முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

உ.பி. மகாகும்பமேளாவில் கவர்னர் ரவி புனித நீராடல்

சனிக்கிழமை, 22 பெப்ரவரி 2025      இந்தியா
RN-Ravi-2025-02-22

பிரயாக்ராஜ், பிரயாக்ராஜில் நடைபெறும் மகாகும்பமேளாவில் தமிழ்நாடு கவர்னர் ஆர்.என்.ரவி நேற்று (சனிக்கிழமை) புனித நீராடினார்.

இதுகுறித்து கவர்னர் மாளிகை வெளியிட்டுள்ள எக்ஸ் தளப் பதிவில், பாரதம் மற்றும் உலகம் முழுவதிலும் இருந்து வந்த எண்ணற்ற கோடிக்கணக்கான ஹிந்துக்களுடன் சேர்ந்து, பிரயாக்ராஜின் புண்ணிய தீர்த்தமான திவ்ய, பவ்ய மகாகும்பத்தில் புனித நீராடி, தமிழ்நாட்டின் சகோதர, சகோதரிகளின் நல்வாழ்வுக்காகவும், நமது மாபெரும் தேசமான பாரதத்தின் இணக்கமான வளத்துக்காகவும் வேண்டி வழிபட்டேன்.

இங்கு காற்றில் பரவியுள்ள தீவிரமான நேர்மறை சக்தி அனைவரையும் ஆழமாகத் தொட்டு, மற்றவர்களுடன் இணைக்கிறது. சுமார் 60 கோடி சனாதனிகள் ஏற்கெனவே புனித நீராடிய இந்த தனித்துவமான மற்றும் பிரம்மாண்டமான சனாதன தர்ம விழா, மறுமலர்ச்சியடைந்த ஒரே பாரதம் உன்னத பாரதத்தின் உறுதியான சான்றாகும். இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

உலக அளவில் மிகப் பெரிய ஆன்மிக-கலாசார நிகழ்வாக கருதப்படும் மகா கும்பமேளா, பிரயாக்ராஜில் கங்கை, யமுனை, சரஸ்வதி ஆகிய நதிகள் கூடும் திரிவேணி சங்கமத்தில் கடந்த ஜனவரி 13-ஆம் தேதி முதல் நடைபெற்று வருகிறது. இந்தியா மற்றும் வெளிநாடுகளில் இருந்து இதுவரை 55 கோடிக்கும் மேற்பட்டோா் வருகை தந்து புனித நீராடியுள்ளனா்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 3 hours ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 3 hours ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 9 months 5 hours ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 9 months 5 hours ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 11 months 3 hours ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 11 months 4 hours ago
View all comments

வாசகர் கருத்து