Idhayam Matrimony

இனி போராட போவதில்லை: நடிகை வெளியிட்ட வீடியோ

செவ்வாய்க்கிழமை, 4 மார்ச் 2025      சினிமா
Vijayalakshmi

சென்னை, எனக்கு நீதியும், நியாயமும் இந்த வழக்கில் கிடைக்காது என்பதை தெரிந்துகொண்டேன். இதில் இனிமேல் போராடும் அவசியம் எனக்கு கிடையாது என நடிகை விஜயலட்சுமி தெரிவித்துள்ளார்.

நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், தன்னை திருமணம் செய்துக்கொள்வதாக கூறி, பாலுறவு வைத்து ஏமாற்றியதாக வளசரவாக்கம் போலீசில் நடிகை விஜயலட்சுமி கடந்த 2011-ம் ஆண்டு புகார் செய்தார். அதன் அடிப்படையில் சீமான் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இந்த வழக்கை ரத்து செய்யக்கோரி, சென்னை ஐகோர்ட்டில் சீமான் மனு தாக்கல் செய்தார்.

இந்த வழக்கை விசாரித்த சென்னை ஐகோர்ட்டு,  வழக்கை ரத்துசெய்ய முடியாது என்றும் இந்த வழக்கில் போலீசார் 12 வார காலத்துக்குள் இறுதி அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் எனவும் உத்தரவிட்டு, சீமான் தாக்கல் செய்திருந்த மனுவை தள்ளுபடி செய்தார். ஐகோர்ட்டின் இந்த உத்தரவை எதிர்த்து, சீமான் சார்பில் வக்கீல் நிர்னிமேஷ் துபே சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்தார். இந்த மேல்முறையீடு மனுவை சுப்ரீம் கோர்ட்டு நீதிபதிகள் பி.வி.நாகரத்னா, சதீஷ் சந்திர சர்மா ஆகியோர் அடங்கிய அமர்வு நேற்று முன்தினம் விசாரித்தது.

சீமான் சார்பில் மூத்த வக்கீல் கோபால் சங்கரநாராயணன் ஆஜரானார். விசாரணையின் முடிவில் வழக்கை 12 வாரங்களுக்குள் புலன்விசாரணை செய்ய வேண்டும் என்ற சென்னை உத்தரவுக்கு இடைக்கால தடை விதிக்கிறோம். விசாரணையை மே 2-ந்தேதிக்கு தள்ளிவைக்கிறோம். 2 மாதங்களுக்குள் இந்த விவகாரத்துக்கு பேசி முடிவு காணட்டும் என்று  நீதிபதிகள், தெரிவித்தனர். மேலும் இது தொடர்பாக புகார்தாரரும், தமிழ்நாடு அரசும் பதில் அளிக்க வேண்டும் என்று உத்தரவிட்டனர்.

இந்தநிலையில், இது குறித்து நடிகை வெளியிட்டுள்ள புதிய வீடியோவில், சென்னை ஐகோர்ட்டில் எனது வழக்கை ரத்து செய்ய சொல்லி சீமான் வழக்கு தொடுத்தபோது காவல்துறை தரப்பில் வழக்கறிஞர் வாதாடினார்கள்.  அதேபோல சுப்ரீம் கோர்ட்டில் சீமானின் மேல்முறையீடு செய்தபோது என் சார்பாக ஏன் யாரும் வாதாட முன் வரவில்லை.  எனக்கு நீதியும், நியாயமும் இந்த வழக்கில் கிடைக்காது என்பதை தெரிந்துகொண்டேன். இதை தாண்டி நான் எந்த போராட்டமும் நான் செய்யபோவதில்லை.  எனவே இதில் இனிமேல் போராடும் அவசியம் எனக்கு கிடையாது. இதுவரை மக்கள் எனக்கு கொடுத்த ஆதரவுக்கு நன்றி. இதுதான் எனது கடைசி வீடியோ என்றார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 1 week ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 1 week ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 9 months 1 week ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 9 months 1 week ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 11 months 1 week ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 11 months 1 week ago
View all comments

வாசகர் கருத்து