முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

இந்திய வம்சாவளியை சேர்ந்தவர்: எப்.பி.ஐ. புதிய இயக்குநராக காஷ் படேல் நியமனம்

வெள்ளிக்கிழமை, 21 பெப்ரவரி 2025      உலகம்
Kash-Patel 2025-02-21

Source: provided

அமெரிக்கா : அமெரிக்காவின் மத்திய புலனாய்வு அமைப்பான எப்.பி.ஐ.யின் இயக்குநராக இந்திய வம்சாவளியைச் சோ்ந்த காஷ் படேல் தேர்ந்தெடுக்கபட்டதற்கு ஹிந்தி பாடலைப் பகிர்ந்து டிரம்ப் உதவியாளர் வாழ்த்துத் தெரிவித்துள்ளார்.

அமெரிக்க செனட் அவையில் நடத்தப்பட்ட வாக்கெடுப்பில் காஷ் படேலின் நியமனத்துக்கு ஆதரவாக 51 வாக்குகளும் எதிராக 49 வாக்குகள் பதிவானது. இதனைத் தொடர்ந்து, எப்.பி.ஐ.யின் இயக்குநராக இந்திய வம்சாவளியைச் சேர்ந்த காஷ் படேலின் நியமனத்துக்கு ஒப்புதல் பெறப்பட்டது. செனட் அவை கூட்டத்தில் காஷ் படேலின் நியமனத்துக்கு ஜனநாயகக் கட்சியினர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இவரது நியமனத்திற்கு உலகம் முழுவதும் பலரும் வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில், அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்பின் உதவியாளர் டான் ஸ்கேவினோ தெரிவித்துள்ள வாழ்த்து இணையத்தில் வைரலாகி வருகிறது.

பாஜிராவ் மஸ்தானி படத்தில் ‘மல்ஹரி’ என்ற பாடல் மிகவும் பிரபலமானது. அந்தப் பாடலில் ஆடும் ரன்வீர் சிங் முகத்தில் காஷ் படேலின் முகத்தை எடிட் செய்த விடியோவை டிரம்ப் உதவியாளர் பகிர்ந்துள்ளார். அந்தப் பதிவில், எப்.பி.ஐ.யின் புதிய இயக்குநராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட காஷ் படேலுக்கு வாழ்த்துகள் எனப் பதிவிட்டுள்ளார். இந்தப் பதிவு பலராலும் பகிரப்பட்டு வருகின்றது. டொனால்ட் டிரம்ப் அதிபர் தேர்தலில் மீண்டும் வெற்றி பெற்றபோது இதே விடியோவில் அவரது முகம் எடிட் செய்து பகிரப்பட்டு வைரலானது குறிப்பிடத்தக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 4 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 4 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 8 months 4 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 4 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 10 months 4 weeks ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 10 months 4 weeks ago
View all comments

வாசகர் கருத்து