Idhayam Matrimony

தாய்மொழியில் மருத்துவக் கல்வி: பிரதமர் மோடி பெருமிதம்

ஞாயிற்றுக்கிழமை, 30 மார்ச் 2025      இந்தியா
Modi 2024-09-15

Source: provided

நாக்பூர் : தாய்மொழியில் மருத்துவம் பயிலலாம் என்கிற நடைமுறை கொண்டுவரப்பட்டிருப்பது ஏழை மாணவர்களுக்கு மிகவும் பயனளிப்பதாக பிரதமர் மோடி குறிப்பிட்டுள்ளார்.

மகாராஷ்டிரத்தின் நாக்பூரில் அமைந்துள்ள ஆா்.எஸ்.எஸின் நிறுவனத் தலைவா்களின் நினைவிடங்களுக்கு நேற்று (மார்ச் 30) சென்றுள்ள பிரதமர் மோடி அவர்களுக்கு மரியாதை செலுத்தினார்.

அதனைத்தொடர்ந்து, நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்று பேசிய பிரதமர் மோடி: “இந்த உலகம் ஒரே குடும்பம் போன்றது என்கிற நமது தாரக மந்திரமானது உலகின் அனைத்து மூலைகளிலும் சென்றடைந்துள்ளது. இந்திய விடுதலைக்குப்பின் நாங்கள் மிக துணிச்சலானதொரு நடவடிக்கையை எடுத்தோம். அது என்னவென்றால் - ஏழை மாணவர்கள் மருத்துவர்களாக வசதியாக, அவரவர் தம் தாய்மொழியில் மருத்துவம் பயிலலாம் என்பதேயாகும்.

இதுபோன்ற மேம்பாட்டு நடவடிக்கைகளால், மருத்துவத் துறையிலும் நாங்கள், நமது பாரம்பரிய ஞானத்தை முன்னெடுத்துச் செல்கிறோம். நமது யோகா, ஆயுர்வேதா ஆகிய மருத்துவ சிகிச்சை முறைகள், இப்போது ஒட்டுமொத்த உலகத்திலும் புது அங்கீகாரத்தை பெற்றுத் திகழ்கின்றன. இந்தியாவின் மதிப்பும் உயர்ந்து வருகிறது.”

இது எப்படி சாத்தியமானது? பல்வேறு தருணங்களிலும் பல இயக்கங்கள் செயல்பாடுகள் இதை கட்டிக்காத்துள்ளன.குரு நானக் தேவ், கபீர் தாஸ், துளசி தாஸ், சூர் தாஸ், புனித துக்காராம், இன்னும் பலர் அவர்களது தார்மீக மதிப்புகளாலும் நடவடிக்கைகளாலும் நமது தேசிய சுய சிந்தனைக்கு உயிர்கொடுத்துள்ளனர். நம்பிக்கையின்றி துவண்டுபோயிருந்த சமுதாயத்தில் சுவாமி விவேகானந்தர் விழிப்புணர்ச்சி ஏற்படுத்தியிருக்கிறார்” என்றார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 9 months 1 week ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 9 months 1 week ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 10 months 1 week ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 10 months 1 week ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 3 days ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 3 days ago
View all comments

வாசகர் கருத்து