முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஐக்கிய அரபு அமீரகத்தில் கேரளாவை சேர்ந்த இருவருக்கு மரண தண்டனை நிறைவேற்றம்

வியாழக்கிழமை, 6 மார்ச் 2025      உலகம்
Cort 2023 07-15

Source: provided

துபாய்: ஐக்கிய அரபு அமீரகத்தில் கேரளாவைச் சேர்ந்த இருவருக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டது.

கண்ணூரைச் சேர்ந்த முகமது ரினேஷ் என்பவர் அல் அய்ன் எனும் டிராவல் ஏஜென்சியில் வேலை செய்து வந்தார். இவர் ஐக்கிய அரபு அமீரகத்தைச் சேர்ந்த ஒருவரை கொலை செய்த வழக்கில் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டார். அதேபோல, கேரளாவைச் சேர்ந்த மற்றொரு நபரான முரளிதரன் என்பவருக்கு, இந்தியர் ஒருவரை கொலை செய்த சம்பவத்தில் தொடர்பிருப்பது தெரிய வந்தது.

இதையடுத்து, இருவருக்கும் மரண தண்டனை விதிக்கப்பட்டது. இது குறித்து இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன் பிறகு, முகமது ரினேஷ் மற்றும் முரளிதரன் ஆகியோரை அதிகாரிகள் தூக்கிலிட்டனர். ஐக்கிய அரபு அமீரகத்தில் இதுவரையில் 28 இந்தியர்களுக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது. கடந்த 3-ம் தேதி குழந்தையை கொன்ற குற்றத்திற்காக உத்தரபிரதேசத்தைச் சேர்ந்த பெண் தூக்கிலிடப்பட்டார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 1 week ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 1 week ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 9 months 1 week ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 9 months 1 week ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 11 months 1 week ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 11 months 1 week ago
View all comments

வாசகர் கருத்து