முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

உலகக் கோப்பை கால்பந்து தகுதிச் சுற்று போட்டியில் இருந்து மெஸ்ஸி விலகல்

செவ்வாய்க்கிழமை, 18 மார்ச் 2025      விளையாட்டு
18-Ram-55

Source: provided

பியூனஸ் அயர்ஸ்: அர்ஜென்டினாவின் கேப்டன் மெஸ்ஸி உலகக் கோப்பை தகுதிச் சுற்றின் முக்கியமான 2 போட்டிகளிலிருந்து விலகுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

மெஸ்ஸி இல்லை...

கடந்த 2022இல் நடைபெற்ற கால்பந்து உலகக் கோப்பையை மெஸ்ஸி தலைமையிலான அர்ஜென்டினா அணி வென்றது. 37 வயதாகும் லியோனல் மெஸ்ஸி தற்போது இன்டர் மியாமி அணிக்காக விளையாடி வருகிறார். உருகுவே, பிரேசில் உடனான உலகக் கோப்பை தகுதிச் சுற்றுக்கான அர்ஜென்டினா அணி அறிவிக்கப்பட்டுள்ளது. அதில் மெஸ்ஸியைத் தவிர்த்து 25 பேர் கொண்ட அணியை லியோனல் ஸ்கலோனிஅறிவித்தார்.

ரசிகர்கள்  ஆவல்...

கடைசியாக நடந்த போட்டியில் மெஸ்ஸி தனது 854ஆவது கோலை அடித்து அசத்தினார். அந்தப் போட்டியில் ஆட்ட நாயகன் விருதும் வென்றார். பிறகு காலில் ஏற்பட்ட அசௌகரியம் காரணமாக எம்.ஆர்.ஐ. ஸ்கேன் எடுக்கப்பட்டது. அதில் அவரது தொடைப் பகுதியில் காயம் ஏற்பட்டுள்ளது. இது குறைவான தாக்கம் கொண்ட காயம் என்பதால் விரைவிலே குணமாகிவிடும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 8 முறை பேலன் தோர் விருதுபெற்ற மெஸ்ஸி இல்லாமல் அர்ஜென்டினா அணி வெல்லுமா என அவரது ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கிறார்கள்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 3 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 3 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 9 months 3 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 9 months 3 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 11 months 3 weeks ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 11 months 3 weeks ago
View all comments

வாசகர் கருத்து