முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தமிழ்நாட்டில் இந்தியை திணிக்கும் மறைமுக முயற்சி தான் புதிய கல்விக்கொள்கை : அமைச்சர் அன்பில் மகேஸ் குற்றச்சாட்டு

வெள்ளிக்கிழமை, 21 பெப்ரவரி 2025      தமிழகம்
Anbil 1

Source: provided

திருச்சி : தமிழ்நாட்டில் இந்தியை திணிக்கும் மறைமுக முயற்சியே புதிய கல்விக் கொள்கை என்றும் தமிழகத்தில் மும்மொழிக்கொள்கையை ஒருபோதும் ஏற்கமாட்டோம் என்றும் தெரிவித்துள்ள பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ், மாணவர்கள் நலனை மத்திய அரசு விரும்பினால் நிபந்தனை விதிக்கக்கூடாது என்று தெரிவித்துள்ளார். 

திருச்சியில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதாவது:- மாணவர்கள் நலனை மத்திய அரசு விரும்பினால் நிபந்தனை விதிக்கக்கூடாது. கடிதத்தில் கையெழுத்திட வேண்டும் என தர்மேந்திர பிரதான் வலியுறுத்துகிறார். மத்திய அரசு தமிழக அரசை பிளாக்மெயில் செய்வதை நிறுத்த வேண்டும். கல்வி நிதி வழங்கபடாத விவகாரத்தில் மாணவர்கள் உள்ளிட்டோர் எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள். தோழமை கட்சிகள், மக்கள் அனைவரும் மும்மொழிக்கொள்கையை எதிர்த்து ஆர்ப்பாட்டம் நடத்துகிறது.

இளைய சமுதாயத்தை முன்னிறுத்தி செய்கிறது என்றால் நிபந்தனைகள் விதிக்கக்கூடாது. தமிழக மாணவர்களின் நலனில் அக்கறை கொண்டு உடனே நிதியை விடுவிக்க வேண்டும். அரசு பள்ளிகளில் இரு மொழிக்கொள்கையில் படித்த மாணவர்கள் அனைத்து துறைகளிலும் உள்ளனர். இஸ்ரோ உள்ளிட்ட துறைகளில் உயர் பதவியில் உள்ளவர்கள் தமிழ் வழியில் படித்தவர்கள்தான். தரமான கல்வியைத்தான் தமிழ்நாடு அரசு வழங்கி வருகிறது. கல்வி இடைநிற்றல் இல்லாத மாநிலமாக தமிழ்நாட்டை மாற்றி வருகிறோம். இருமொழிக்கொள்கையை பிற மாநிலங்களுடன் ஒப்பிடுகையில் கல்வியில் சாதனை படைத்து வருகிறோம். தமிழின் பெருமையை நீங்கள் சொல்லி அறிய வேண்டியதில்லை.

தூண்டில் போட்டுவிட்டு மீன் ஏதாவது சிக்காதா என்ற ரீதியில் செயல்படுகின்றனர். தமிழகத்தில் இந்தியை திணிக்கும் மறைமுக முயற்சியே மும்மொழிக்கொள்கை. மும்மொழிக்கொள்கை மாணவர்களிடையே அறிவாற்றல் சுமையை உருவாக்கும். மும்மொழியை அறிமுகப்படுத்துவது ஆசிரியர் பற்றாக்குறை நடைமுறை சிக்கலை உருவாக்கும். மும்மொழிக்கொள்கை மூலம் வரலாற்றை மாற்ற முயற்சிகள் நடக்கும். நல்ல தலைவர்களாக இருப்பவர்களை கெட்ட தலைவர்களாக மாற்ற முயற்சிப்பார்கள்.

இந்தி இல்லாமல் மூன்றாவது வேறு மொழியை பயிற்றுவிக்க போதிய ஆசிரியர்கள் இல்லை. பாடத்திட்டத்திற்கு வெளியே இந்திய மொழியை கற்றுக்கொள்ள ஊக்குவிக்கத்தான் செய்கிறோம். புதிய கல்விக்கொள்கையால் மாணாக்கரின் இடைநிற்றால் அதிகரிக்கும். நிதி அழுத்தம், கொள்கை திணிப்புக்கு பதிலாக கூட்டாட்சி ஒத்துழைப்பை தமிழகம் விரும்புகிறது. தமிழகத்தில் மும்மொழிக்கொள்கையை ஒருபோதும் ஏற்கமாட்டோம். தமிழ்நாட்டில் அனைத்து முக்கிய அரசியல் கட்சிகளும் இருமொழிக்கொள்கையை ஆதரிக்கின்றன.

56 மொழிகளை இந்தி விழுங்கியுள்ளது. மொழிகளை திணிக்காமல் மாணவர்களின் மன அழுத்தத்தை குறைக்க வேண்டும். மும்மொழி கொள்கையை ஏற்றுக் கொண்ட மாநிலத்தின் அதிகாரிகளே இந்தியை திணிப்பார்கள் என்று கூறுகின்றனர்.  புதிய கல்வி கொள்கைக்கு தமிழ்நாடு அரசிடம் கருத்து கேட்டீர்களா? பிற மாநிலங்களுடன் ஒப்பிடுகையில் இருமொழிக் கொள்கையை பின்பற்றிய தமிழ்நாடு முன்னேறியுள்ளது. காலில் சங்கிலியை கட்டி ஓட விடாமல் செய்கிறது மத்திய அரசு. தமிழ்நாட்டில் இந்தியை திணிக்கும் மறைமுக முயற்சியே புதிய கல்விக் கொள்கை. இவ்வாறு அவர் கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 4 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 4 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 8 months 4 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 4 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 10 months 4 weeks ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 10 months 4 weeks ago
View all comments

வாசகர் கருத்து