எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

Source: provided
சென்னை : ஆதிக்கத்தை எதிர்ப்பதும், தாய்மொழியைக் காப்பதும் தி.மு.க. தொண்டர்களின் ரத்தத்தில் ஊறிய உணர்வு. உயிர் அடங்கும் வரை அந்த உணர்வு அடங்காது. ஆதிக்க மொழியிடமிருந்து அன்னைத் தமிழைக் காக்கும் நம்பிக்கையுடன்தான் இன்னொரு மொழிப் போர்க்களத்தை நாம் எதிர்கொள்ளத் தயாராக இருக்கிறோம். என்று தி.மு.க. தொண்டர்களுக்கு அக்கட்சியின் தலைவரும், தமிழக முதல்வருமான ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.
இதுதொடர்பாக தி.மு.க. தொண்டர்களுக்கு அவர் எழுதியுள்ள கடிதத்தில்,“இந்தியை அவர்கள் திணித்துக் கொண்டே இருக்கிறார்கள். நாம் எதிர்த்துக்கொண்டே இருக்கிறோம். ஆதிக்கத்துக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வரை ஆதிக்கத்துக்கு எதிரான போராட்டம் தொடரும் என்று நான் உறுதி அளிக்கிறேன்.வடக்கின் ஆதிக்கத்துக்கு வால் பிடிக்கும் அந்த விஷமக் கூட்டம் நம்மை நோக்கி கேட்கின்ற முதல் கேள்வி, ‘இந்தியா முழுவதும் உள்ள மாநிலங்கள் எல்லாம் இந்தியை ஏற்றுக்கொண்டிருக்கும்போது, தமிழகம் மட்டும் ஏற்க மறுப்பது ஏன்?’ என்பதுதான்.
பானை ஓடுகளில் தொடங்கி, இன்றைய அறிவியல் தொழில்நுட்பத்தின் வியக்கத்தக்க வளர்ச்சியான செயற்கை நுண்ணறிவு வரை தமிழ் மொழி தன் சீரிளமைத் திறம் குறையாமல் செழித்து வளர்ந்திருப்பதற்குக் காரணம், ஆதிக்க மொழியை என்றென்றும் எதிர்த்து நிற்கும் தமிழர்களின் போராட்டக் குணம்தான். தமிழ் மொழியை ஆதிக்க மொழிகளிடம் அடிமைப்படுத்திவிடாமல் காத்து-வளர்த்து, தமிழர்களின் திறனை மேம்படுத்தியதன் விளைவாகத்தான் தமிழகம் இன்று பல இலக்குகளிலும் உயர்ந்து நிற்பதை மத்திய அரசின் புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.
இந்திய பாராளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட பொருளாதார ஆய்வறிக்கை பெருமையுடன் குறிப்பிடுகிறது. நாம் எந்த மொழிக்கும் எதிரியில்லை. யார் எந்த மொழியைக் கற்பதற்கும் தடையாக நிற்பதில்லை. அதே நேரத்தில், தாய்மொழியாம் தமிழை அழிக்க நினைக்கும் ஆதிக்க மொழி எதுவாக இருந்தாலும் அதை அனுமதிப்பதில்லை என்பதால்தான் இருமொழிக் கொள்கையைக் கடைப்பிடிக்கிறோம்.
மொழிக்கொள்கையில் தமிழகம் வகுத்துள்ள பாதையும், அதன் உறுதியான நிலைப்பாடுமே சரி என்பதை நமது அண்டை மாநிலங்கள் தொடங்கி, இந்தியாவின் பல மாநிலங்களும் உணர்ந்து வருவதுடன், அதை உரக்க வெளிப்படுத்தும் காலமாகவும் இது அமைந்துள்ளது. தமிழகத்தை வஞ்சிப்பதையே பாஜக தன் கொள்கையாகக் கொண்டுள்ளது. தமிழகத்தில் உள்ள பாஜக நிர்வாகிகளோ தமிழுக்குத் துரோகம் செய்யும் இந்தி- சமஸ்கிருதச் சேவகர்களாக இருக்கிறார்கள்.
இந்த மண்ணில் இடக்கினைச் செய்ய நினைக்கும் எதிரியாக ஆரியமோ, ஆதிக்க இந்தியோ- சமஸ்கிருதமோ எதுவாக இருந்தாலும், எத்தனை கோடியை மத்திய அரசு கொட்டிக் கொடுத்தாலும் அவற்றை ஏற்க மாட்டோம். இது இன்பத் தமிழ்நாடு. இங்கே ஆதிக்கத்துக்கு இடமில்லை ஓடு என்று துணிந்து சொல்லும் வலிமை நமக்கு உண்டு. ஆதிக்கத்தை எதிர்ப்பதும், தாய்மொழியைக் காப்பதும் தி.மு.க. தொண்டர்களின் ரத்தத்தில் ஊறிய உணர்வு. உயிர் அடங்கும் வரை அந்த உணர்வு அடங்காது.
தமிழக மக்களிடமிருந்து வரியைப் பெற்றுக்கொண்டு, தமிழக மாணவர்களின் கல்விக்கான நிதியை ஒதுக்காமல் மத்திய பாஜக அரசு வஞ்சித்து வரும் போக்கை தமிழகத்தின் பள்ளி மாணவர்களும்கூட தெளிவாக உணர்ந்திருக்கிறார்கள். கடந்த 21, 22 ஆகிய தேதிகளில் கடலூர் மாவட்டத்தில் பல்வேறு நிகழ்வுகளில் பங்கேற்றதுடன், பெற்றோர்-ஆசிரியர் மாநாட்டில் கலந்து கொண்டு பேசும்போது, மத்திய அரசு நமக்கு நிதி தர மறுப்பதை ஆதாரத்துடன் சுட்டிக்காட்டி, “10ஆயிரம் கோடி தந்தாலும் இந்தியைத் திணிக்கும் தேசிய கல்விக் கொள்கையை ஏற்கமாட்டோம்” என உறுதியுடன் தெரிவித்தேன்.
இதனைக் கேட்ட கடலூரைச் சேர்ந்த சிறுமி நன்முகை, “மத்திய அரசு நிதி தரலைன்னா என்ன, நான் தருகிறேன்” என்று தன்னுடைய சேமிப்புப் பணமான 10 ஆயிரம் ரூபாயை காசோலையாக அனுப்பி நெகிழ வைத்திருக்கிறார். தன்னுடைய தாத்தாவும் பாட்டியும் தமிழாசிரியர்கள் என்பதையும் குறிப்பிட்டு, ‘தமிழ் வாழ்க’ என்று தன் உணர்வையும் காணொலியாக வெளியிட்டுள்ளார். இதுதான் தமிழக மக்களின் உணர்வு.
ஒரு நன்முகை அல்ல, ஒரு கோடிக்கும் அதிகமான இளம் நன்முகைகள் இந்த மண்ணில் இருக்கிறார்கள். இளம் வயதினர் முதல் மூத்த குடிமக்கள் வரை தமிழ் மண்ணில் வாழ்கின்றவர்களின் தாய்மொழிப் பற்றும் இன உணர்வும் ஆதிக்க மொழியிடமிருந்து அன்னைத் தமிழைக் காக்கும் என்ற உறுதியான நம்பிக்கை எனக்கு இருக்கிறது. அந்த நம்பிக்கையுடன்தான் இன்னொரு மொழிப் போர்க்களத்தை நாம் எதிர்கொள்ளத் தயாராக இருக்கிறோம்.
இந்தப் போரில் ஒருபோதும் சமரசமில்லை. இத்தனை உறுதியாக ஏன் எதிர்க்கிறோம் இந்தித் திணிப்பை என்பதை எதிரிகளுக்காக மட்டுமல்ல, இளந்தலைமுறையினரும் புரிந்துகொள்வதற்கான முதல் மடல் இது. தொடர்ச்சியாக மடல் எழுதுவேன்,” என்று முதல்வர் ஸ்டாலின் கூறியுள்ளார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்![]() 5 months 3 days ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்![]() 5 months 1 week ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.![]() 5 months 4 weeks ago |
-
தமிழகத்தில் வரும் 28-ம் தேதி ஒன்பது மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு
24 Feb 2025சென்னை : தமிழகத்தில் வருகிற 28-ம் தேதி தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை உள்ளிட்ட 9 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
போட்டியை கட்டுப்படுத்துவதே அணியில் என்னுடைய வேலை: விராட் கோலி வெளிப்படை
24 Feb 2025துபாய் : அதிகப்படியான ரிஸ்க் இல்லாமல் போட்டியை கடைசி வரை கட்டுப்படுத்துவதே அணியில் என்னுடைய வேலை என்று விராட் கோலி தெரிவித்துள்ளார்.
-
கோலி- கில் ஜோடி அபார ஆட்டம்: தோல்வி குறித்து பாகிஸ்தான் கேப்டன் முகமது ரிஸ்வான்
24 Feb 2025துபாய் : கோலி- கில் ஜோடி ஆட்டத்தை தங்களிடம் இருந்து பறித்து விட்டதாக பாகிஸ்தான் கேப்டன் முகமது ரிஸ்வான் கூறினார்.
துபாயில்...
-
முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து
24 Feb 2025சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட் போட்டியின் 5-ஆவது ஆட்டத்தில் இந்தியா 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் பாகிஸ்தானை ஞாயிற்றுக்கிழமை வீழ்த்தியது.
-
சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் லீக் ஆட்டம்: பாகிஸ்தானை வீழ்த்தி இந்தியா அபார வெற்றி : சதமடித்த விராட் கோலி ஆட்ட நாயகன்
24 Feb 2025துபாய் : சாம்பியன்ஸ் டிராபி தொடரில் பாகிஸ்தானுக்கு எதிரான லீக் போட்டியில் இந்திய அணி 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
-
ஐ.எஸ்.எல். கால்பந்து தொடர்: ஒடிசாவை வீழ்த்தி மோகன் பகான் வெற்றி
24 Feb 2025கொல்கத்தா : கொல்கத்தாவில் நடைபெற்ற ஐ.எஸ்.எல். கால்பந்து லீக் ஆட்டத்தில் மோகன் பகான் அணி ஒடிசா எப்.சி. அணியை தோற்கடித்தது.
-
அழுத்தங்கள் அதிகரிக்கும் போது அசத்துவதே விராட் கோலியின் முத்திரை: சித்து புகழாரம்
24 Feb 2025மும்பை : வெற்றிகரமாக சேசிங் செய்யப்பட்ட போட்டிகளில் விராட் கோலி அழுத்தத்தை எந்தளவுக்கு கையாள்கிறார் என்பதை புரிய வேண்டும்.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 25-02-2025.
25 Feb 2025 -
சதத்தின் விளிம்பில் நின்ற கோலியிடம் ரோஹித் சொன்னது என்ன? ருசிகர தகவல்
24 Feb 2025துபாய் : சதத்தின் விளிம்பில் நின்ற கோலிக்கு ரோகித் சர்மா கொடுத்த ரியாக்ஷன் சமூகத்தளங்களில் வைரலாகியுள்ளது.
-
மார்ச் 5-ல் அனைத்து கட்சி கூட்டத்தில் ஆலோசனை : முதல்வர் மு.க.ஸ்டாலின் அழைப்பு
25 Feb 2025சென்னை : தமிழகத்தில் இருக்கக்கூடிய 8 எம்.பி.
-
மேட்டூர் அணையிலிருந்து குடிநீருக்காக நீர் திறப்பு
25 Feb 2025மேட்டூர் : மேட்டூர் அணையிலிருந்து தண்ணீர் திறப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.
-
தங்கம் விலை மீண்டும் உச்சம்
25 Feb 2025சென்னை : சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை நேற்று (பிப். 25) சவரனுக்கு ரூ.160 உயர்ந்து ஒரு சவரன் ரூ.64,600-க்கும் புதிய உச்சத்தைத் தொட்டு விற்பனையானது.
-
வங்கக் கடலில் நிலநடுக்கம்
25 Feb 2025ஒடிசா : ஒடிசா அருகே வங்கக் கடலில் நேற்று காலை நிலநடுக்கம் ஏற்பட்டதாக தேசிய நில அதிர்வு ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
-
உ.பி. மகா கும்பமேளா இன்றுடன் நிறைவு
25 Feb 2025லக்னோ : மகா கும்பமேளா புதன்கிழமையுடன் நிறைவுபெறும் நிலையில், கூட்டத்தைக் கட்டுப்படுத்த கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது.
-
விமான நிலையத்தில் அமைச்சர் அன்பில் மகேஸ், ரஜினிகாந்த் திடீர் சந்திப்பு
25 Feb 2025சென்னை : சென்னை விமான நிலையத்தில் நடிகர் ரஜினி காந்த் அமைச்சர் அன்பில் மகேஸ் சந்தித்து பேசினர்.
-
கனடாவில் புதிய விசா விதிமுறைகள்: இந்திய மாணவர்களுக்கு பாதிப்பு
25 Feb 2025கனடா : கனடாவில் வெளிநாட்டினர் குடியேறுவதை தடுக்க விசா வழங்குவதில் புதிய விதிமுறைகளை அறிவித்துள்ளது.
-
காணாமல் போன மலேசிய விமானம்: 11 ஆண்டுகளுக்கு பின்பு தேடுதல் பணி துவக்கம்
25 Feb 2025மலேசியா : மலேசிய விமானம் மர்மமான முறையில் மாயமாகி 11 ஆண்டுகள் நிறைவடைந்ததைத் தொடர்ந்து மீண்டும் அந்த விமானத்தை தேடும் வேட்டையில் மலேசிய அரசு தொடங்கியுள்ளது.
-
ரஷ்ய படைகளை திரும்பப்பெற வேண்டும்: ஐ.நா. தீர்மானத்தை புறகணித்த இந்தியா உள்ளிட்ட 60 நாடுகள்
25 Feb 2025ஜெனீவா : உக்ரைனிலிருந்து ரஷ்ய படைகளை திரும்பப்பெற வலியுறுத்தி ஐ.நா.வில் கொண்டுவரப்பட்ட தீர்மானத்தை இந்தியா புறக்கணித்துள்ளது.
-
மும்மொழிக் கொள்கை விவகாரம்: பா.ஜ.க.வில் இருந்து ரஞ்சனா நாச்சியார் விலகல்
25 Feb 2025சென்னை : மும்மொழிக் கொள்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து பா.ஜ.க.வில் இருந்து ரஞ்சனா நாச்சியார் விலகியுள்ளார்.
-
த.வெ.க. 2-ம் ஆண்டு விழா: புதுச்சேரி முதல்வர் வாழ்த்து
25 Feb 2025புதுச்சேரி : இன்று நடைபெறவுள்ள த.வெ.க.ஆண்டு விழா சிறக்க வாழ்த்துகிறேன் என்று புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி கூறியுள்ளார்.
-
ஆதரவற்றோரை சுட்டுக்கொன்ற நபருக்கு 40 ஆண்டுகள் சிறை
25 Feb 2025லாஸ் வேகாஸ் : அமெரிக்காவில் ஆதரவற்றோரை சுட்டுக்கொன்றவருக்கு 40 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
-
நாம் இன்னொரு மொழிப்போரை எதிர்கொள்ள தயாராக உள்ளோம் : தொண்டர்களுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம்
25 Feb 2025சென்னை : ஆதிக்கத்தை எதிர்ப்பதும், தாய்மொழியைக் காப்பதும் தி.மு.க. தொண்டர்களின் ரத்தத்தில் ஊறிய உணர்வு. உயிர் அடங்கும் வரை அந்த உணர்வு அடங்காது.
-
எங்களை ஏமாற்றினால்... ஜாக்டோ ஜியோ அமைப்பு எச்சரிக்கை
25 Feb 2025சென்னை : எங்களை ஏமாற்றினால் 2026 தேர்தலில் தி.மு.க. அரசு ஏமாந்து போகும் என்று ஜாக்டோ ஜியோ அமைப்பினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
-
இந்திராகாந்தி குறித்த கருத்துக்கு எதிர்ப்பு: ராஜஸ்தான் காங் எம்.எல்.ஏ.க்கள் 3-வது நாளாக தொடர் போராட்டம்
25 Feb 2025ஜெய்ப்பூர் : ராஜஸ்தான் சட்டப்பேரவையில் மாநில அமைச்சர் ஒருவர், இந்திரா காந்தி குறித்து தெரிவித்த கருத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து அம்மாநில காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் மூன்
-
அதி.மு.க. எம்.எல்.ஏ. வீட்டில் சோதனை: எடப்பாடி பழனிசாமி கடும் கண்டனம்
25 Feb 2025சென்னை : தி.மு.க. நிர்வாகத் திறமையின்மையை மறைக்க, திசைதிருப்பவே கோவை வடக்கு அதி.மு.க. எம்.எல்.ஏ.