Idhayam Matrimony

நிலநடுகத்தால் கடுமையாக பாதிக்கப்பட்ட மியான்மரில் குடிநீர், மின்சாரம் இல்லாமல் மக்கள் தவிப்பு

திங்கட்கிழமை, 31 மார்ச் 2025      உலகம்
Miyanmar-1 2025-03-31

Source: provided

மண்டலே : நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட  மியான்மரில் மீட்பு பணிகள் தீவிரம் அடைந்துள்ளன. இதனிடையே குடிநீர், மின்சாரம் இல்லாமல் மக்கள் தவித்து வருகின்றனர்.

மியான்மர் மற்றும் தாய்லாந்தில் கடந்த வெள்ளிக்கிழமை உலுக்கிய நிலநடுக்கத்தில் சிக்கி உயிர் இழந்தவர்களின் எண்ணிக்கை 1,700 ஐ கடந்து 2 ஆயிரத்தை நெருங்கி வருகிறது. சுமார் 3,400 பேர் காயமடைந்துள்ளனர்.  தொடர்ந்து அடுத்தடுத்து நிலநடுக்கம் ஏற்பட்டு வருவதால் பொதுமக்கள் பீதி அடைந்துள்ளனர். கட்டிட இடிபாடுகளுக்குள் சிக்கியவர்களை மீட்கும் பணி 3 நாட்களை கடந்தும் தொடர்ந்து நடந்து வருகிறது. படுகாயங்களுடன் மீட்கப்பட்ட 3 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் சிகிச்சைக்காக ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர்.

 மியான்மரின் 2-வது பெரிய நகரமாக விளங்கும் மண்டலே முற்றிலும் உருக்குலைந்து காணப்படுகிறது. இங்கு தான் ஏராளமானவர்கள் உயிரிழந்து உள்ளனர். இதனால் இந்த நகரத்தில் எங்கு பார்த்தாலும் மரண ஓலம் நிர்மபி சவக்கிடங்காக காட்சி அளித்து வருகிறது. நகரத்தில் மட்டுமே தற்போது மீட்பு பணிகள் நடந்து வருகிறது. கிராமப்புற பகுதிகளுக்கு மீட்பு படையினர் செல்வதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. இதனால் பலி எண்ணிக்கை மேலும் உயரும் என அஞ்சப்படுகிறது.

இது ஒருபுறம் இருக்க மறுபுறம் பொதுமக்கள் குடிநீர்- மின்சார வசதிகள் இல்லாமல் தவித்து வருகின்றனர். தொலைதொடர்பு சேவைகள் துண்டிக்கப்பட்டு உள்ளது. பாலங்கள், ரோடுகள் அனைத்தும் சின்னாபின்னமாகி கிடக்கின்றன. பெரும்பாலான இடங்களில் மின்சாரம் துண்டிக்கப்பட்டு உள்ளதால் அவை இருளில் மூழ்கி கிடக்கின்றன. இதனால் மீட்பு பணியிலும் தொய்வு ஏற்பட்டுள்ளது. குடிநீர் கிடைக்காமல் பொதுமக்கள் அல்லாடி வருகின்றனர். ஏராளமானவர்கள் நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டு உள்ளனர்.

நிலநடுக்கத்தால் கடுமையாக பாதிக்கப்பட்ட மியான்மருக்கு இந்தியா, சீனா, ரஷியா, மலேசியா, வியட்நாம் உள்ளிட்ட நாடுகள் உதவிக்கரம் நீட்டி உள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 9 months 1 week ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 9 months 1 week ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 10 months 1 week ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 10 months 1 week ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 3 days ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 3 days ago
View all comments

வாசகர் கருத்து