முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தொகுதி மறுசீரமைப்பு கூட்டம்: சந்திரபாபு, மம்தா பங்கேற்கவில்லை

சனிக்கிழமை, 22 மார்ச் 2025      தமிழகம்
Chandrababu-Naidu 2024-06-2

Source: provided

சென்னை : தொகுதி மறுசீரமைப்பு கூட்டத்தில் ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடுவின் தெலுங்கு தேசம் கட்சி  மற்றும் மம்தா பானர்ஜியின் திரிணாமூல் காங்கிரஸ் கட்சி  பங்கேற்கவில்லை. 

நாடு முழுவதும் அடுத்த ஆண்டு தொகுதி மறுசீரமைப்பு மேற்கொள்ள மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. மாநில வாரியாக மக்கள்தொகை அடிப்படையில் தொகுதி மறுசீரமைப்பு பணிகள் மேற்கொள்ள  தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆரம்பம் முதல் எதிர்ப்பு தெரிவித்து வருகிறார். அதனைத் தொடர்ந்து தொகுதி மறுசீரமைப்பால் ஏற்படும் பாதிப்புகளை விளக்கி முதல்வர் மு.க.ஸ்டாலின், மாநில முதல்வர்கள் மம்தா பானர்ஜி (மேற்கு வங்காளம்) ரேவந்த் ரெட்டி (தெலுங்கானா), பினராயி விஜயன் (கேரளா), சித்தராமையா (கர்நாடகா), பகவந்த் மான் (பஞ்சாப்), சந்திரபாபு நாயுடு (ஆந்திரா) மற்றும் கர்நாடகா துணை முதல்வர் சிவகுமார், முன்னாள் முதல்வர்கள் ஜெகன் மோகன் ரெட்டி (ஆந்திரா), நவீன் பட்நாயக் (ஒடிசா), சந்திரசேகர ராவ் (தெலுங்கானா) ஆகியோருக்கு கடிதம் எழுதியிருந்தார்.

இந்த நிலையில், சென்னை கிண்டியில் உள்ள ஐ.டி.சி. கிராண்ட் சோழா நட்சத்திர ஓட்டலில் நேற்று காலை  ஆலோசனை கூட்டம்  நடைபெற்றது. தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் கூட்டத்துக்கு தலைமை தாங்கினார். இந்தக் கூட்டத்தில், முதல்வர்கள் பினராயி விஜயன்,  பகவந்த் மான்,  ரேவந்த் ரெட்டி உள்பட 7 மாநிலங்களில் இருந்து கட்சி நிர்வாகிகள் 24 பேர் கலந்துகொண்டுள்ளனர்.

இந்நிலையில் தொகுதி மறுசீரமைப்பு கூட்டத்தில் ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடுவின் தெலுங்கு தேசம் கட்சி பங்கேற்கவில்லை. இதேபோல் மம்தா பானர்ஜியின் திரிணாமூல் காங்கிரஸ் கட்சியும் பங்கேற்கவில்லை. முன்னதாக இரு கட்சிகளுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது. 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 4 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 4 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 9 months 4 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 9 months 4 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 11 months 4 weeks ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 11 months 4 weeks ago
View all comments

வாசகர் கருத்து