முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தொகுதி மறுவரையறை நம் தலைக்கு மேல் தொங்கும் கத்தி : கேரள முதல்வர் பினராயி விஜயன் கருத்து

சனிக்கிழமை, 22 மார்ச் 2025      தமிழகம்
CM-3-2025-03-22

Source: provided

சென்னை : தொகுதி மறுவரையறை என்பது நம் தலைக்கு மேல் தொங்கும் கத்தியாகும் என்று கேரள முதல்வர் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார்.

தொகுதி மறுவரையறைக்கு எதிர்ப்பு தெரிவித்து நடந்த அனைத்துக் கட்சிக் கூட்ட தீர்மானத்தின்படி, ‘கூட்டு நடவடிக்கைக் குழு’ அமைத்து தொடர் நடவடிக்கைகள் மேற்கொள்வது தொடர்பாக சென்னையில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

இந்தக் கூட்டத்தில் பங்கேற்ற கேரள மாநில முதல்வர் பினராயி விஜயன் பேசுகையில், "மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்தப்படுவதற்கு முன்பே, மத்திய அரசு தொகுதி மறுவரையறைக்கு அவசரம் காட்டுவது ஏன்?  இந்தத் தொகுதி மறுவரையறை கூட்டாட்சியை மறுக்கிறது.  கேரள அரசின் குடும்பஸ்ரீ மற்றும் தமிழகத்தின் மதிய உணவுத் திட்டம் போன்றவை பல்வேறு மாநில அரசுகளால் ஏற்றுக்கொள்ளப்பட்டு பின்பற்றப்படுகின்றன. மையப்படுத்துதல் என்பது இத்தகைய முன்னெடுப்புகளை ஒருபோதும் அனுமதிக்காது.

தற்போதைய தொகுதி மறுவரையறை செயல்பாடு வட இந்தியாவுக்கு நன்மைபயக்கும் என்று அறிந்திருப்பதால், மத்திய அரசு இதனை முன்னெடுக்கப் பார்க்கிறது. ஒருபுறம் மக்கள் தொகையை சிறப்பான முறையில் கட்டுப்படுத்தியதற்காக தென்மாநிலங்களை மத்திய அரசு பாராட்டுகிறது. ஆனால் மறுபுறம் மக்கள் தொகை குறைவாக இருப்பதைக் காரணம் காட்டி நமது பங்கினை குறைக்கிறது.

கடந்த 1976 ஆம் ஆண்டு ஒட்டுமொத்த நாட்டுக்கும் தான் மக்கள் தொகை கட்டுப்பாடு கொள்கை கொண்டுவரப்பட்டது. ஆனால் கேரளா போன்ற சில மாநிலங்கள் மட்டுமே அதை சிறப்பாக செயல்படுத்தின. பா.ஜ.க.  மிகவும் குறுகிய மனப்பான்மையுடன் இந்தத் தொகுதி மறுவரையறை செயல்பாட்டை முன்னெடுக்கிறது. தொகுதி மறுவரையறை என்பது நம் தலைக்கு மேல் தொங்கும் கத்தியாகும். எந்த ஒரு ஆலோசனையும் நடத்தாமல் பா.ஜ.க.  தொகுதி மறுவரையறையை முன்னெடுக்கிறது.” என்று பேசினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 4 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 4 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 9 months 4 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 9 months 4 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 11 months 4 weeks ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 11 months 4 weeks ago
View all comments

வாசகர் கருத்து