முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சாம்பியன்ஸ் டிராபி தொடர்: ‘கோல்டன் பேட்’ விருதை வெல்லப் போகும் வீரர்..?

வியாழக்கிழமை, 6 மார்ச் 2025      விளையாட்டு
India-Cricket-2025-03-06

ஐதராபாத், சாம்பியன்ஸ் டிராபி தொடரில் அதிக ரன்கள் குவித்தவருக்கான ‘கோல்டன் பேட்’-ஐ வெல்லப் போவது யார்? என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. 6 வீரரகல் இடையே கடும் போட்டி நிலவுகிறது.

இறுதிப்போட்டியில்...

பாகிஸ்தான் மற்றும் ஐக்கிய அரபு அமீரகத்தின் துபாயில் நடைபெற்றுவந்த 9-வது சாம்பியன்ஸ் டிராபி தொடர் இறுதிக்கட்டத்தை எட்டியிருக்கிறது. இந்தத் தொடருக்கான இறுதிப்போட்டியில் வருகிற மார்ச் 9 ஆம் தேதி முன்னாள் சாம்பியன்கள் இந்தியா - நியூசிலாந்து அணிகள் மோதவிருக்கின்றன. 8 ஆண்டுகளுக்குப் பின் நடைபெறும் இந்த சாம்பியன்ஸ் டிராபி தொடரில் இதுவரை 11 சதங்கள் பதிவாகியுள்ளன. அதில் நியூசிலாந்து வீரர் ரச்சின் ரவீந்திரா 2 சதங்கள் விளாசியுள்ளார்.

கோல்டன் பேட் விருது... 

இந்த நிலையில், அதிக ரன் குவித்தவருக்கு வழங்கப்படும் தங்கத்தினாலான கோல்டன் பேட் விருது யாருக்கு வழங்கப்படும் என்ற எதிர்பார்ப்பு அதிரித்திருக்கிறது. அதிக ரன்கள் குவித்த வீரர்கள் பட்டியலில் இங்கிலாந்து வீரர் பென் டக்கெட் முதலிடத்தில் இருந்தாலும் அவர் இறுதிப்போட்டியில் விளையாடமாட்டார். அவரைத் தவிர்த்து இந்தியாவின் விராட் கோலி, ஷுப்மன் கில், ஷ்ரேயஸ் ஐயர் ஆகியோரும், நியூசிலாந்து தரப்பில் வில் யங், வில்லியன்மசன், டாம் லேதம் ஆகியோரும் உள்ளனர். அனைவருக்கும் இடையே பெரிய ரன் வித்தியாசம் இல்லாததால் இறுதிப்போட்டியில் சிறப்பாக விளையாடுபவருக்கே இந்த கோல்டன் பேட் கிடைக்கும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.2014, 2017 ஆம் ஆண்டுகளில் நடைபெற்ற சாம்பியன்ஸ் டிராபி தொடரில் இந்தியாவின் ஷிகர் தவான் கோல்டன் பேட்டை பெற்றிருந்தது நினைவுகூரத்தக்கது.

அதிக ரன் குவித்தவர்கள்

1) பென் டக்கெட் -227 ரன்கள்.

2) ரச்சின் ரவீந்திரா - 226 ரன்கள்.

3) விராட் கோலி- 217 ரன்கள்.

4) ஷ்ரேயஸ் ஐயர் - 195 ரன்கள்.

5) டாம் லேதம் -191 ரன்கள்.

6) கேன் வில்லியம்சன் -189 ரன்கள்.

7) ஷுப்மன் கில் - 157 ரன்கள்.

8) வில் யங் - 150 ரன்கள்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 1 week ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 1 week ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 9 months 1 week ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 9 months 1 week ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 11 months 1 week ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 11 months 1 week ago
View all comments

வாசகர் கருத்து