Idhayam Matrimony

அறம் செய் விமர்சனம்

திங்கட்கிழமை, 31 மார்ச் 2025      சினிமா
Aram-cey-vimarcanam 2025-03

Source: provided

அரசு மருத்துவக் கல்லூரியை தனியாரிடம் ஒப்படைக்கும் அரசின் முடிவைக் கண்டித்து சக மாணவர்களுடன் இணைந்து போராடுகிறார் மருத்துவ மாணவரான நாயகன் பாலு எஸ்.வைத்தியநாதன், இதனால், அவருக்கு பல்வேறு மிரட்டல்கள் வருகிறது.  மறுபக்கம், நாயகி அஞ்சனா கிர்த்தி நாட்டில் அரசியல் மாற்றத்தை ஏற்படுத்தும் முயற்சியில் ஈடுபடுகிறார். இதனால், அவருக்கும் பல்வேறு எதிர்ப்புகள் வருகிறது. கொள்கையில் உறுதியாக நிற்கும் இவர்களின் போராட்டம் வென்றதா?, என்பது தான் படத்தின் கதைக்களம். எழுதி இயக்கி நாயகனாக நடித்திருக்கும் பாலு சமூகத்தில் உள்ள பிரச்சனைகளை விடுத்து சமூகமே பிரச்சனையில் தான் இருக்கிறது என்று படம் முழுக்க பேசியிருக்கிறார்.  போராட்ட காட்சிகளில் முதிர்ச்சியான நடிப்பை வெளிப்படுத்தியிருக்கும்  பாலு அவ்வபோது டூயட் பாடல் பாடி, தான் நாயகன் என்பதை நினைவூட்டுகிறார். ஜாக்குவார் தங்கம், பயில்வான் ரங்கநாதன், பெண் அமைசர்கள் உள்ளிட்ட பலரும் தங்களின் இயல்பான நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார்கள்.  தாதாவாக களமிறங்கியிருக்கும் சன் டிவி சக்தி தனது சிறப்பான நடிப்பை கொடுத்திருக்கிறார். ஸ்ரீகாந்த் தேவாவின் இசையில் பாடல்கள் அனைத்தும் கேட்கும் ரகம். நீட் தேர்வினால் தற்கொலை செய்துகொண்ட அனிதாவையே பேச வைத்திருக்கும் காட்சி பாராட்டும்படி இருக்கிறது. இயக்குனர் பாலு சொல்ல முயற்சித்திருக்கும் கருத்துகள் சமூகத்திற்கு அவசியமானது என்றாலும்,  அதை அழகாக சொல்லி இருந்தால் அறம் வென்றிருக்கும். மொத்தத்தில், அறம் செய் காகிதத்தில் எழுதப்பட்ட சுரைக்காய்

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 9 months 1 week ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 9 months 1 week ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 10 months 1 week ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 10 months 1 week ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 3 days ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 3 days ago
View all comments

வாசகர் கருத்து