முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

டெல்லி புதிய கலால் கொள்கையால் அரசுக்கு ரூ.2 ஆயிரம் கோடி இழப்பு : தணிக்கை துறை அறிக்கை தாக்கல்

செவ்வாய்க்கிழமை, 25 பெப்ரவரி 2025      இந்தியா
Delhi-cm 2025-02-20

Source: provided

டெல்லி : டெல்லி புதிய கலால் கொள்கையால் அரசுக்கு ரூ.2 ஆயிரம் கோடி இழப்பு; தணிக்கை துறை அறிக்கை தாக்கல் செய்தது.

டெல்லி சட்டசபைக்கான தேர்தல் சமீபத்தில் நடந்து முடிந்தது. இதில், மொத்தமுள்ள 70 தொகுதிகளில் பெரும்பான்மைக்கு கூடுதலாக 48 இடங்களை பா.ஜ.க. கைப்பற்றி 27 ஆண்டுகளுக்கு பின்னர் மீண்டும் ஆட்சியமைத்தது. ஷாலிமர் பாக் தொகுதியில் போட்டியிட்டு எம்.எல்.ஏ.வாக வெற்றி பெற்ற, அக்கட்சியை சேர்ந்த ரேகா குப்தா (வயது 50) முதல்-மந்திரியாக பொறுப்பேற்று கொண்டார்.

டெல்லி அரசின் மதுபான கொள்கையில் நடைபெற்ற முறைகேடுகளால், ரூ.2,026 கோடி அளவுக்கு அரசுக்கு வருவாய் இழப்பு ஏற்பட்டது என இந்திய தணிக்கை மற்றும் கணக்கு துறையின் அறிக்கை இதற்கு முன்பு தெரிவித்து இருந்தது. கொள்கை விசயங்களில் இருந்து விலகி செல்லுதல், விற்பனை விலையில் வெளிப்படை தன்மை இல்லாத நிலை மற்றும் உரிமங்களை வழங்கியதில் விதிமீறல்கள் போன்றவை உள்ளன என தணிக்கை அறிக்கையில் குறிப்பிடப்பட்டு இருந்தன. இதனால், அரசு கஜானாவுக்கு ரூ.2,026 கோடி இழப்பு ஏற்பட்டது என அப்போது வெளியிடப்பட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டு இருந்தது. 

இந்நிலையில், டெல்லியில் முதல்-மந்திரியாக ரேகா குப்தா தலைமையிலான பா.ஜ.க. அரசு, டெல்லி மதுபான கொள்கை பற்றிய மத்திய தணிக்கை துறை அறிக்கை ஒன்றை சட்டசபையில் நேற்று தாக்கல் செய்து உள்ளது. ஆம் ஆத்மி ஆட்சி செய்த, 2017 முதல் 2021 வரையிலான 4 ஆண்டுகளை உள்ளடக்கிய அந்த அறிக்கையில், டெல்லியில், இந்தியாவில் உற்பத்தி செய்யப்பட்ட வெளிநாட்டு மதுபானம் மற்றும் வெளிநாட்டு மதுபானம் ஆகியவற்றின் விநியோகத்தில் முறைகேடுகள் நடந்துள்ளன என தெரிவிக்கப்பட்டு உள்ளது. 

இந்த அறிக்கையின்படி, தேசிய தலைநகர் டெல்லியில் மதுபான விநியோகம் பற்றி கலால் துறை மேற்கொண்ட கண்காணிப்பு மற்றும் சீரமைப்பு பணியில் பல்வேறு முறைகேடுகள் நடந்துள்ளன என்பது தெரிய வந்துள்ளது என அந்த தணிக்கை அறிக்கை தெரிவிக்கின்றது. இதனால், 2021-2022 கலால் கொள்கையின்படி, அரசுக்கு மொத்தத்தில் ரூ.2 ஆயிரம் கோடிக்கு கூடுதலாக நிதியிழப்பு ஏற்பட்டு உள்ளது என அறிக்கை தெரிவிக்கின்றது. 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 2 days ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 2 days ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 9 months 2 days ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 9 months 2 days ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 11 months 2 days ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 11 months 2 days ago
View all comments

வாசகர் கருத்து