முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஒரே மைதானத்தில் ஆடுவது இந்தியாவுக்கு சாதகமில்லை: ஆஸி. வீரர் ஸ்டீவ் ஸ்மித் கணிப்பு

வியாழக்கிழமை, 6 மார்ச் 2025      விளையாட்டு
Steve-Smith-2025-03-06

துபாய், ஒரே நகரத்தில்  தங்கி இருப்பது இந்தியாவுக்கு சாதகமானது கிடையாது என்று ஸ்டீவ் ஸ்மித்கூறியுள்ளார்.

சாம்பியன்ஸ் டிராபி... 

8 அணிகள் இடையிலான 9-வது ஐ.சி.சி. சாம்பியன்ஸ் டிராபி தொடர் பாகிஸ்தான் மற்றும் துபாயில் நடைபெற்று வருகிறது. பாதுகாப்பு பிரச்சினை காரணங்களுக்காக இந்திய அணி பாகிஸ்தானுக்கு செல்ல மறுத்ததால் இந்திய அணிக்குரிய ஆட்டங்கள் அனைத்தும் துபாயில் நடைபெறுகின்றன. இதில் ஆடிய அனைத்து போட்டிகளிலும் வெற்றி பெற்ற இந்திய அணி, அரையிறுதியில் ஆஸ்திரலியா அணியை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறி உள்ளதால் இறுதிப்போட்டியும் துபாயில் நடைபெற உள்ளது. 

விமர்சனம்...

முன்னதாக இந்திய அணி அங்கும் இங்கும் அலையாமல் ஒரே இடத்தில் தங்கியிருந்து ஒரே மைதானத்தில் விளையாடுவது அவர்களுக்கு உள்ளூர் போன்று கூடுதல் சாதகமாக இருக்கிறது என சில முன்னாள் மற்றும் இந்நாள் வீரர்கள் விமர்சித்து வருகின்றனர். இந்த நிலையில் ஒரே மைதானத்தில் விளையாடுவது இந்தியாவுக்கு சாதகம் இல்லை என்று ஒருநாள் போட்டியில் இருந்து திடீரென ஓய்வை அறிவித்த ஆஸ்திரேலிய கேப்டன் ஸ்டீவ் ஸ்மித் தெரிவித்து உள்ளார்.

சாதகம் கிடையாது...

இது தொடர்பாக அவர் கூறியதாவது: இந்திய அணி எங்களுக்கு எதிராக சிறந்த கிரிக்கெட்டை வெளிப்படுத்தியது. எங்களை முற்றிலுமாக வெளியேற்றியது. ஒரே நகரத்தில் (துபாய்) தங்கி இருப்பது இந்தியாவுக்கு சாதகமானது கிடையாது. அந்த அணி திறமையான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறது.இவ்வாறு ஸ்டீவ் ஸ்மித்கூறியுள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 1 week ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 1 week ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 9 months 1 week ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 9 months 1 week ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 11 months 1 week ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 11 months 1 week ago
View all comments

வாசகர் கருத்து