முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பாகிஸ்தானி என அழைப்பது குற்றமாகாது: சுப்ரீம் கோர்ட் பரபரப்பு தீர்ப்பு

செவ்வாய்க்கிழமை, 4 மார்ச் 2025      இந்தியா
Supreme-Court 2024-11-269

Source: provided

புதுடில்லி : பாகிஸ்தானி என்று அழைப்பது ரசிக்கக்கூடியதாக இல்லாமல் இருக்கலாம். ஆனால் அது மத உணர்வுகளை புண்படுத்தும் சட்டப்பிரிவின் கீழ் குற்றமாகாது என்று சுப்ரீம் கோர்ட் தெரிவித்துள்ளது.

ஜார்கண்டில் காஸ்  பகுதியில் உள்ள துணை கோட்ட அலுவலகத்தில் உருது மொழிபெயர்ப்பாளராகவும் தகவல் அறியும் உரிமைச் சட்ட மனுக்களை நிர்வகிக்கும் கிளார்க்காக இஸ்லாமியர் ஒருவர் பணியாற்றி வந்தார். தகவல் அறியும் உரிமைச்சட்டத்தின்கீழ் விண்ணப்பித்திருந்த நபர் ஒருவருக்கு  மேலதிகாரிகள் உத்தரவின் பேரில் கடந்த 2020 நவம்பரில் மனுதாரரை நேரடியாக கிளார்க் சந்தித்து ஆவணங்களை அளித்துள்ளார். ஆனால் அதை ஏற்க மறுத்து கிளார்க் உடன்  அந்த  நபர்  வாக்குவாதம் செய்துள்ளார்.

அப்போது இஸ்லாமியரான கிளார்க்கை அந்த நபர் மத அடையாளத்தைக் குறிப்பிட்டு 'மியான் - தியான்' என்றும் 'பாகிஸ்தானி' என்றும் கூறியுள்ளார். இது தனது மத உணர்வுகளை புண்படுத்தி தன்னை அவமதிக்கும் வகையில் இருந்ததாக கூறி கிளார்க் போலீசில் புகார் அளித்தார். தொடர்ந்து அதிகாரியை அவமதித்த மனுதாரர் மீது போலீசில் எப்.ஐ.ஆர். பதிவுசெய்யப்பட்டு விசாரணை நடைபெற்றது. 

இந்த வழக்கில் இருந்து தன்னை விடுவிக்கும்படி அந்த நபர் ஜார்கண்ட் உயர்நீதிமன்றத்தில் முறையீடு செய்தார். அனால் 2023இல் உயர்நீதிமன்றம் அவரின் மனுவை நிராகரித்தது. தொடர்ந்து அவர் சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்தார். இந்த மனு நேற்று  (செவ்வாய்க்கிழமை) சுப்ரீம் கோர்ட் நீதிபதிகள், பி.வி.நாகரத்னா, சதீஷ் சந்திர சர்மா ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது பேசிய நீதிபதிகள், ஒருவரை 'மியான் - தியான்', 'பாகிஸ்தானி' என்று அழைப்பது ரசிக்கக்கூடியதாக இல்லாமல்  இருக்கலாம். ஆனால் அது மத உணர்வுகளை புண்படுத்தும் சட்டப்பிரிவு 298 கீழ்வரும் குற்றமாகாது என்று கூறி கிளார்க்கிடம் மத ரீதியாக பேசிய நபரின் மீதான குற்ற வழக்கை ரத்து செய்து தீர்ப்பளித்தனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 1 week ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 1 week ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 9 months 1 week ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 9 months 1 week ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 11 months 1 week ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 11 months 1 week ago
View all comments

வாசகர் கருத்து