முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அமைச்சர்கள் குழுவுடன் பேச்சு வார்த்தை: ஜாக்டோ-ஜியோ போராட்டம் வாபஸ்

திங்கட்கிழமை, 24 பெப்ரவரி 2025      தமிழகம்
Jek-Jeo 2025-02-10

Source: provided

சென்னை : அமைச்சர்களுடனான ஆலோசனை கூட்டத்துக்குப்பின், இன்று  அறிவிக்கப்பட்டிருந்த போராட்டம் தற்காலிகமாக வாபஸ் பெறப்படுவதாக அரசு ஊழியா்கள்-ஆசிரியா் சங்க நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர்.

தமிழ்நாடு அரசு அலுவலா் சங்கங்களின் கோரிக்கைகளைப் பரிசீலித்து அவற்றின் மீது உரிய முடிவுகளைக் காணும் வகையில், அமைச்சா்கள் அடங்கிய குழுவை அமைத்து முதல்வா் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளாா். இந்தக் குழுவில் பொதுப் பணித் துறை அமைச்சா் எ.வ.வேலு, நிதித் துறை அமைச்சா் தங்கம் தென்னரசு, பள்ளிக் கல்வித் துறை அமைச்சா் அன்பில் மகேஸ், மனிதவள மேலாண்மைத் துறை அமைச்சா் கயல்விழி செல்வராஜ் ஆகியோா் இடம்பெற்றுள்ளனா்.

இதனிடையே, அரசு தரப்புடனான நேற்றைய பேச்சுவார்த்தை குறித்து ஜாக்டோ ஜியோ நிர்வாகிகள் குழுவினர்  செய்தியாளர்களுடன் பேசினர். அப்போது பேசிய ஜாக்டோ ஜியோ தலைவர் அமிர்த குமார், தமிழக அரசு கடந்த சட்டப்பேரவைத் தேர்தல் வாக்குறுதி அளித்திருந்தபடி, ஆட்சிக்கு வந்தவுடன் பழைய ஓய்வூதியத் திட்டத்தை நிறைவேற்றுவோம் என்று தெரிவித்திருந்தார்கள். ஆனால், இன்று வரை அந்த கோரிக்கையை நிறைவேற்றவில்லை.

இந்த நிலையில், இவ்விவகாரத்தில் முதல்வர் நல்ல முடிவை எடுப்பார் என்று நம்புவதாகவும், ஆலோசனை கூட்டத்துக்குப்பின் இந்த விவகாரத்தில் அடுத்தக்கட்ட போராட்டத்தை முன்னெடுக்கலாமா என்பது குறித்து முடிவெடுப்போம் என்றார். இதனிடையே, இன்று பிப்ரவரி 25-ஆம் தேதி மறியல் போராட்டத்திற்கும் ஜாக்டோ ஜியோ அழைப்பு விடுத்திருந்தது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில், அரசு ஊழியா்கள், ஆசிரியா் சங்கங்களின் கோரிக்கைகள் குறித்து சங்க நிா்வாகிகளுடன் அரசு அமைத்துள்ள அமைச்சா்கள் குழு, தலைமைச் செயலகத்தில் நேற்று பேச்சுவாா்த்தை நடத்தினர். 

அமைச்சர்களுடனான ஆலோசனை கூட்டத்துக்குப்பின் செய்தியாளர்களுடன் பேசிய ஜாக்டோ ஜியோ சங்க நிர்வாகிகள் கூரியதாவது: பேச்சுச்சாவர்த்தையின் போது, காலிப்பணியிடங்களை போர்க்கால அடிப்படையில் நிரப்ப வேண்டும்,  ஊதிய முரண்களை களைய வேண்டும், மதிப்பூதியத்தில் பணி செய்வோரை பணி நிரந்தரம் செய்ய வேண்டும், பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்த வேண்டும் உள்ளிட்ட 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி உள்ளோம்.

மேலும், சட்டப்பேரவை பட்ஜெட் கூட்டத்தொடர் தொடங்குவதற்கு முன் (மார்ச் 14) கோரிக்கைகளை நிறைவேற்றுவது குறித்து எடுக்கப்படவுள்ள முடிவை தெரிவிக்க வலியுறுத்தியுள்ளோம் என்றும் தெரிவித்துள்ளனர்.  தங்கள் தரப்பு கோரிக்கைகளை முதல்வரின் கவனத்துக்கு எடுத்துச் செல்வதாக அமைச்சர்கள் கூறியுள்ளார்கள்.

இந்த நிலையில்,  10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி அரசு ஊழியா்கள்-ஆசிரியா் சங்கங்கள் அறிவித்திருந்த போராட்டம் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்படுவதாக ஆலோசனை கூட்டத்துக்குப்பின் தெரிவிக்கப்பட்டுள்ளது. அமைச்சர்களுடனான ஆலோசனை கூட்டத்துக்குப்பின், இன்று (பிப். 25) அறிவிக்கப்பட்டிருந்த போராட்டம் தற்காலிகமாக வாபஸ் பெறப்படுவதாக அரசு ஊழியா்கள்-ஆசிரியா் சங்க நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 2 days ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 2 days ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 9 months 2 days ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 9 months 2 days ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 11 months 2 days ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 11 months 2 days ago
View all comments

வாசகர் கருத்து