முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கரும்பு கொள்முதல் விலை டன்னுக்கு ரூ.3,151 ஆக நிர்ணயம் செய்து தமிழ்நாடு அரசு உத்தரவு

செவ்வாய்க்கிழமை, 4 மார்ச் 2025      தமிழகம்
TN 2023-04-06

சென்னை, கரும்பு கொள்முதல் விலை டன்னுக்கு ரூ.3,151 ஆக நிர்ணயம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

2024-25ம் ஆண்டு பருவத்திற்கு கரும்புக்கான கொள்முதல் விலையாக டன்னுக்கு ரூ.3,151 நிர்ணயம் செய்து தமிழ்நாடு அரசு அரசிதழில் வெளியிட்டுள்ளது. அதில், 9.50 சதவீதம் அல்லது அதற்கு குறைவான சர்க்கரைத் திறன் கொண்ட கரும்புக்கு இந்த விலை நிர்ணயம் செய்யப்படும். 9.85 சதவீதம் சர்க்கரைத் திறன் கரும்புக்கு ரூ.3,267 ஆகவும், 10.10 சதவீதம் சர்க்கரைத் திறன் கொண்ட கரும்புக்கு ரூ.3,344.20 ஆகவும், 10.65 சதவீதம் சர்க்கரைத் திறன் கொண்ட கரும்புக்கு ரூ.3,532.80 ஆகவும் கொள்முதல் விலை நிர்ணயம் செய்யப்படும்.

கரும்பை பொறுத்தவரையில் ஒவ்வொரு பருவத்திற்கும் கொள்முதல் விலையை ஒன்றிய அரசு நிர்ணயம் செய்யும். அதனை அடிப்படையாகக் கொண்டு மாநில அரசு விலையை நிர்ணயம் செய்யும். மாநில அரசின் ஊக்கத்தொகையும் விரைவில் அறிவிக்கப்பட வாய்ப்பு உள்ளது. தமிழ்நாட்டில் கூட்டுறவுத்துறையின் கீழ் 12 சர்க்கரை ஆலைகளும், 2 பொதுத்துறை ஆலைகளும், 16 தனியார் ஆலைகளும் உள்ளன. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 1 week ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 1 week ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 9 months 1 week ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 9 months 1 week ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 11 months 1 week ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 11 months 1 week ago
View all comments

வாசகர் கருத்து