முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பாக். வம்சாவளி வீரர் மரணம்

செவ்வாய்க்கிழமை, 18 மார்ச் 2025      விளையாட்டு
18-Ram-58

Source: provided

லக்னோ அணிக்கு வாழ்த்து

உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத்தைச் சந்தித்து லக்னோ அணி உரிமையாளர், கேப்டன் ரிஷப் பந்த் மற்றும் அணி வீரர்கள் வாழ்த்துப் பெற்றனர். 18-வது ஐ.பி.எல்.  தொடரில் முதலாவது போட்டி வருகிற 22 ஆம் தேதி கொல்கத்தாவின் ஈடன் காடன் மைதானத்தில் நடக்கவிருக்கிறது. முதல் போட்டியில் கொல்கத்தா மற்றும் பெங்களூரு அணிகள் மோதவிருக்கின்றன. பல்வேறு நாடுகளைச் சேர்ந்த வீரர்களும் தங்களது அணியினருடன் இணைந்து பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த நிலையில், லக்னோ அணியினர் உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத்தைச் சந்தித்து வாழ்த்துப்பெற்றனர். இந்த நிகழ்வில், அணியின் உரிமையாளர் சஞ்சீவ் கோயங்கா, கேப்டன் ரிஷப் பந்த், ஆர்யன் ஜுயால், ஹிம்மத் சிங், அப்துல் சமத், சக வீரர்கள், பயிற்சி ஊழியர்கள் உள்பட பல முக்கிய வீரர்கள், பயிற்சியாளர்கள் மற்றும் நிர்வாக அதிகாரிகள் கலந்து கொண்டனர். இதுபற்றி முதல்வர் யோகி கூறும்போது, “கடந்த எல்லா தொடர்களிலும் லக்னோ அணியினர் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியுள்ளனர். வீரர்கள் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி இந்தத் தொடரில் கோப்பையை வெல்ல பாடுபடுவார்கள். இந்த அணி ஒழுக்கம், அர்பணிப்புக்கு பெயர் பெற்றது. இவர்கள் கோப்பையை வென்று நம் மாநிலத்துக்கு பெருமை சேர்ப்பார்கள்” என்றார்.

மான்செஸ்டா் யுனைடெட் வெற்றி

இங்கிலாந்து பிரீமியா் லீக் கால்பந்து போட்டியில்  மான்செஸ்டா் யுனைடெட் 3-0 கோல் கணக்கில் லெய்செஸ்டா் சிட்டியை வீழ்த்தியது.  இந்த ஆட்டத்தில் மான்செஸ்டா் அணிக்காக ராஸ்மஸ் ஹோலந்த் 28-ஆவது நிமிஷத்தில் கோல் கணக்கை தொடங்கினாா். தொடா்ந்து, அலெக்ஸாண்ட்ரோ கா்னாசோ 67-ஆவது நிமிஷத்திலும், புருனோ  பொ்னாண்டஸ் 90-ஆவது நிமிஷத்திலும் கோலடித்தனா். லெய்செஸ்டா் சிட்டிக்கு இறுதி வரை கோல் வாய்ப்பு கிடைக்காமல் போக, மான்செஸ்டா் யுனைடெட் 3-0 கோல் கணக்கில் வெற்றி பெற்றது. 

லெய்செஸ்டா் சிட்டி இத்துடன் தனது சொந்த மண்ணில் தொடா்ந்து 7 ஆட்டங்களில் தோல்வியை சந்தித்துள்ளது. அனைத்து ஆட்டங்களிலுமே அந்த அணி கோல் அடிக்காததும் குறிப்பிடத்தக்கது. பிரீமியா் லீக் வரலாற்றில் இத்தகைய தொடா் தோல்வியை சந்தித்த முதல் அணியாகியிருக்கிறது லெய்செஸ்டா் சிட்டி. புள்ளிகள் பட்டியலில் தற்போது, மான்செஸ்டா் யுனைடெட் 37 புள்ளிகளுடன் 13-ஆவது இடத்திலும், லெய்செஸ்டா் சிட்டி 17 புள்ளிகளுடன் 19-ஆவது இடத்திலும் உள்ளன.

ஆயுஷ் ஷெட்டி வெற்றி

சுவிட்சர்லாந்து ஓபன் பேட்மிண்டன் போட்டி பாசெல் நகரில் நேற்று முதல் 23-ந் தேதி வரை நடக்கிறது. இதில் முன்னணி வீரர், வீராங்கனைகள் பங்கேற்கிறார்கள்.

இந்நிலையில், ஆண்கள் ஒற்றையர் பிரிவில் முதல் சுற்றில் இந்திய வீரர் ஆயுஷ் ஷெட்டி- மலேசியா வீரர் சோழன் காயன் உடன் மோதினார். பரபரப்பான இந்த ஆட்டத்தில் சிறப்பாக விளையாடிய ஆயுஷ் ஷெட்டி 21-12, 21-15 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்று அடுத்த சுற்றுக்கு தகுதி பெற்றார்.

பாக். வம்சாவளி வீரர் மரணம் 

பாகிஸ்தான் வம்சாவளியைச் சேர்ந்த ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் ஜுனைத் ஜாபர் கான் (வயது 40) விளையாடி கொண்டிருக்கும் போது மைதானத்தில் மயங்கி விழுந்து உயிரிழந்துள்ளார். சர்வதேச அளவில் விளையாடாத 40 வயதான ஜுனைத் ஜாபர் கான் உள்ளூர் கிரிக்கெட்டில் மட்டுமே விளையாடி வந்துள்ளார். கடந்த 2013-ம் ஆண்டில் ஆஸ்திரேலியாவுக்கு குடிபெயர்ந்த அவர், அங்குள்ள ஓல்ட் கான்கார்டியன்ஸ் கிளப் அணிக்காக விளையாடி வந்தார்.

இந்நிலையில் ஆஸ்திரேலியாவின் அடிலெய்டில் உள்ள கான்கார்டியா கல்லூரி ஓவல் மைதானத்தில் கடந்த சனிக்கிழமை நடைபெற்ற ஒரு உள்ளூர் போட்டியில் விளையாடி கொண்டிருந்தார். அப்போது வெப்பத்தின் தாக்கம் அதிகமாக இருந்ததால் 16 ரன்களில் பேட்டிங் செய்து கொண்டிருந்த ஜூனைத் திடீரென மைதானத்திலேயே மயங்கி விழுந்துள்ளார். அந்த சமயத்தில் வெப்பத்தின் அளவு 41.7 டிகிரி செல்சியஸ் என்ற அளவில் இருந்துள்ளது. உடனடியாக ஆம்புலன்ஸ் வரவழைக்கப்பட்டு ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளார். இருப்பினும் அவரை பரிசோதித்த மருத்துவர்கள் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக அறிவித்தனர். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 3 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 3 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 9 months 3 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 9 months 3 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 11 months 3 weeks ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 11 months 3 weeks ago
View all comments

வாசகர் கருத்து