முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தமிழக மீனவர்களுக்கு 7-ம் தேதி வரை காவல்: யாழ்ப்பாணம் கோர்ட் உத்தரவு

வெள்ளிக்கிழமை, 21 பெப்ரவரி 2025      தமிழகம்
Fisher-Boat

ராமேசுவரம், ராமேசுவரம் மீனவர்கள் 10 பேருக்கு வருகிற 7-ந்தேதி வரை காவலில் வைக்க யாழ்ப்பாணம் கோர்ட் உத்தரவிட்டுள்ளது.

ராமேசுவரத்தில் இருந்து  கடந்த19-ந் தேதி  மீன்துறை அலுவலக அனுமதி பெற்று 300-க்கும் மேற்பட்ட விசைப்படகுகளில் 1,200 மீனவர்கள் கடலுக்கு சென்றிருந்தனர். இதில் பாம்பன் பகுதியைச் சேர்ந்த சூசை மற்றும் அவரது விசைப்படகையும், அதில் இருந்த ஜான்முத்து (44), பவுல்ராஜ் (55), லவ்சன் (52) மற்றும் தங்கச்சிமடத்தை சேர்ந்த ஆல்ட்ரின் விசைப்படகு அதிலிருந்த தொன் போஸ்கோ (60), அந்தோணி (45), செல்வராஜ் (62) ஆகிய ஆறு பேரும் நெடுந்தீவு அருகே வைத்து இலங்கை கடற்படையினர் கைது செய்தனர்.

அவர்களை யாழ்ப்பாணம் மீன்வளத்துறை அதிகாரிகள் ஊர்காவல் துறை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். அப்போது வழக்கை விசாரித்த நீதிபதி நளினி சுபாஸ்கரன், மீனவர்களை வருகிற மார்ச் 5-ந்தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவிட்டார். இதையடுத்து மீனவர்கள் ஆறு பேரும் யாழ்ப்பாணம் சிறையில் அடைக்கப்பட்டனர்.

இதேபோன்று ராமேசுரம் பேக்கரும்பு பகுதியைச் சேர்ந்த முனியேந்திரன் என்பவருக்கு சொந்தமான விசைப்படகில் ஜோதி ராஜன் (55), படகு ஓட்டுநர் ராமு (62) அருள்ராஜ் (60) கென்னடி (57) ஆகிய நான்கு பேரும் தலைமன்னார் தனுஷ்கோடி பகுதியில் மீன் பிடித்துக் கொண்டிருந்தபோது, அவர்களின் படகை பறிமுதல் செய்த இலங்கை கடற்படையினர் 4 மீனவர்களையும் கைது செய்து மன்னார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.

அப்போது வழக்கை விசாரித்த நீதிபதி ரபீக் மீனவர்களை வரும் மார்ச் 7-ந்தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவிட்டார். இதையடுத்து மீனவர்கள் 4 பேரும் வவுனியா சிறையில் அடைக்கப்பட்டனர். 

இதுபற்றி ராமேசுவரம் மீனவர் சங்கத் தலைவர் சகாயம் கூறியதாவது:- பிரதமர் நரேந்திர மோடி புதிய பாம்பன் தூக்கு பாலம் திறப்பு விழாவிற்கு வரும்பொழுது மீனவர்களை சந்திக்க வேண்டும். அவர் வருவதற்கு முன்பே இலங்கையில் உள்ள மீனவர்கள் அனைவரையும் விடுதலை செய்ய வேண்டும். தவறும் பட்சத்தில் வருகின்ற 28-ந்தேதி அனைத்து மீனவர்களையும் ஒன்றிணைத்து கடும் போராட்டம் நடத்துவோம்.

தமிழக முதல்வரை நான்கு முறை சந்தித்தோம். அவர் சந்திக்கும் ஒவ்வொரு முறையும் இலங்கையில் பிடிபட்ட படகுகளுக்கு ரூ.6 லட்சம், ரூ.5 லட்சம் என்று படகுகளுக்கு ஏற்றவாறு வழங்கினார். தற்பொழுது ரூ.360 கோடி செலவில் தங்கச்சிமடம் பகுதியில் படகுகளை நிறுத்தும் தூண்டில் வளைவு அமைப்பதற்கு உத்தரவிட்டுள்ளார். ஆனால் மத்திய அரசு எங்களை கண்டு கொள்வதே இல்லை. இவ்வாறு அவர் கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 4 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 4 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 8 months 4 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 4 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 10 months 4 weeks ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 10 months 4 weeks ago
View all comments

வாசகர் கருத்து