Idhayam Matrimony

தமிழக அரசியலில் புதிய ட்ரெண்ட்: கிபிலி பாணி ஓவியத்தை பகிர்ந்த இ.பி.எஸ்.

திங்கட்கிழமை, 31 மார்ச் 2025      தமிழகம்
EPS 2025-03-31

Source: provided

சென்னை : காலத்தால் அழியாத கலை வடிவில் மறக்கமுடியா தருணங்களை உருவாக்கியுள்ளதாக கிபிலி பாணி ஓவியங்களைப் பகிர்ந்து சிலாகித்துள்ளார் அ.தி.மு.க. பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி.

பேஸ்புக், இன்ஸ்டாகிராம், ட்விட்டர் என எங்கும் நீக்கமற பரவிக் கிடக்கிறது ஸ்டூடியோ கிபிலி பாணியில் சமூகவலைதள பயன்பாட்டாளர்கள் உருவாக்கிக் கொண்ட புகைப்படங்கள். செல்பி எடுத்து அதை கிபிலி பாணி இமேஜாக மாற்றுவது தொடங்கி வீட்டின் செல்லப் பிராணி படம் வரை இந்த பாணியில் ஜெனரேட் செய்து ட்ரெண்டாக்கி வருகின்றனர் நெட்டிசன்கள்.

இந்நிலையில் தமிழக அரசியல் வட்டாரத்தில் எடப்படி பழனிசாமி அந்த ட்ரெண்டை பின்பற்றியுள்ளார். ஸ்டூடியோ கிபிலி பாணியில் தனது அரசியல் பயணத்தில் சில தருணங்களை ஜெனரேட் செய்து எக்ஸ் தளத்தில் அவர் பகிர்ந்துள்ளார்.

கூடவே, “தமிழகத்தின் இதயத்திலிருந்து ஸ்டூடியோ கிபிலி உலகத்துக்கு - எனது மறக்கமுடியாத தருணங்களை காலத்தால் அழியாத கலை வடிவில்’ என்று சிலாகித்துப் பதிவிட்டுள்ளார். அவருடைய இந்தப் பதிவு நெட்டிசன்கள் கவனத்தை ஈர்த்துள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 9 months 1 week ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 9 months 1 week ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 10 months 1 week ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 10 months 1 week ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 3 days ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 3 days ago
View all comments

வாசகர் கருத்து