முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தொடர் சிகிச்சையில் இருக்கும் போப் பிரான்சிஸ் பதவி விலகலா? - வாடிகன் நிர்வாகம் விளக்கம்

வெள்ளிக்கிழமை, 21 பெப்ரவரி 2025      உலகம்
Pope 2023 06 17

Source: provided

ரோம் : மருத்துவமனையில் சிகிச்சையில் உள்ள போப் பிரான்சிஸ் பதவி குறித்து வாடிகன் நிர்வாகம் விளக்கம் அளித்துள்ளது.

கத்தோலிக்க திருச்சபையின் தலைவரான 88 வயது போப் பிரான்சிஸ், மூச்சுக்குழாய் அழற்சி காரணமாக கடந்த 14-ந்தேதி ரோம் நகரில் உள்ள ஜெமெல்லி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அங்கு மேற்கொள்ளப்பட்ட மருத்துவ பரிசோதனையில், அவருக்கு நுரையீரலில் நிமோனியா பாதிப்பு ஏற்பட்டிருப்பது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து வாடிகன் தேவாலயத்தில் போப் பிரான்சிஸ் கலந்து கொள்ள இருந்த நிகழ்ச்சிகள் ரத்து செய்யப்பட்டன. இதற்கிடையில், போப் பிரான்சிஸ் உடல்நிலை சீராக இருப்பதாகவும், மருத்துவ சிகிச்சைகளுக்கு இடையே அவர் உணவு எடுத்துக்கொள்கிறார் என்றும் வாடிகன் தேவாலய நிர்வாகம் தகவல் தெரிவித்துள்ளது.

போப் பிரான்சிஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு ஒருவாரம் ஆகிவிட்ட நிலையில், தற்போதுவரை அவருக்கு தொடர் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த சூழலில், போப் பிரான்சிஸ் தனது பதவியை ராஜினாமா செய்வாரா? என்ற கேள்வி எழத் தொடங்கியுள்ளது. இதற்கு முன்பு கடந்த 2013-ம் ஆண்டு பிப்ரவரி 28-ந்தேதி போப் பெனடிக்ட் தனது பதவியை ராஜினாமா செய்தார். 

இவர் கடந்த 600 ஆண்டுகளில் முதல் முறையாக தனது போப் பதவியை ராஜினாமா செய்தவர் ஆவார். அவரை தொடர்ந்து பதவிக்கு வந்த பிரான்சிஸ், போப் பெனடிக்ட் போல் தனது பதவியை ராஜினாமா செய்வாரா? என கேள்வி எழுந்துள்ளது. இது குறித்து வாடிகன் நிர்வாகம் சார்பில் கார்டினல் ரவாசி அளித்துள்ள விளக்கத்தில், போப் பிரான்சிஸ் மக்களை நேரடியாக சந்திக்க வேண்டும் என்று விரும்புவார். அதற்கு ஏதேனும் பாதிப்பு ஏற்படும் சூழ்நிலை உருவானால், அவர் ராஜினாமா செய்ய முடிவு செய்யலாம் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை என்று தெரிவித்துள்ளார். அதே சமயம் போப் பிரான்சிஸ் பதவி விலகுவது குறித்து இதுவரை பரிசீலனை செய்யவில்லை என்று கூறப்படுகிறது. 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 4 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 4 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 8 months 4 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 4 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 10 months 4 weeks ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 10 months 4 weeks ago
View all comments

வாசகர் கருத்து