முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கூட்டநெரிசல் வீடியோக்களை நீக்க எக்ஸ் தளத்துக்கு ரெயில்வே நோட்டீஸ்

வெள்ளிக்கிழமை, 21 பெப்ரவரி 2025      இந்தியா
Tairn 2023-05-25

புதுடில்லி, டெல்லி ரெயில் நிலைய  கூட்டநெரிசல் வீடியோக்களை நீக்க  எக்ஸ் தளத்துக்கு ரெயில்வே நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

உத்தரப் பிரதேசத்தில் நடக்கும் மகா கும்பமேளாவுக்குச் செல்ல டெல்லி ரெயில் நிலையத்தில் கடந்த பிப்ரவரி 15 ஆம் தேதி இரவு அதிக பயணிகள் கூடினர். அப்போது ஏற்பட்ட கூட்டநெரிசலில் சிக்கி 18 பேர் உயிரிழந்தனர். சிறப்பு ரெயில் வரும் பிளாட்பார்மை கடைசி நேரத்தில் மாற்றி அறிவித்ததும், வரம்புக்கு அதிகமாக பொது டிக்கெட்டுகளை விற்றதுமே கூட்டநெரிசலுக்குக் காரணம் என்று தெரியவந்துள்ளது.

இந்நிலையில் எக்ஸ் சமூக ஊடகத்தில் டெல்லி ரெயில் நிலைய கூட்டநெரிசல் தொடர்பான வீடியோக்களை அகற்ற இந்திய ரெயில்வே நோட்டீஸ் அனுப்பி உள்ளது. கூட்ட நெரிசலின் வீடியோக்களைக் கொண்ட 285 சமூக ஊடக இணைப்புகளை குறிப்பிட்டு அதை நீக்குமாறு அந்த நோட்டீசில் கூறப்பட்டுள்ளது.

பல முன்னணி செய்தி நிறுவனங்களின் இணைப்பும் இதில் அடங்கும். கண்டதை பிப்ரவரி 17 ஆம் தேதி அனுப்பட்ட இந்த நோட்டீசில் எக்ஸ் தளத்துக்கு 36 மணிநேரம் கெடு விதிக்கப்பட்டது தற்போது பொது வெளியில் தெரியவந்துள்ளது.

இதுபோன்ற வீடியோக்களைப் பகிர்வது பொதுமக்களிடையே அமைதியின்மைக்கு வழிவகுக்கும் என்றும் ரெயில்வே செயல்பாடுகளை சீர்குலைக்கும் என்று அந்த நோட்டீசில் கூறப்பட்டுள்ளது. இறந்த நபர்களை இவ்வாறு சித்தரிப்பது தொந்தரவை ஏற்படுத்தும் வகையில் உள்ளது என்றும் ரெயில்வே தெரிவித்துள்ளது.  

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 4 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 4 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 8 months 4 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 4 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 10 months 4 weeks ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 10 months 4 weeks ago
View all comments

வாசகர் கருத்து