முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சீனாவின் ராணுவ பட்ஜெட் உயர்வு

செவ்வாய்க்கிழமை, 4 மார்ச் 2025      உலகம்
China 2024 07 31

Source: provided

சீனா : பாதுகாப்பு மற்றும் பலத்தின் மூலமாகவே அமைதியை நிலைநாட்டமுடியும் என்று தெரிவித்துள்ள சீனா ராணுவ பட்ஜெட்டை இந்தாண்டு அதிகரித்துள்ளதாகக் கூறப்படுகிறது.

சீனா தனது பட்ஜெட்டை நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கவுள்ள நிலையில் அதன் பாதுகாப்பு செலவினங்களை அதிகரித்துள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்தப் பட்ஜெட்டை சீன அதிபர் லீ கியாங் வெளியிடவுள்ளார். கடந்தாண்டு சீனாவின் ராணுவ பட்ஜெட் 7.2% உயர்த்தப்பட்டு ரூ. 20 லட்சம் கோடியாக மதிப்பிடப்பட்டது. இது இந்தியாவின் ராணுவ பட்ஜெட்டை விட மூன்று மடங்கு அதிகமாகும். மேலும், சீனா தொடர்ந்து தனது ஆயுதப் படைகளை நவீனமாக்கி வருகின்றது.

விமானம் தாங்கி கப்பல்கள், நவீன கடற்படைக் கப்பல்கள் மற்றும் நவீன விமானங்களை வேகமாக கட்டியெழுப்பும் சீன இராணுவத்தின் பட்ஜெட் குறித்த தகவல்கள் உலக அரங்கில் ராணுவ நவீனமயமாக்கலை சந்தேகத்துடன் பார்க்கவைக்கின்றன. இந்தச் செலவினங்கள் குறித்துப் பேசிய சீன அரசின் செய்தித் தொடர்பாளர் லாவ் கிஞ்சின் ”பாதுகாப்பு மற்றும் பலத்தால் மட்டுமே அமைதியை நிலைநாட்ட முடியும். வலுவான பாதுகாப்பு கட்டமைப்புகளுடன் சீனா தனது இறையாண்மை, வளர்ச்சி நலன்களை சிறப்பாகப் பாதுகாக்க முடியும். உலகின் முக்கிய நாடாக அதன் சர்வதேச பொறுப்புகளைச் சரிவரக் கையாள்வதன் மூலம் உலக அமைதி மற்றும் நிலைத்தன்மையை சீனா பாதுகாக்கும் என்று தெரிவித்துள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 1 week ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 1 week ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 9 months 1 week ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 9 months 1 week ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 11 months 1 week ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 11 months 1 week ago
View all comments

வாசகர் கருத்து