முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஒருவர் கூட பாதுகாப்பாக இருக்க முடியாது: ஹமாஸுக்கு ட்ரம்ப் இறுதி எச்சரிக்கை

வியாழக்கிழமை, 6 மார்ச் 2025      உலகம்
Trump

Source: provided

வாஷிங்டன்: மீதமுள்ள அனைத்து பிணைக் கைதிகளையும் விடுவிக்கா விட்டால், ஒருவர்கூட பாதுகாப்பாக இருக்க முடியாது  என்று ஹமாஸ் குழுவுக்கு அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் இறுதி எச்சரிக்கை விடுத்துள்ளார்.

இதுகுறித்து தனது ட்ரூத் சமூக வலை பக்கத்தில் ட்ரம்ப் வெளியிட்டுள்ள பதிவில், “ஷாலோம் ஹமாஸ் என்றால் ‘ஹலோ’ அல்லது ‘குட்பை’ என்று அர்த்தம். விருப்பத்தை நீங்களே தேர்வு செய்யலாம். இப்போதே உங்களிடம் மீதமுள்ள அனைத்து பிணைக் கைதிகளையும் விடுதலை செய்ய வேண்டும். அதேபோல் உங்களால் கொல்லப்பட்ட அனைவரின் உடல்களையும் உடனடியாக ஒப்படைக்கவேண்டும்.  அனைத்தையும் முடிக்க தேவையான எல்லா உதவிகளையும் நான் இஸ்ரேலுக்கு அனுப்புகிறேன். நான் கூறியபடி நீங்கள் செய்யாவிட்டால், ஹமாஸ் குழுவில் ஒருவர்கூட பாதுகாப்பாக இருக்கமுடியாது

உங்களால் வாழ்க்கை சீரழிக்கப்பட்ட உங்களின் முன்னாள் பிணைக் கைதிகளை நான் இப்போது தான் சந்தித்தேன். இது உங்களுக்கான இறுதி எச்சரிக்கை! . காசா மக்களைப் பொறுத்தவரை உங்களுக்கு அழகான எதிர்காலம் காத்திருக்கிறது. ஹமாஸ்கள் காசாவை விட்டு வெளியேறும் நேரம் இது.  இப்போதே பிணைக்கைதிகளை விடுதலை செய்யுங்கள் அல்லது அதற்காக பின்னர் கூலி கொடுக்க வேண்டியது இருக்கும்” என்று தெரிவித்துள்ளார்.

 கடந்த 2023 அக்டோபர் 7ம் தேதி தாக்குதலில் பிடித்துச் செல்லப்பட்ட மீதமுள்ள அனைத்து பிணைக் கைதிகளையும் உடனடியாக விடுவிக்கா விட்டால், நினைத்துப் பார்க்க முடியாத விளைவுகளை சந்திக்க வேண்டியது இருக்கும் என்ற இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகுவின் எச்சரிக்கையைத் தொடர்ந்து ட்ரம்ப் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

ஹமாஸ் வசம் மீதமுள்ள பிணைக் கைதிகளில் ஐந்து அமெரிக்கர்கள் இருப்பதாக நம்பப்படுகிறது. அவர்களில் நான்கு பேர் உயிரிழந்திருக்கலாம், ஒருவர் மட்டுமே உயிருடன் இருக்கலாம் என்றும் நம்பப்படுகிறது.

ட்ரம்பின் எச்சரிக்கைக்கு ஹமாஸ் எதிர்வினை: பாலஸ்தீனியர்களுக்கு எதிரான அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்பின் தொடர்ச்சியான அச்சுறுத்தல் என்பது, காசா போர் நிறுத்த ஒப்பந்தத்தில் இருந்து பின்வாங்கும், காசா மக்கள் மீதான முற்றுகையை, பட்டினியைத் தீவிரப்படுத்த முயலும் இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவுக்கு ஆதரவு அளிப்பதேயாகும் என்று தெரிவித்துள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 1 week ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 1 week ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 9 months 1 week ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 9 months 1 week ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 11 months 1 week ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 11 months 1 week ago
View all comments

வாசகர் கருத்து