முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ரூபாய் நோட்டில் உள்ள மொழிகள் அனைத்தையும் இந்தியாவின் ஆட்சிமொழியாக அறிவிக்க தயக்கம் காட்டுவது ஏன்? மத்திய அரசுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கேள்வி

வியாழக்கிழமை, 6 மார்ச் 2025      தமிழகம்
stalin 2025-01-06

Source: provided

சென்னை: ரூபாய் நோட்டில் உள்ள இந்தியை அழிப்பீர்களா என்று எங்களைப் பார்த்து கேட்கும் அதிமேதாவிகளான உங்களைப் பார்த்து நாங்கள் கேட்கிறோம், ரூபாய் நோட்டில் அச்சிடப்பட்டுள்ள மொழிகள் அனைத்தையும் இந்தியாவின் ஆட்சிமொழியாக அறிவிக்கத் தயக்கம் ஏன்? தமிழ் மீது பிரதமர் உள்ளிட்ட ஒன்றிய பாஜக ஆட்சியாளர்களுக்கு உண்மையான அக்கறை இருக்குமானால் உயர்தனிச் செம்மொழி என்ற தகுதியுடைய எங்கள் தாய்மொழியை ஆட்சிமொழியாக்கிட எது தடுக்கிறது?” என திமுக தொண்டர்களுக்கு எழுதியுள்ள கடிதத்தில் ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார்.

திமுக தலைவரும், தமிழக முதல்வருமான மு.க.ஸ்டாலின், திமுக தொண்டர்களுக்கு எழுதியுள்ள 9-வது கடிதத்தின் விவரம்: மொழிவழி மாநிலங்களாக உருவாக்கப்பட்ட இந்திய ஒன்றியத்தில், ஒரு மாநிலத்தில் பேசப்படும் மொழி மீது மற்றொரு மொழியைக் கட்டாயமாகத் திணிக்கும்போது அந்த மாநில மக்கள் பேசுகின்ற மொழியும் அதன் பண்பாடும் சிதைக்கப்படும். இந்தியும் சமஸ்கிருதமும் வலிந்து திணிக்கப்படுவதால் இந்திய மொழிகள் பலவும் திட்டமிட்டு சிதைக்கப்படுகின்றன. தமிழ்நாடு தன் உயிரினும் மேலானத் தமிழையும் அதன் பண்பாட்டையும் உயிரைக் கொடுத்து காப்பாற்றியுள்ளது.

தாய்மொழி என்பது ஒரு தேன்கூடு. அதில் கை வைப்பது ஆபத்து. கட்டாயமாக ஒரு மொழியைத் திணித்தால் அது பகையுணர்ச்சிக்கே இடம் கொடுக்கும். நாட்டின் ஒற்றுமைக்கு பாதிப்பை ஏற்படுத்தும். மொழித்திணிப்பினால் பிளவுபட்ட தேசங்களின் வரலாறு நம் பக்கத்திலேயே இருக்கிறது. 

ஐ.நா அவையின் யுனெஸ்கோ அமைப்பின் அதிகாரப்பூர்வ அறிவிப்பின்படி 1999-ம் ஆண்டு முதல் ஒவ்வொரு ஆண்டும் பிப்ரவரி 21-ம் நாள் உலகத் தாய்மொழி நாளாகக் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. ஒரு மொழி அழிந்தால், அந்த இனம் அழிக்கப்படும். அதன் மரபு வழி அறிவுச் செல்வம் மொத்தமாக அழிந்துபோகும். அதற்கு மாறாக, அவரவர் தாய்மொழிகளின் மீதான பிறமொழி ஆதிக்கத்தைத் தடுக்கும்போது, மொழி-பண்பாட்டு மரபுகளுக்கான விழிப்புணர்வை வென்றெடுத்து, உலக மக்களிடையே ஒற்றுமையை வளர்த்தெடுக்க முடியும் என்பதுதான் தாய்மொழி நாளின் நோக்கம்.

நம் தாய்மொழி போலவே மற்றவர்களின் தாய்மொழியையும் மதிக்கிறோம். இந்தியைத் தாய்மொழியாகக் கொண்டவர்களும் நம் சகேதார-சகோதரிகள்தான். இந்தித் திணிப்பால் தமது தாய்மொழிகளை இழந்த வடமாநிலங்களின் சகோதர-சகோதரிகளின் நிலை தமிழ்நாட்டுக்கு ஏற்பட்டுவிடக்கூடாது என்பதே நம் மொழிக் கொள்கை. இந்த கொள்கைப் பார்வை தற்போது கர்நாடகம், கேரளம், மேற்கு வங்காளம், மராட்டியம் உள்ளிட்ட பல மாநிலங்களிலும் வெளிப்படுகிறது.

‘இந்தி திவாஸ்’ என்று கொண்டாடப்படுவது போல, 8-வது அட்டவணையில் இடம்பெற்றுள்ள 22 மொழிகளுக்கான நாட்கள் உண்டா? இந்தியைத் தவிர மற்ற இந்திய மொழிகளை பாரபட்சமாக அணுகுவது ஏன்? ரூபாய் நோட்டில் உள்ள இந்தியை அழிப்பீர்களா என்று எங்களைப் பார்த்து கேட்கும் அதிமேதாவிகளான உங்களைப் பார்த்து நாங்கள் கேட்கிறோம், ரூபாய் நோட்டில் அச்சிடப்பட்டுள்ள மொழிகள் அனைத்தையும் இந்தியாவின் ஆட்சிமொழியாக அறிவிக்கத் தயக்கம் ஏன்? தமிழ் மீது பிரதமர் உள்ளிட்ட ஒன்றிய பாஜக ஆட்சியாளர்களுக்கு உண்மையான அக்கறை இருக்குமானால் உயர்தனிச் செம்மொழி என்ற தகுதியுடைய எங்கள் தாய்மொழியை ஆட்சிமொழியாக்கிட எது தடுக்கிறது? எங்கள் அண்ணா அன்று பாராளுமன்ற மாநிலங்களவையில் கேட்டதைத்தான் அவரது தம்பிகளான நாங்களும் கேட்கிறோம். அவரால் பெயர் சூட்டப்பட்ட எங்கள் தமிழ்நாடு கேட்கிறது. லட்சியம் நிறைவேறும்வரை கேட்டுக்கொண்டே இருப்போம். என கூறியுள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 1 week ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 1 week ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 9 months 1 week ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 9 months 1 week ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 11 months 1 week ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 11 months 1 week ago
View all comments

வாசகர் கருத்து