முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஆந்திர துணை முதல்வரிடம் பிரதமர் மோடி கூறியது என்ன? - வெளியான ருசிகர தகவல்

வெள்ளிக்கிழமை, 21 பெப்ரவரி 2025      இந்தியா
Pawan-Kalyan 2023-10-05

Source: provided

புதுடெல்லி : தன்னிடம் பிரதமர் கூறியது குறித்து ஆந்திர துணை முதல்வர் பவன் கல்யாண் விளக்கமளித்துள்ளார்.

70 தொகுதிகள் கொண்ட டெல்லி சட்டசபைக்கு கடந்த 5-ந்தேதி தேர்தல் நடைபெற்றது. இதில் மொத்தம் சுமார் 61 சதவீத வாக்குகள் பதிவாகின. தேர்தலில் பா.ஜனதா வெற்றிபெறும் என தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகளில் பெரும்பாலானவை தெரிவித்தன. அதன்படி பா.ஜனதா 48 இடங்களிலும், ஆளும் கட்சியாக இருந்த ஆம் ஆத்மி 22 இடங்களிலும் வெற்றி பெற்றன. 27 ஆண்டுகளுக்குப் பிறகு டெல்லி தேர்தலில் பா.ஜனதா வெற்றி பெற்றிருந்தது.

இந்நிலையில், டெல்லி முதல்வராக  ரேகா குப்தா நேற்று முன்தினம் பதவியேற்றார். முதல்வருடன் 6 அமைச்சர்களும் பதவியேற்றுக்கொண்டனர். பதவியேற்பு நிகழ்ச்சியில் பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷா, பா.ஜ.க. கூட்டணி கட்சி தலைவர்கள், பல மாநிலங்களின் முதல்-அமைச்சர்கள் மற்றும் துணை முதல்வர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இவ்விழாவில் ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு, துணை முதல்வர் பவன் கல்யாண் ஆகியோரும் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர். இவ்விழாவில் கலந்துகொண்ட பிரதமர் மோடி அங்கு காவி உடையில் வந்த பவன் கல்யாணிடம் சிறிது நேரம் சிரித்து பேசினார்.

இதுகுறித்து பவன் கல்யாணிடம் செய்தியாளர்கள் கேட்டதற்கு, "வேறொன்றும் இல்லை, என்னைப் பார்த்து 'என்ன பவன் நீங்கள் இமயமலைக்கு செல்லப் போகிறீர்களா?' என பிரதமர் சிரித்துக் கொண்டே கேட்டார். அதற்கு நான் 'இல்லை' என்றேன். பிறகு அவர், அங்கு செல்ல இன்னும் வயது இருக்கிறது. மக்கள் சேவையில் கவனம் செலுத்துங்கள் என அறிவுறுத்தினார்" என்று பவன் கல்யாண் கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 4 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 4 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 8 months 4 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 4 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 10 months 4 weeks ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 10 months 4 weeks ago
View all comments

வாசகர் கருத்து