Idhayam Matrimony

மியான்மர் பூகம்பத்தில் 700 முஸ்லிம்கள் பலி..?

திங்கட்கிழமை, 31 மார்ச் 2025      உலகம்
Miyanmar 2025-03-31

Source: provided

மண்டாலே : மியான்மரில் கடந்த வெள்ளிக்கிழமை ஏற்பட்ட பயங்கர நிலநடுக்கத்தின்போது பல்வேறு மசூதிகளிலும் தொழுகையில் ஈடுபட்டிருந்த 700 முஸ்லிம்கள் உயிரிழந்ததாக தகவல் வெளியாகியுள்ளது.  

மியான்மரில் கடந்த 28-ம் தேதி பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவில் 7.7 புள்ளிகளாக பதிவான நிலநடுக்கத்தால், மண்டாலே நகரில் பல கட்டிடங்கள் இடிந்தன. அங்கு நிலவும் ராணுவ ஆட்சியால் போதிய வசதிகள் இல்லாமல் மீட்புப் பணி சுணக்கம் கண்டுள்ளது.

இந்நிலையில், கடந்த வெள்ளிக்கிழமை ஏற்பட்ட பயங்கர நிலநடுக்கத்தின்போது பல்வேறு மசூதிகளிலும் ரமலான் நோன்பை ஒட்டி தொழுகையில் ஈடுபட்டிருந்த 700 முஸ்லிம்கள் உயிரிழந்ததாக மியான்மர் ‘ஸ்ப்ரிங் ரெவல்யூஷன் முஸ்லிம் நெட்வொர்க்’ என்ற அமைப்பு தெரிவித்துள்ளது. இருப்பினும், இந்த 700 பேரும் ஏற்கெனவே ராணுவ அரசு அதிகாரபூர்வமாக அறிவித்த 1700+ உயிரிழப்பு கணக்கில் சேர்க்கப்பட்டுள்ளதா இல்லையா என்பது உறுதிப்படுத்தப்படவில்லை. 

அரசு செய்தித் தொடர்பாளர் மேஜர் ஜெனரல் ஜாவ் மின் டுன் அரசுத் தொலைக்காட்சிக்கு அளித்தப் பேட்டியில், “இதுவரை 1,644 சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன. 3,400 பேர் காயமடைந்துள்ளனர். 300 பேரைக் காணவில்லை.” என்றார்.

இதற்கிடையில்,  மியான்மரின் மீட்பு, நிவாரணப் பணிகளுக்காக 8 மில்லியன் டாலர் (6.2 மில்லியன் யூரோ) நிதி தேவைப்படும் என்று கணித்துள்ள ஐ.நா., உலக நாடுகள் தாராளமாக உதவக் கோரியுள்ளது.  மருத்துவமனைகள் போதிய அளவில் இல்லாமல் தெருக்களில் சிகிச்சைகள் நடைபெறுவதும், சடலங்களில் இருந்து வீசும் துர்நாற்றமும் சுகாதார நெருக்கடியையும் ஏற்படுத்தியுள்ளது. இணைய சேவை மற்றும் போன் சேவைகளும் துண்டிக்கப்பட்டுள்ளதால் நிவாரண பணிகளை மேற்கொள்வதில் தடைகள் ஏற்பட்டுள்ளன.

இத்தனை துயரங்களுக்கு இடையில், மியான்மரின் ராணுவ அரசு, அந்நாட்டின் கிளர்ச்சிப் படைகள் மீது வான்வழித் தாக்குதலை தொடர்ந்து வருகிறது கவனிக்கத்தக்கது.

 

 

 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 9 months 1 week ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 9 months 1 week ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 10 months 1 week ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 10 months 1 week ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 3 days ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 3 days ago
View all comments

வாசகர் கருத்து