எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

Source: provided
நடப்பு சாம்பியன்ஸ் டிராபி தொடரில் பாகிஸ்தான் அணியை இந்தியா வீழ்த்தும் என முன்னாள் கேப்டன் சவுரவ் கங்குலி கணித்துள்ளார். ஏனெனில் சுப்மன் கில் போன்ற திறமையான வீரர்கள் இந்திய அணியில் நிறைந்திருப்பதாக கங்குலி தெரிவித்துள்ளார். எனவே இந்தத் தொடர் முழுவதிலும் சிறப்பாக விளையாடி கோப்பையை வெல்லும் அணியாக இந்தியா இருப்பதாகவும் அவர் கூறியுள்ளார். இது குறித்து அவர் பேசியது பின்வருமாறு:- "இந்திய அணியில் 1 முதல் 5 வரை 5 சுப்மன் கில்கள் இருக்கிறார்கள். அதாவது அந்த இடத்தில் விளையாடும் நமது அனைத்து பேட்ஸ்மேன்களும் சதத்தை அடித்து வெற்றி பெற்றுக் கொடுக்கக் கூடியவர்கள். அக்சர் படேல் 5வது இடத்தில் விளையாடினால் நீங்கள் இந்திய அணியில் இருக்கும் திறமையின் ஆழத்தை கற்பனை செய்து பாருங்கள்.
பாகிஸ்தானுக்கு எதிராக மட்டும் இந்தியா வெற்றி பெறக்கூடிய அணியாக இல்லை. இத்தொடர் முழுவதையும் அவர்கள் வெல்லும் அணியாக இருக்கிறார்கள். எனவே இந்த போட்டியில் வெற்றி பெறுவது பாகிஸ்தானுக்கு எளிதாக இருக்காது. நமது ஸ்பின்னர்கள் முக்கிய பங்காற்றுவார்கள். இந்தியா அதே பவுலிங் கலவையுடன் விளையாடும் என்று நம்புகிறேன். துபாயில் வெற்றி பெறுவதற்கு ஸ்பின்னர்கள் தேவை. அங்குள்ள ஆடுகளத்தில் பந்து கொஞ்சம் திரும்பும் என்று எனக்கு தெரியும். ஆனால் பாகிஸ்தான் சுழலை நன்றாக எதிர்கொள்ள மாட்டார்கள். இந்தியாவிடம் தரமான ஸ்பின்னர்கள் இருக்கிறார்கள்" என்று கூறினார்.
__________________________________________________________________________________
இந்தியா - பாக். போட்டி நேரலை
சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடரில் இந்தியா - பாகிஸ்தான் இடையேயான போட்டியைக் காண மெரினா, பெசன்ட் நகர் கடற்கரைகளில் சிறப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடரில் துபையில் இன்று (பிப்ரவரி 23) நடைபெறவுள்ள போட்டியில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் விளையாடவுள்ளன. முதல் போட்டியில் வங்கதேசத்தை வீழ்த்திய உத்வேகத்துடன் இந்திய அணி களமிறங்குகிறது. முதல் போட்டியில் நியூசிலாந்திடம் தோல்வியடைந்த நிலையில், இன்றைய போட்டியில் வெற்றி பெற்றாக வேண்டும் என்ற கட்டாயத்தில் பாகிஸ்தான் அணி களம் காண்கிறது.
இந்தியா - பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான போட்டிக்கு எதிர்பார்ப்பு எழுந்துள்ள நிலையில், இரு அணிகளுக்கும் இடையிலான போட்டியை மெரினா மற்றும் பெசன்ட் நகர் கடற்கரைகளில் நேரலையில் ஒளிபரப்ப தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் ஏற்பாடு செய்துள்ளது முக்கியத்துவம் பெறுகிறது. இது தொடர்பாக தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில் அதன் எக்ஸ் வலைத்தளப் பக்கத்தில் பதிவிடப்பட்டுள்ளதாவது: துபையில் இன்று நடைபெறவுள்ள இந்தியா - பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான போட்டியை மெரினா மற்றும் பெசன்ட் நகர் கடற்கரைகளில் நேரலையில் ஒளிபரப்ப தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் ஏற்பாடு செய்துள்ளது. பொதுமக்கள் அவர்களது நண்பர்கள் மற்றும் குடும்பத்தினருடன் போட்டியை கண்டு களிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள் எனப் பதிவிடப்பட்டுள்ளது.
__________________________________________________________________________________
கிரிக்கெட் மீதான காதல்: டோனி
இந்திய கிரிக்கெட் அணியின் வெற்றிகரமான கேப்டன்களில் ஒருவராக போற்றப்படுபவர் மகேந்திரசிங் டோனி. சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து கடந்த 2019-ம் ஆண்டு முழுமையாக ஓய்வு பெற்ற அவர் தற்போது ஐ.பி.எல். தொடரில் மட்டும் விளையாடி வருகிறார். கடந்த ஐ.பி.எல். தொடரே அவரது கடைசி தொடர் என்று அனைவரும் நினைத்த வேளையில் அடுத்த சீசனிலும் அவர் விளையாட உள்ளது ரசிகர்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இந்நிலையில் கடினமான ஐ.பி.எல். தொடரில் வயதிற்காக எந்த கருணையும் கிடைக்காது என்று டோனி தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் பேசியது பின்வருமாறு:-
வருடத்தில் நான் சில மாதங்கள் மட்டுமே விளையாடுகிறேன். ஆனால் அதை விளையாட தொடங்கிய கால கட்டத்தை போல் மகிழ்ச்சியுடன் விளையாடுகிறேன். அதுவே என்னைத் தொடர்ந்து விளையாட வைக்கிறது. சர்வதேச கிரிக்கெட்டை நான் விளையாடத் தொடங்கியபோது நாட்டுக்காக விளையாட வேண்டும் என்பதே என்னுடைய மிகப்பெரிய உத்வேகமாக இருந்தது. ஏனெனில் கிரிக்கெட்டைப் பற்றி பெரிய பின்புலம் இல்லாத மாநிலத்தில் இருந்த வந்த எனக்கு ஒரு முறை வாய்ப்பு கிடைத்ததும் நாட்டுக்காக பங்காற்ற விரும்பினேன். எனக்கு நாடு மட்டுமே முக்கியமாக இருக்கும். நானும் நம் நாட்டின் வெற்றி பெற்ற அணியில் அங்கமாக இருக்க விரும்பினேன். இப்போது நான் சர்வதேச கிரிக்கெட்டில் ஓய்வு பெற்று விட்டேன். அது அப்படியே இருக்கும் என்று சொல்ல முடியாது. ஆனாலும் இந்த விளையாட்டின் மீதான எனது காதல் அப்படியே தான் இருக்கும்" என்று கூறினார்.
__________________________________________________________________________________
பாக்.கில் ஒலித்த இந்திய தேசிய கீதம்
சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடரில் லாகூரில் நேற்று நடைபெற்ற ஆஸ்திரேலியா-இங்கிலாந்து அணிகள் போட்டியின் போது இங்கிலாந்து அணியின் தேசிய கீதம் ஒலிப்பதற்கு பதிலாக இந்தியாவின் தேசிய கீதம் ஒலித்தது.
சிறிது ஒலித்த பிறகு சுதாரித்த கொண்ட டிஜே இந்திய தேசிய கீதத்தை நிறுத்தி விட்டு இங்கிலாந்து அணியின் தேசிய கீதத்தை ஒலிக்க செய்தார். இந்திய தேசிய கீதம் ஒலித்த போது ரசிகர்கள் ஆக்ரோசமாக கத்தினார். இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்![]() 5 months 10 hours ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்![]() 5 months 6 days ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.![]() 5 months 3 weeks ago |
-
மும்மொழிக் கொள்கையில் எங்கும் இந்தி கட்டாயம் என்று கூறப்படவில்லை: மத்திய அமைச்சர் எல்.முருகன் விளக்கம்
22 Feb 2025நாமக்கல் : “மும்மொழிக் கொள்கையின் எந்த இடத்திலும் இந்தி கட்டாயம் என சொல்லவில்லை” என்று மத்திய தகவல் - ஒலிபரப்புத் துறை இணையமைச்சர் எல்.முருகன் கூறியுள்ளார்.
-
ரயில் டிரைவர்கள் இளநீர் அருந்த தடை: உத்தரவை வாபஸ் பெற்றது இந்திய ரயில்வே நிர்வாகம்
22 Feb 2025திருவனந்தபுரம் : லோகோ பைலட்கள் பணியின் போது இளநீர், இருமல் டானிக் உள்ளிட்டவற்ற சாப்பிட கூடாது என்ற உத்தரவை ரயில்வே நிர்வாகம் திரும்ப பெற்றது.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 22-02-2025.
22 Feb 2025 -
ஆளும் ‘பிக்பாஸ்’களுக்காக உழைப்பவர்: கமல்ஹாசன் மீது த.வெ.க. கடும் விமர்சனம்
22 Feb 2025சென்னை, இனியாவது ஆளும் ‘பிக்பாஸ்’களுக்காக உழைக்காமல் மக்களுக்கு உண்மையாக உழையுங்கள் என ம.நீ.ம. தலைவர் கமல்ஹாசனை த.வெ.க.
-
வரும் 26-ம்தேதி ஈஷா மகா சிவராத்திரி விழா: அமித்ஷா, டி.கே.சிவகுமார் பங்கேற்பு
22 Feb 2025கோவை, கோவை ஈஷா யோக மையத்தில் மகா சிவராத்திரி விழா இம்மாதம் 26-ம் தேதி நடைபெறுகிறது.
-
நா.த.க.வில் இருந்து காளியம்மாள் விலகல்?
22 Feb 2025சென்னை, நாம் தமிழர் கட்சியின் பெண்கள் பாசறை மாநில ஒருங்கிணைப்பாளர் காளியம்மாள் அக்கட்சியில் இருந்து விலகவுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
-
பகவத் கீதை மீது பிரமாணம் செய்து எப்.பி.ஐ. புதிய இயக்குநராக பதவியேற்றார் காஷ் படேல்
22 Feb 2025அமெரிக்கா : அமெரிக்க எப்.பி.ஐ. இயக்குநராக இந்திய வம்சாவளியைச் சேர்ந்த காஷ் படேல், பகவத் கீதை மீது சத்தியப் பிரமாணம் செய்து பதவியேற்றுக்கொண்டார்.
-
திருட்டு வழக்குகளில் ஞானசேகரன் கைது
22 Feb 2025சென்னை : அண்ணா பல்கலை மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கில் கைதாகி புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ள ஞானசேகரனை 7 திருட்டு வழக்குகளில் கைது செய்து 3 நாள் காவலில் எடுத்து பள்ளி
-
தியாகராஜர் பாகவர் சிலைக்கு அ.தி.மு.க. சார்பில் மரியாதை : இ.பி.எஸ். அறிவிப்பு
22 Feb 2025சென்னை : மறைந்த நடிகரும் பழம்பெரும் பாடகருான எம்.கே.தியாகராய பாகவதரின 116 வது பிறந்தநாள் விழா அ.தி.மு.க. சார்பில் கொண்டாடப்படும் என்று அ.தி.மு.க.
-
ஹமாஸ் ஒப்படைத்தது இஸ்ரேலிய பெண் பணய கைதியின் சடலம்தான் : உறுதி செய்த குடும்பத்தினர்
22 Feb 2025இஸ்ரேல் : ஹமாஸ் படையினர் ஒப்படைத்தது இஸ்ரெலிய பெண்ணின் சடலம் தான் என அவரது குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.
-
விமானத்தில் உடைந்த இருக்கை: மத்திய அமைச்சரிடம் மன்னிப்பு கேட்டது ஏர் இந்தியா நிறுவனம்
22 Feb 2025புதுடெல்லி, போபாலில் இருந்து டெல்லிக்கு ஏர் இந்தியா விமானத்தில் பயணித்த மத்திய வேளாண் அமைச்சர் சிவராஜ் சிங் சவுகானுக்கு உடைந்த இருக்கை வழங்கப்பட்ட நிலையில், அது குறித்த
-
கேரளத்தில் தாமரை மலரும்: மத்திய அமைச்சர் நம்பிக்கை
22 Feb 2025கொச்சி : கேரளத்தில் பா.ஜ.க. வெற்றி பெறும் என்று மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் நம்பிக்கையுடன் தெரிவித்தார்.
-
பாகிஸ்தான் சிறையில் இருந்து 22 இந்திய மீனவர்கள் விடுதலை
22 Feb 2025இஸ்லமாபாத், பாகிஸ்தான் சிறையில் இருந்து 22 இந்திய மீனவர்கள் விடுதலை செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
-
மெட்ரோ ரயில் சேவையில் மாற்றம்
22 Feb 2025சென்னை : விம்கோ நகர் ரயில் நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் காரணமாக சென்னை மெட்ரோ ரயில் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
-
தக் லைப் நாயகன் குறித்து பதிலளித்த கமல்
22 Feb 2025சென்னை : தான் நடித்துள்ள தக் லைப் படத்தின் நாயகன் கதாபாத்திரம் குறித்து நடிகர் கமல் ஹாசன் பேசியுள்ளார்.
-
த.வெ.க. ஆண்டு விழாவில் 2,000 பேருக்கு மட்டுமே அனுமதி..?
22 Feb 2025சென்னை, சென்னையில் நடைபெறும் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் ஆண்டு விழாவில் 2,000 பேருக்கு மட்டுமே அனுமதி வழங்கப்படவிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
-
மெக்சிகோ கடல் பகுதியில் கரை ஒதுங்கிய ‘டூம்ஸ் டே’ மீன்கள்: பேரழிவுக்கான அறிகுறி என அச்சம்
22 Feb 2025மெக்சிகோ சிட்டி, மெக்சிகோ கடல் பகுதியில் ‘டூம்ஸ் டே’ (இறுதி நாள்) மீன்கள் என்றழைக்கப்படும் அரிய வகை ‘ஓர்’ மீன்கள் கரை ஒதுங்கியுள்ளது மக்களை அச்சத்தில் ஆழ்த்தியுள்
-
ஆப்கனில் அடுத்தடுத்து நிலநடுக்கம்
22 Feb 2025ஆப்கானிஸ்தான் : ஆப்கானிஸ்தானில் அடுத்தடுத்து இரண்டு முறை நிலநடுக்கம் ஏற்பட்டதாகத் தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது.
-
மணிப்பூரில் தடை செய்யப்பட்ட இயக்கத்தை சேர்ந்த 8 பேர் கைது
22 Feb 2025மணிப்பூர் : மணிப்பூரில் தடை செய்யப்பட்ட இயக்கத்தை சேர்ந்த 6 பேர் உள்பட 8 பேரை பாதுகாப்பு படையினர் கைது செய்தனர்.
-
நாகை - இலங்கை இடையே மீண்டும் பயணிகள் கப்பல் போக்குவரத்து தொடக்கம்
22 Feb 2025நாகப்பட்டினம், நாகை - இலங்கை இடையே நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பயணிகள் கப்பல் போக்குவரத்து மீண்டும் தொடங்கியது.
-
எந்த ஆதிக்க மொழி நினைத்தாலும் தமிழ் மொழியை அழிக்க அனுமதிக்க மாட்டோம் : கடலூரில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பேச்சு
22 Feb 2025கடலூர், : எந்த ஆதிக்க மொழி நினைத்தாலும் தமிழ் மொழியை அழிக்க அனுமதிக்க மாட்டோம் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
-
மகாசிவராத்ரியை முன்னிட்டு சென்னை, பெங்களூருவில் இருந்து கூடுதலாக சிறப்பு பஸ்கள் இயக்கம்
22 Feb 2025சென்னை : மகாசிவராத்ரியை முன்னிட்டு சென்னை, பெங்களூருவில் இருந்து சிறப்பு பஸ்கள் இயக்கப்படும் என்று போக்குவரத்து கழகம் அறிவித்துள்ளது.
-
தி.மு.க. தேர்தல் வாக்குறுதிகளில் 20 சதவீதம் மட்டுமே நிறைவேற்றம்: ஓ.பன்னீர்செல்வம் குற்றச்சாட்டு
22 Feb 2025சென்னை, தி.மு.க.
-
10 ஆண்டுகளாக ஒருவேளை மட்டும்தான்: தனது உணவு முறை குறித்து மனந்திறந்த முகமது ஷமி..!
22 Feb 2025துபாய் : 10 ஆண்டுகளாக தான் ஒரு வேளை மட்டுமே உணவு உண்பதாக இந்திய வேகப் பந்து வீச்சாளர் முகமது ஷமி தெரிவித்துள்ளார்.
-
மொரிஷியஸ் தேசிய தின விழா: பங்கேற்கிறார் பிரதமர் மோடி
22 Feb 2025போர்ட் லூயிஸ், மொரிஷியஸ் நாட்டின் தேசிய தின கொண்டாட்டங்களில் பிரதமர் நரேந்திர மோடி சிறப்பு விருந்தினராகக் கலந்து கொள்ள இருப்பதாக அந்நாட்டின் பிரதமர் நவீன் ராம்கூல