முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பாக். திருடிய ஆக்கிரமிப்பு பகுதியை மீட்டு விட்டால் காஷ்மீர் பிரச்சனை தீர்ந்து விடும் அமைச்சர் ஜெய்சங்கர் பதில்

வியாழக்கிழமை, 6 மார்ச் 2025      உலகம்
Jaishankar 2023 06 08

Source: provided

லண்டன்: பாகிஸ்தான் திருடிய பகுதியை மீட்டு விட்டால் காஷ்மீர் பிரச்சனை தீர்ந்து விடும்  என வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் கூறியுள்ளார். 

பிரிட்டன், அயர்லாந்து நாடுகளுக்கு 6 நாட்கள் அரசுமுறைப் பயணமாகச் சென்றுள்ளார் வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர். முன்னதாக லண்டனில் பிரிட்டன் வெளியுறவு அமைச்சர் டேவிட் லேமியின் செவனிங் ஹவுஸில் இருதரப்பு ஆலோசனையில் கலந்து கொண்டார்.  தொடர்ந்து, லண்டனில் உள்ள சவுதம் ஹவுஸில் நடைபெற்ற கலந்துரையாடல் நிகழ்ச்சியில் காஷ்மீர் பிர்ச்சினை, ட்ரம்ப் வரிவிதிப்பு, சீன உறவு உள்ளிட்ட பல்வேறு விவகாரங்கள் குறித்தும் பேசினார்.

காஷ்மீர் பிரச்சினைக்கு ட்ரம்ப் உதவியை நாடி பிரதமர் மோடி தீர்வுகாண முடியுமா என்ற கேள்விக்கு பதிலளித்தபோது, “காஷ்மீரில், பெரும்பாலானவற்றை நாங்கள் சிறப்பாகச் சரிசெய்துள்ளோம். 370-வது சட்டப் பிரிவை நீக்கியது அதில் முதல் படி. அங்கே வளர்ச்சி, பொருளாதார நடவடிக்கைகள், சமூக நீதியை மீட்டெடுத்தது இரண்டாவது நகர்வு. மிக அதிகப்படியான வாக்குப்பதிவுடன் நடத்தப்பட்ட தேர்தல் மூன்றாவது படியாகும். நாங்கள் காத்திருக்கும் பகுதி, சட்டவிரோத பாகிஸ்தான் ஆக்கிரமிப்பில் உள்ள காஷ்மீரின் 'திருடப்பட்ட' பகுதியைத் திரும்பப் பெறுவது என்று நினைக்கிறேன். அது முடிந்ததும், காஷ்மீர் பிரச்சினை முற்றிலுமாக தீர்க்கப்படும்.

காஷ்மீரில் நிலவும் மனித உரிமைப் பிரச்சினைகளில் சில விஷயங்களில் அரசு கூடுதல் கவனம் செலுத்துவதும், தீர்வு காண்பதும் அவசியமாக இருக்கலாம். ஆனால் உலகளவில் ஒப்பிட்டுப் பார்த்தால் இந்தியா மனித உரிமைகளைப் பேணுவதில் வலுவாக இருக்கிறது.” என ஜெய்சங்கர் பதிலளித்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 1 week ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 1 week ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 9 months 1 week ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 9 months 1 week ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 11 months 1 week ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 11 months 1 week ago
View all comments

வாசகர் கருத்து