Idhayam Matrimony

நண்பர்களின் ரூ.16 லட்சம் கோடி கடன் ரத்து: பா.ஜ.க. அரசு மீது ராகுல் காந்தி குற்றச்சாட்டு

ஞாயிற்றுக்கிழமை, 30 மார்ச் 2025      இந்தியா
Rahul 2024-12-03

Source: provided

புதுடெல்லி :  ‘‘கோடீஸ்வர நண்பர்களின் ரூ.16 லட்சம் கோடி கடனை பா.ஜ.க. அரசு தள்ளுபடி செய்துள்ளதால் வங்கித் துறை  உழியர்கள் மன அழுத்தத்துடன்  பணியாற்றுவதாக  மக்களவை காங்கிரஸ் தலைவர் ராகுல் கூறியுள்ளார்.

ஐ.சி.ஐ.சி.ஐ. வங்கியில் பணியாற்றிய முன்னாள் ஊழியர்கள் குழு, மக்களவை காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியை நாடாளுமன்ற வளாகத்தில் உள்ள அவரது அலுவலகத்தில் சந்தித்து பேசியது. இதன்பின் எக்ஸ் தளத்தில் ராகுல் கூறியிருப்பதாவது:

 பா.ஜ.க. அரசின் தவறான நிர்வாகத்தால் வங்கி ஊழியர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான பா.ஜ.க. அரசு தனது கோடீஸ்வர நண்பர்களின் ரூ.16 லட்சம் கோடி கடனை தள்ளுபடி செய்துள்ளது. பா.ஜ.க. அரசின் தவறான நிர்வாகத்தால், நேர்மையான ஊழியர்கள் ஆயிரக்கணக்கானோர் பாதிக்கப்பட்டுள்ளனர். வங்கித்துறையும் சிக்கலான நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது. இந்த சுமையை ஜூனியர் ஊழியர்கள் சமாளிக்க வேண்டியுள்ளதால், அவர்கள் மன அழுத்தத்துக்கு ஆளாகியுள்ளனர்.

மோசமான சூழ்நிலையில் அவர்கள் பணியாற்றுகின்றனர். வங்கி கடனை திருப்பிச் செலுத்தாவர்களுக்கு கடன் அளிப்பதை வெளிப்படுத்தினால், பணியிடமாற்றம், டிஸ்மிஸ் போன்ற பிரச்சினைகளை ஊழியர்கள் சந்திக்கின்றனர். இரண்டு சம்பவங்களில் தற்கொலைகள் நடைபெற்றுள்ளன. இதேபோன்ற அநீதிகளை சந்திக்கும் ஊழியர்கள், அவற்றை https://rahulgandhi.in/awaazbharatki என்ற இணையதளம் மூலமாக என்னிடம் பகிரலாம். உங்களுக்காக காங்கிரஸ் கட்சி போராடும். இவ்வாறு ராகுல் தெரிவித்துள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 9 months 1 week ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 9 months 1 week ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 10 months 1 week ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 10 months 1 week ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 3 days ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 3 days ago
View all comments

வாசகர் கருத்து