முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சீன உளவாளிகள் 2 பேர் பிலிப்பைன்ஸில் கைது

சனிக்கிழமை, 22 மார்ச் 2025      உலகம்
Jail

Source: provided

மணிலா : பிலிப்பின்ஸ் நாட்டில் சட்டவிரோதமாக தகவல் சேகரித்த சீன உளவாளிகள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

பிலிப்பின்ஸில் அரசு மற்றும் ராணுவத்தின் முக்கிய துறைகளில் சீனாவின் ஈடுபாடுள்ளதா? என்று எழுந்த சந்தேகத்தினால் அந்நாட்டு அரசு கடுமையான நடவடிக்கைகள் எடுத்து வருகின்றது. மேலும், தெற்கு சீனக் கடலில் இரு நாட்டுகளுக்கும் இடையில் பதற்றமான சூழல் நிலவி வருவதாகக் கூறப்படுகின்றது.

இந்நிலையில் பிலிப்பின்ஸ் நாட்டின் தேசிய புலனாய்வுப் பிரிவு, அந்நாட்டின் முக்கிய தளங்களின் அருகில் சட்டவிரோதமாக தகவல்களைச் சேகரித்தாக சந்தேகிக்கப்பட்ட 2 சீன நாட்டினரை கைது செய்துள்ளதாக அறிவித்துள்ளது. இதுகுறித்து வெளியான அறிக்கையில், கைது செய்யப்பட்ட சீனர்கள் ரேடியோ சிக்னல்களை இடைமறிக்கும் சாதனத்தை ஓரு காரில் பொருத்தி தங்களது பிலிப்பினோ கூட்டாளிகளுக்கு பணம் கொடுத்து அந்த வாகனத்தை பிலிப்பைன்ஸ் நாட்டின் அதிபர் மாளிகை, அமெரிக்க தூதரகம், அகுயினால்டோ மற்றும் ராணுவ தலைமைச் செயலகம் உள்ளிட்ட முக்கிய தளங்களின் அருகில் ஓட்ட வைத்ததாகக் கூறியுள்ளனர்.

மேலும், இதன் மூலம் அவ்விடங்களிலிருந்து பல ரகசிய தகவல்கள் சேகரிக்கப்பட்டதா என அந்நாட்டு அதிகாரிகள் சந்தேகிக்கின்றனர். இதனைத் தொடர்ந்து, இந்த விவகாரத்தில் சீன அரசுக்கு தொடர்புள்ளதா என்பது குறித்த விசாரணை மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையில் பிலிப்பின்ஸில் உளவு பார்ப்பது சட்டவிரோதமாக தகவல்கள் சேகரிப்பது போன்ற குற்றங்களில் ஈடுபட்ட சீனர்கள் கைது செய்யப்படுவது தொடர் கதையாகி வருகின்றது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 4 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 4 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 9 months 4 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 9 months 4 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 11 months 4 weeks ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 11 months 4 weeks ago
View all comments

வாசகர் கருத்து