முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தொகுதி மறுசீரமைப்பு திட்டமிட்ட தாக்குதல்: மத்திய அரசு மீது துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் குற்றச்சாட்டு

சனிக்கிழமை, 22 மார்ச் 2025      தமிழகம்
Udayanidhi 2024-11-02

Source: provided

சென்னை :  மக்கள்தொகையை கட்டுப்படுத்தியதற்காக, மத்திய அரசின் திட்டமிட்ட நேரடி தாக்குதல் தான் இந்த தொகுதி மறுசீரமைப்பு என துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்தார்.

முதல்வர் மு.க. ஸ்டாலின் தலைமையில் சென்னை கிண்டியில் உள்ள தனியாா் நட்சத்திர ஹோட்டலில் நடைபெற்ற தொகுதி மறுசீரமைப்புக்கு எதிரான கூட்டு நடவடிக்கைக் குழுக் கூட்டத்தில் கேரள முதல்வர் பினராயி விஜயன், தெலங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டி, கர்நாடக துணை முதல்வர் டி.கே. சிவகுமார், பஞ்சாப் முதல்வர் பகவந்த் மான் மற்றும் ஏழு மாநிலங்களின் கட்சிகளைச் சோ்ந்த பிரதிநிதிகள் உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர்.

இந்த முதல் கூட்டு நடவடிக்கைக் குழுக் கூட்டத்தில் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பேசுகையில்,

நாட்டின் முன்னேற்றத்துக்காகவே மக்கள்தொகை கட்டுப்பாட்டோடு இருக்க வேண்டும் என்பதற்காக, நம் மாநிலங்கள் பல்வேறு திட்டங்களை வகுத்து, விழிப்புணர்வுகளை ஏற்படுத்தி, நாட்டின் நோக்கமான மக்கள் தொகை கட்டுப்பாட்டை வெற்றிகரமாக செயல்படுத்தியுள்ளோம். மற்ற மாநிலங்கள் மக்கள்தொகை விகிதத்தை அதிகரித்த நிலையிலும், நாம் பொறுப்புடன் செயலாற்றினோம்.

ஆனால், மக்கள்தொகையை கட்டுப்படுத்தியதற்காக, நாம் பாராட்டப்படாமல், நமக்கான அரசியல் பிரதிநிதித்துவத்தை குறைப்பதுதான் இந்த தொகுதி மறுசீரமைப்பு. இது மத்திய அரசின் திட்டமிட்ட நேரடி தாக்குதல். தற்போதைய மக்கள்தொகை கணக்கெடுப்புப்படி தொகுதி மறுவரையறை செய்யப்பட்டால் 7 மாநிலங்கள் 44 இடங்களை இழக்கும் நிலை ஏற்படும். குறிப்பாக தென் மாநிலங்களின் இடங்கள் 30 சதவிகிதத்தில் இருந்து 20 சதவிகிதம் என குறையும் அபாயம் உள்ளது.

1973 ஆம் ஆண்டு மக்கள்தொகை கணக்கெடுப்பின்படியே தொகுதி மறுவரையறை செய்யப்பட வேண்டும். மக்களவை தொகுதிகள் அதிகரிக்கப்பட்டால் நமக்கு எத்தனை இடங்கள் கிடைக்கும் என்பதை உறுதி செய்ய வேண்டும் என தொகுதி மறுசீரமைப்பில் உள்ள முக்கிய பாதிப்புகளை பட்டியலிட்டு துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 4 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 4 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 9 months 4 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 9 months 4 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 11 months 4 weeks ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 11 months 4 weeks ago
View all comments

வாசகர் கருத்து