Idhayam Matrimony

வீர தீர சூரன்-2 விமர்சனம்

திங்கட்கிழமை, 31 மார்ச் 2025      சினிமா
Veera-Theera-Sooran-2-Revie

Source: provided

ஒரு பெண் காணாமல் போகிறாள்.  இதனால் மதுரையைச் சேர்ந்த பெரிய குடும்பத்துக்கு ஒரு சிக்கல் வருகிறது. அதனால் அக்குடும்பத்தைச் சேர்ந்த பெரியவர் புருத்விராஜ் மற்றும் அவரது மகன் சுராஜ் வெஞ்சர்மூடுவை என்கவுண்டரில் கொலை செய்ய போலீஸ் எஸ்.பி எஸ்.ஜே.சூர்யா திட்டமிடுகிறார். போலீஸ் என்கவுண்டரில் இருந்து தப்பிப்பதற்காக, மளிகை கடை நடத்தி வரும் விக்ரமின் உதவியை புருத்விராஜ் நாட, அவரும் சம்மதித்து களமிறங்குக‍றார். பெரியவரின் விசுவாசியாக இருந்த விக்ரம் அவரிடம் இருந்து விலகியது ஏன்?, பெரியவர் குடும்பத்துக்கும் போலீஸ் எஸ்.பி எஸ்.ஜே.சூர்யாவுக்கும் இடையே இருக்கும் பகை, இவற்றில் சிக்கிக்கொண்ட விக்ரம் இந்த பிரச்சனையை எப்படி கையாள்கிறார்? என்பதை அசால்ட்டான ஆக்‌ஷன் காட்சிகள் மூலம் சொல்வதே ‘வீர தீர சூரன் - பாகம் 2’. மனைவி, பிள்ளைகள் என்று குடும்பஸ்தனாக அமைதியாக வாழ்ந்துக் கொண்டிருக்கும் விக்ரம், குடும்பத்திற்காக எந்த எல்லைக்கும் செல்லும் நிலையை வெளிக்காட்டிய விதம், டவுசருடன் காவல் நிலையத்திற்குள் நுழைந்து அட்ராசிட்டி செய்வது ஆகியவற்றில் மிரட்டியிருக்கிறார். விக்ரமின் மனைவியாக வரும் துஷாரா விஜயன், பயம் கலந்த தனது தவிப்கை பதற்றத்துடன் வெளிப்படுத்தி நடிப்பில் ஸ்கோர் செய்கிறார். காவல்துறை அதிகாரியாக நடித்திருக்கும் எஸ்.ஜே.சூர்யா, நடிப்பில் பட்டையை கிளப்பியிருக்கிறார். மகனை காப்பாற்றுவதற்காக போராடும் புருத்விராஜ், போலீஸ் என்கவுண்டரில் இருந்து தப்பிக்க முயற்சிக்கும் சுராஜ் வெஞ்சரமூடு, இவர்களது குடும்ப பெண்கள் என அனைவரும் திரைக்கதைக்கு பலம் சேர்க்கும் வகையில் நடித்திருக்கிறார்கள். ஜி.வி.பிரகாஷின் இசை விறுவிறுப்பாகவும், பாடல்கள் சிறப்பாகவும் உள்ளது. ஒரு இரவில் நடக்கும் சம்பவத்தை வைத்துக்கொண்டு முதல் காட்சி முதல் இறுதிக் காட்சி வரை விறுவிறுப்பாக படத்தை நகர்த்திச் சென்று எதையும் மிகைப்படுத்தி சொல்லாமல், திரைக்கதையில் அனைத்து கதாபாத்திரங்களுக்கும் முக்கியத்துவம் அளித்து  ஒரு மாஸ் கமர்ஷியல் படத்தை கொடுத்திருக்கிறார் இயக்குநர் எஸ்.யு.அருண் குமார்,  மொத்தத்தில், ‘வீர தீர சூரன் - பாகம் 2’ ஒரு ஆக்‌ஷன் விருந்து.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 9 months 1 week ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 9 months 1 week ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 10 months 1 week ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 10 months 1 week ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 3 days ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 3 days ago
View all comments

வாசகர் கருத்து