முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தேசிய கல்விக்கொள்கை என்ற பெயரில் தமிழ்நாட்டில் இந்தி மொழியை திணிப்பது அரசியல் இல்லையா? - கடலூர் விழாவில் மத்திய அரசுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கேள்வி

வெள்ளிக்கிழமை, 21 பெப்ரவரி 2025      தமிழகம்
CM 2024-05-31

Source: provided

கடலூர் : கல்விக்கொள்கை என்ற பெயரில் இந்தியை திணிப்பது அரசியல் இல்லையா? என்று கடலூரில் நடந்த அரசு விழாவில் மத்திய அரசுக்கு கேள்வி எழுப்பிய முதல்வர் மு.க.ஸ்டாலின், தேசிய கல்விக் கொள்கை மூலம் நமது பிள்ளைகள் படிப்பதை தடுக்க முயற்சி செய்வதாக மத்திய அரசு மீது முதல்வர் மு.க.ஸ்டாலின் குற்றஞ்சாட்டினார்.

கடலூர் பயணம்....

புதிய திட்டப்பணிகளுக்கு அடிக்கல் நாட்டி, முடிவுற்ற பணிகளை திறந்து வைக்கவும், அரசு நலத்திட்ட உதவிகள் வழங்குவதற்காகவும் முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று கடலூர் சென்றார். அங்குள்ள மஞ்சக்குப்பம் பகுதியில் நடைபெற்ற விழாவில் 44,690 பயனாளிகளுக்கு ரூ.387 கோடி மதிப்பிலான அரசு நலத்திட்ட உதவிகளை முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார். ரூ.384.41 கோடி மதிப்பிலான புதிய திட்டங்களுக்கும் அவர் அடிக்கல் நாட்டினார். சுமார் ரூ.704 கோடி மதிப்பிலான முடிவுற்ற திட்டங்களையும் அவர் தொடங்கி வைத்தார்.

புதிய அரசு கல்லூரி...

இதன் பின்னர் நிகழ்ச்சியில் பேசிய முதல்வர் மு.க.ஸ்டாலின், "பண்ரூட்டி தொகுதியில் சட்டமன்ற உறுப்பினர் வேல்முருகனின் கோரிக்கையை ஏற்று 15 கோடி ரூபாய் செலவில் அரசு கலை, அறிவியல் கல்லூரி அமைக்கப்படும். முட்லூர்-சேத்தியாத்தோப்பு இருவழிச்சாலை நான்கு வழிச்சாலையாக 50 கோடி ரூபாய் மதிப்பீட்டில் மேம்படுத்தப்படும்" என்பன உள்ளிட்ட பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டார். தொடர்ந்து அவர் பேசியதாவது;-

அரசியல் இல்லையா?

தேசிய கல்விக் கொள்கை மூலம் நமது பிள்ளைகள் படித்து முன்னேறுவதை தடுக்க முயற்சி செய்கிறார்கள். கல்வியில் அரசியல் செய்ய வேண்டாம் என்று மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் அறிவுரை கூறுகிறார். கல்வியில் அரசியல் செய்வது நீங்களா? நாங்களா? மும்மொழிக் கொள்கையை ஏற்றுக்கொண்டால்தான் கல்வித்துறைக்கு தர வேண்டிய நிதியை தருவோம் என்று மிரட்டுவதற்குப் பெயர் அரசியல் இல்லையா? 

ஒரு மொழி நாடாக... 

கல்விக்கொள்கை என்ற பெயரில் இந்தியை திணிப்பது அரசியல் இல்லையா? பல மொழிகள் கொண்ட இந்திய நாட்டை ஒரு மொழி நாடாக மாற்ற நினைப்பது அரசியல் இல்லையா? ஒரு திட்டத்திற்கான நிதியை இன்னொரு திட்டத்தை ஏற்றுக்கொள்வதற்கான நிபந்தனையாக மாற்றுவது அரசியல் இல்லையா?

ஒரு நொடி போதும்... 

நாங்கள் மக்கள் நலத்திட்டங்களுக்காக அரசின் நிதியை செலவு செய்பவர்கள். நீங்கள் அரசின் நிதியை மதவெறிக்காகவும், இந்தி, சமஸ்கிருத திணிப்பிற்காகவும் செலவு செய்யக் கூடியவர்கள். தமிழ்நாட்டில் இருந்து மத்திய அரசு வாங்கிக் கொண்டிருக்கும் வரியை தரமுடியாது என்று சொல்ல எங்களுக்கு ஒரு நொடி போதும் என்பதை மறந்துவிட வேண்டாம். கொடுத்துப் பெறுவதுதான் கூட்டாட்சி தத்துவம். அதைக் கூட புரிந்து கொள்ளாதவர்கள் இந்தியாவை ஆள்வதுதான் மிகப்பெரிய சாபக்கேடு. தேசிய கல்விக் கொள்கை என்பது கல்வியை வளர்ப்பதற்காக அல்ல, இந்தியை வளர்ப்பதற்காக கொண்டு வரப்பட்டுள்ளது.

எங்களுக்கு தெரியும்... 

தாய்மொழியை வளர்க்கப்போவதாக மத்திய அமைச்சசர் தர்மேந்திர பிரதான் கூறுகிறார். தாய்மொழி தமிழை வளர்க்க எங்களுக்கு தெரியும். இந்தி மொழியால் தங்கள் தாய்மொழியை தொலைத்துவிட்டு நிற்பவர்களிடம் கேட்டுப்பாருங்கள். தேன் கூட்டில் கல் எரிய வேண்டாம் என்று மத்திய அரசை எச்சரிக்கிறேன். தமிழர்களின் தனித்துவமான குணத்தை மறுபடியும் பார்க்க வேண்டும் என்று ஆசைப்படாதீர்கள். தமிழுக்கும், தமிழ்நாட்டிற்கும், தமிழினத்திற்கும் எதிரான எந்த செயல்பாடுகளும் நான் இருக்கும் வரை, தி.மு.க. இருக்கும் வரை இந்த மண்ணில் வர முடியாது. மக்கள் முன்னேற்றம் ஒருபக்கம், அதற்கான தடைகளை உடைப்பது மறுபக்கம் என இருபாதை பாய்ச்சலை தமிழக அரசு நடத்தி வருகிறது. இதுபோன்ற தடைகள் எங்களுக்கு புதிது அல்ல. மக்கள் ஆதரவுடன் வெற்றி என்றும் தொடரும். இவ்வாறு முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசினார். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 4 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 4 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 8 months 4 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 4 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 10 months 4 weeks ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 10 months 4 weeks ago
View all comments

வாசகர் கருத்து