கும் என கூறப்படுகிறது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்![]() 4 months 4 weeks ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்![]() 5 months 5 days ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.![]() 5 months 3 weeks ago |
-
போலீஸ் நினைப்பிலேயே இருக்கிறார்: அண்ணாமலை குறித்து சேகர்பாபு விமர்சனம்
21 Feb 2025சென்னை : கர்நாடகாவில் போலீசாக இருப்பது போன்ற நினைப்பில் அண்ணாமலை இருக்கிறார் என்று அமைச்சர் சேகர் பாபு கூறியுள்ளார்.
-
சற்று குறைந்த தங்கம் விலை
21 Feb 2025சென்னை : சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.360 குறைந்து நேற்று விற்பனையானது.
-
3 கோடி ஸ்மார்ட் மீட்டருக்கு விரைவில் டெண்டர் விடும் பணி
21 Feb 2025சென்னை : 3 கோடி ஸ்மார்ட் மீட்டர்களை நிறுவுவதற்கு ஒரு வாரத்திற்குள் டெண்டர் விடும்பணி தொடங்க உள்ளதாக மின்சார வாரியம் தெரிவித்துள்ளது.
-
தமிழக மீனவர்களுக்கு 7-ம் தேதி வரை காவல்: யாழ்ப்பாணம் கோர்ட் உத்தரவு
21 Feb 2025ராமேசுவரம், ராமேசுவரம் மீனவர்கள் 10 பேருக்கு வருகிற 7-ந்தேதி வரை காவலில் வைக்க யாழ்ப்பாணம் கோர்ட் உத்தரவிட்டுள்ளது.
-
சோனியா காந்தி மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ்
21 Feb 2025புதுடெல்லி : காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா காந்தி நேற்றுமுன்தினம் உடல் நலக்குறைவு காரணமாக அனுமதிக்கப்பட்ட நிலையில் நேற்று வீட்டுக்கு அனுப்பபட்டார்.
-
நிதியை விடுவிக்க மறுப்பது துரோகம்: மத்திய அரசுக்கு இ.பி.எஸ். கண்டனம்
21 Feb 2025சென்னை : கல்வித்துறை நிதியை விடுவிக்க மறுப்பது தமிழ்நாட்டிற்கு மத்திய அரசு இழைக்கும் துரோகம் என்று எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளார்.
-
தமிழகத்தில் 5 நாட்களுக்கு வறண்ட வானிலை நிலவும் : வானிலை ஆய்வு மையம் தகவல்
21 Feb 2025சென்னை : தமிழகத்தில் அடுத்த 5 நாட்களுக்கு வறண்ட வானிலை நிலவும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
-
ரசிகர்கள் வேறு, வாக்காளர்கள் வேறு என்பதை அனுபவத்தில் தெரிந்து கொண்டேன்: கமல்ஹாசன்
21 Feb 2025சென்னை : ரசிகர்கள் வேறு வாக்காளர்கள் வேறு என்பதை எனது அனுபவத்தில் தெரிந்து கொண்டேன் என்று கமல்ஹாசன் கூறினார்
-
தி.மு..க., பா.ஜ.க.வினர் மோதல்: 'கெட் அவுட்' ஹேஷ்டேக் : உலக அளவில் டிரெண்ட்
21 Feb 2025சென்னை : 'கெட் அவுட் மோடி', 'கெட் அவுட் ஸ்டாலின்' ஹேஷ்டேக்கள் உலக அளவில் டிரெண்ட் ஆகி வருகின்றன.
-
பாம்பன் புதிய ரயில் பாலம் வழியாக கப்பல்கள் கடந்து செல்ல அனுமதி
21 Feb 2025ராமேசுவரம் : பாம்பனில் கட்டப்பட்டுள்ள புதிய ரயில் பாலம் வழியாக 9 மாதங்களுக்கு பிறகு கப்பல்கள் கடந்து செல்ல அனுமதி அளிக்கப்பட்டது.
-
இந்திய வம்சாவளியை சேர்ந்தவர்: எப்.பி.ஐ. புதிய இயக்குநராக காஷ் படேல் நியமனம்
21 Feb 2025அமெரிக்கா : அமெரிக்காவின் மத்திய புலனாய்வு அமைப்பான எப்.பி.ஐ.யின் இயக்குநராக இந்திய வம்சாவளியைச் சோ்ந்த காஷ் படேல் தேர்ந்தெடுக்கபட்டதற்கு ஹிந்தி பாடலைப் பகிர்ந்து டிரம
-
தேசிய கல்விக்கொள்கை என்ற பெயரில் தமிழ்நாட்டில் இந்தி மொழியை திணிப்பது அரசியல் இல்லையா? - கடலூர் விழாவில் மத்திய அரசுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கேள்வி
21 Feb 2025கடலூர் : கல்விக்கொள்கை என்ற பெயரில் இந்தியை திணிப்பது அரசியல் இல்லையா?
-
சாஹல் - தனஸ்ரீ தம்பதி விவாகரத்து
21 Feb 2025மும்பை : இந்திய அணியின் முன்னணி சுழற்பந்து வீச்சாளர் யுஸ்வேந்திர சாஹல், கடந்த 2020ம் ஆண்டு தனஸ்ரீ என்பவரை திருமணம் செய்து கொண்டார்.
-
அடுத்த மாதம் முதல் திருச்சியில் இருந்து யாழ்ப்பாணத்திற்கு புதிய விமான சேவை
21 Feb 2025திருச்சி : திருச்சியில் இருந்து யாழ்ப்பாணத்திற்கு புதிய விமான சேவை அடுத்த மாதம் தொடங்குகிறது.
-
ஆந்திர துணை முதல்வரிடம் பிரதமர் மோடி கூறியது என்ன? - வெளியான ருசிகர தகவல்
21 Feb 2025புதுடெல்லி : தன்னிடம் பிரதமர் கூறியது குறித்து ஆந்திர துணை முதல்வர் பவன் கல்யாண் விளக்கமளித்துள்ளார்.
-
இந்தியாவுக்கு அமெரிக்கா நிதி: மத்திய வெளியுறவுத்துறை கவலை
21 Feb 2025புதுடெல்லி : இந்தியாவில் 'வாக்கு சதவீதத்தை அதிகரிக்க' அமெரிக்க அரசு 21 மில்லியன் டாலர் நிதியளித்ததாகக் கூறப்படும் செய்திகள் மிகவும் கவலை அளிக்கின்றன என்று வெளியுறவுத் த
-
அரசியல் செய்ய என்ன இருக்கிறது: மும்மொழிக் கொள்கையை ஏற்றுக்கொள்ள மாட்டோம் : துணை முதல்வர் உதயநிதி திட்டவட்டம்
21 Feb 2025சென்னை : மும்மொழிக் கொள்கையை ஏற்க முடியாது, இதில் அரசியல் செய்ய என்ன இருக்கிறது என்று உதயநிதி ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார்.
-
திறமையற்ற மா.செ.க்களை நீக்க முடிவு: ஆதவ் அர்ஜூனாவிடம் பொறுப்பை ஒப்படைத்த த.வெ.க. தலைவர் விஜய்
21 Feb 2025சென்னை : திறமையற்ற மா.செ.க்கள் குறித்த பட்டியலை தயாரிக்கும் பொறுப்பை ஆதவ் அர்ஜூனாவிடம் விஜய் ஒப்படைத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
-
அதிகார துஷ்பிரயோகம்: அமலாக்கத்துறை நடவடிக்கைக்கு இயக்குநர் ஷங்கர் கண்டனம்
21 Feb 2025சென்னை : எந்திரன் திரைப்படத்தின் கதை தொடர்பான மதிப்புரிமை மீறல் குற்றச்சாட்டின் கீழ், சொத்துகள் முடக்கப்பட்டிருப்பது அமலாக்கத் துறையின் அதிகார துஷ்பிரயோகம் என்று இயக்கு
-
தொடர் சிகிச்சையில் இருக்கும் போப் பிரான்சிஸ் பதவி விலகலா? - வாடிகன் நிர்வாகம் விளக்கம்
21 Feb 2025ரோம் : மருத்துவமனையில் சிகிச்சையில் உள்ள போப் பிரான்சிஸ் பதவி குறித்து வாடிகன் நிர்வாகம் விளக்கம் அளித்துள்ளது.
-
தமிழை அழிக்க மத்திய அரசு சதி: சபாநாயகர் அப்பாவு குற்றச்சாட்டு
21 Feb 2025சென்னை : இந்தியை மட்டும் படித்து தமிழை அழிக்க வேண்டும் என்பதற்காகவே மூன்றாவது மொழி படிக்க கூறுகின்றனர் என்று சபாநாயகர் அப்பாவு கூறியுள்ளார்.
-
பொன்முடி மீது சேறு வீசிய வழக்கு: 80 நாட்களுக்குப் பின் ஒருவர் கைது
21 Feb 2025விழுப்புரம் : விழுப்புரம் அருகே அரசூர் கூட்டுச்சாலையில் பெஞ்சல் புயல் வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஆறுதல் கூறச்சென்ற அமைச்சர் பொன்முடி, அப்போதையை கலெக்டர்
-
வரி விதிப்பு காரணமாக பிரிக்ஸ் நாடுகள் பிரிந்து விட்டது: டிரம்ப்
21 Feb 2025வாஷிங்டன் : வரி விதிப்பு மிரட்டலுக்கு பிறகு பிரிக்ஸ் நாடுகள் பிரிந்துவிட்டதாக டொனால்டு டிரம்ப் தெரிவித்துள்ளார்.
-
74 ஆண்டுகளுக்கு பிறகு ரஞ்சி கோப்பை இறுதிக்கு முன்னேறியது கேரள அணி
21 Feb 2025அகமதாபாத் : 74 ஆண்டுகளுக்குப் பிறகு ரஞ்சி கோப்பை கிரிக்கெட் தொடரின் இறுதிப் போட்டிக்கு கேரள அணி தேர்வாகியுள்ளது.
-
போராடும் விவசாயிகளுடன் மத்திய அரசு இன்று பேச்சுவார்த்தை
21 Feb 2025புதுடெல்லி : பயிர்களுக்கு குறைந்தபட்ச ஆதரவு விலைக்கான சட்டபூர்வ உத்தரவாதம் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டுள்ள விவசாயிகளுக்கும், மத்திய அ