முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தமிழ்நாட்டுக்கும், தமிழுக்கும் வேட்டு வைக்கும் தேசிய கல்விக்கொள்கை திட்டத்தில் ரூ.10,000 கோடி கொடுத்தாலும் கையெழுத்திடவே மாட்டேன் : கடலூர் அரசு விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆவேசம்

சனிக்கிழமை, 22 பெப்ரவரி 2025      தமிழகம்
cm 2024-12-03

Source: provided

கடலூர் : தமிழ்நாட்டுக்கும் தமிழுக்கும் வேட்டு வைக்கும் திட்டம்தான் தேசியக் கல்விக் கொள்கை திட்டம் என்று குற்றஞ்சாட்டிய முதல்வர் மு.க.ஸ்டாலின், ரூ.10,000 கோடி கொடுத்தாலும் தேசிய கல்விக் கொள்கை திட்டத்தில் கையெழுத்திட மாட்டேன் என்று கடலூர் மாவட்டம் விருத்தாச்சலத்தில் நடைபெற்ற பெற்றோரை கொண்டாடுவோம் அரசு நிகழ்ச்சியில் திட்டவட்டமாக தெரிவித்தார்.

செய்ய மாட்டேன்...

விருத்தாசலத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசிய முதல்வர் மு.க.ஸ்டாலின், தமிழ்நாட்டுக்கும் தமிழுக்கும் வேட்டு வைக்கும் திட்டம்தான் தேசியக் கல்விக்கொள்கை. அதில், ரூ.10 ஆயிரம் கோடி கொடுத்தாலும், ரூ.10 ஆயிரம் கோடி பணம் கிடைக்கும் என்றாலும் அதில் கையெழுத்திட மாட்டேன். கையெழுத்திடும் அந்த பாவத்தை முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் செய்ய மாட்டான்.

தடுப்பதில்லை... 

நாங்கள் இந்தி மொழிக்கு எதிரி அல்ல, அதைப் படிப்பதை தமிழ்நாடு ஒரு போதும் தடுப்பதில்லை. தமிழன் என்று ஒரு இனம் உண்டு. அவர்களுக்கு என்று ஒரு குணம் உண்டு என்பதை தமிழ்நாடு காட்டிவிடும். எங்கள் மொழியை அழிக்க நினைத்தால், ஆதிக்கம் செலுத்த நினைத்தால் விட மாட்டோம்.மொழித் திணிப்புக்கு எதிராக 80 ஆண்டுகளுக்கும் மேலாக போராடி வருகிறோம். சமஸ்கிருதத்துக்கு ரூ.1488 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. 8 கோடி பேர் பேசும் தமிழுக்கு ரூ.74 கோடியை மத்திய அரசு ஒதுக்கியிருக்கிறது என்று கூறினார்.

ரூ.200 கோடி....

தொடர்ந்து பேசிய அவர், அனைவருக்கும் கல்வி என்ற அடிப்படையில் அந்த இலக்கை மையமாக கொண்டு, கொரோனா காலத்தில் கற்றல் இடைவெளி, குறைபாடு ஏற்பட்டதை மனதில் கொண்டு, உருவாக்கப்பட்டதுதான் இல்லம் தேடிக் கல்வி திட்டம். 38 மாவட்டங்களில் 1 இலட்சத்து 8 ஆயிரம் தன்னார்வலர்களால் 30 இலட்சம் மாணவர்கள் பயனடைந்திருக்கிறார்கள். இந்த திட்டத்திற்காக 200 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டது.

சிறந்த திட்டமாக... 

80 ஆயிரத்து 138 கல்வி மையங்கள் தொடங்கப்பட்டது. அனைவரையும் பள்ளிகளை நோக்கி வரவைக்கும் கல்வியில் சிறந்த திட்டமாக இது தொடங்கப்பட்டது. அதன் நோக்கத்தை முழுமையாக நிறைவேற்றியும் காட்டியது தான் இந்தத் திட்டம். புதிய செயலி மூலமாக பள்ளி செல்லாத 1 இலட்சத்து 88 ஆயிரத்து 487 குழந்தைகள் கண்டறியப்பட்டு உரிய வகுப்பில் சேர்த்து பயிற்சிகள் வழங்கியிருக்கிறோம். பள்ளிகளில் படிக்கும் 16 இலட்சம் மாணவர்கள் பயன்பெறும் வகையில் “எண்ணும் எழுத்தும் இயக்கம்” தொடங்கப்பட்டிருக்கிறது.

மாதிரிப்பள்ளிகள்... 

கல்வியில் பின்தங்கிய மாவட்டங்களில் மாதிரிப் பள்ளிகள் தொடங்கப்பட்டிருக்கிறது. இது போன்ற பல்வேறு திட்டங்களின் மூலமாக, பள்ளிக்கல்வி செழுமை பெற்று வருகிறது. இதையெல்லாம் சொல்வது யாரு? மத்திய அரசின் அறிக்கைகள். மத்திய அரசின் பொருளாதார ஆய்வறிக்கையில், தமிழ்நாட்டின் கல்வித் தரத்தை மனதார பாராட்டி இருக்கிறார்கள். ஒரு பக்கம் நம்மை பாராட்டினாலும், இன்னொரு பக்கம் தமிழ்நாட்டுக்குத் தர வேண்டிய நிதியை தர மறுக்கிறார்கள் என்று முதல்வர் ஸ்டாலின் கூறினார் .

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 3 hours ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 3 hours ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 9 months 5 hours ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 9 months 5 hours ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 11 months 3 hours ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 11 months 4 hours ago
View all comments

வாசகர் கருத்து